Viral video: ராஜ நாகத்தை ஆக்கிரோஷமாக தாக்கும் கீரி; இறுதியில் வெற்றி யாருக்கு?

King Cobra Vs Mongoose: கீரியின் உடலில் இயற்கையாகவே விஷ எதிர்ப்பு சக்தி உள்ளதால், பாம்பு கொத்தினால், கீரியின் உடலில் காயங்கள் தான் ஏற்படுமே தவிர, அது சாகாது என்று கூறுவார்கள்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 14, 2022, 07:03 PM IST
  • கீரியின் உடலில் இயற்கையாகவே விஷ எதிர்ப்பு சக்தி உள்ளது.
  • பாம்பு கொத்தினால், கீரியின் உடலில் காயங்கள் தான் ஏற்படுமே தவிர, அது சாகாது.
  • பாம்புக்கும் கீரிக்கும் இடையிலான ஆக்கிரோஷமான சண்டை தொடர்பான காணொளி.
Viral video: ராஜ நாகத்தை ஆக்கிரோஷமாக தாக்கும் கீரி; இறுதியில் வெற்றி யாருக்கு? title=

பாம்பு என்ற பெயரைக் கேட்டாலே படையே நடுங்கும். அதிலும் ராஜ நாகம் என்பது மிகவும் ஆபத்தான, அதிக விஷம் கொண்ட பாம்பாக கருதப்படுகிறது. இருப்பினும், சில மனிதர்கள் பாம்பை பிடிக்கும் பணியில் இருக்கார்கள் என்பதும் உண்மை தான். அதே போல் பாம்பைக் கட்டுப்படுத்தக்கூடிய பல விலங்குகள் உள்ளன. சில விலங்குகள் பாம்புகளை தங்களுக்கு இரையாக ஆக்குகின்றன. அதில் முக்கியமான ஒன்று கீரி. கீரியின் உடலில் இயற்கையாகவே விஷ எதிர்ப்பு சக்தி உள்ளதால், பாம்பு கொத்தினால், கீரியின் உடலில் காயங்கள் தான் ஏற்படுமே தவிர, அது சாகாது என்று கூறுவார்கள்.

பொதுவாக பாம்பு கீரி சண்டையில் பாம்பை கீரி கொன்றுவிடும். பாம்பு படம் எடுத்து கீரியை தாக்கி களைத்துப் போன பின், சோர்வாக உள்ள பாம்பின் தலையை கடித்து கீரி கொன்றுவிடும். இந்நிலையில் பாம்புக்கும் கீரிக்கும் இடையிலான ஆக்கிரோஷமான சண்டை தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

வைரல் வீடியோவை இங்கே பாருங்கள்:

இந்த வீடியோவில், ராஜநாகமும் கீரியும் ஆக்கிரோஷமாக சண்டையிடுவதைக் காணலாம். இரண்டுமே விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்பதை  காணலாம். ஒரு அறைக்குள் ஒரு நாகப்பாம்பு மற்றும் கீரி இருப்பதை காணலாம். இரண்டுமே மோதல் மனநிலையில் இருப்பதால் பரஸ்பரம் தாக்க கடுமையாக முயற்சித்து வருகின்றனர். பாம்பும் கீரியும் ஒன்றுக்கொன்று எதிரிகள் என்பது அனைவரும் அறிந்ததே.

மேலும் படிக்க |  Viral Video: மலைப்பாம்பிடம் சிக்கிய முதலை... திக் திக் நிமிடங்கள்

இரண்டும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்பதை காணொளியைப் பார்த்தாலே தெரிந்திருக்கும். இரண்டும் சண்டை போட்டுக்கொண்டு அறையிலிருந்து திறந்த மைதானத்தை நோக்கி நகரத் தொடங்குகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், யார் வெற்றி பெறுவார்கள் என்ற எண்ணமும் நமக்கு தோன்றுகிறது. இந்த போராட்டத்தில், யார் வென்றார்கள் என்பதை கணிக்க இயலவில்லை.

இந்த வீடியோ சமூக ஊடக தளமான யூடியூப்பில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ அதிக அளவில் பார்க்கப்பட்டது. இதுமட்டுமின்றி, பல பயனர்கள் (சமூக ஊடக பயனர்கள்) வீடியோவை மிகவும் விரும்பியுள்ளனர். 

மேலும் படிக்க | Viral Video: அப்படி என்ன தான் சாப்பிட்டீங்க சார்... போதையில் ‘தள்ளாடும்’ அணில்!

மேலும் படிக்க | Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News