Watch Viral Sukhoi: தேசிய நெடுஞ்சாலையில் தரையிறங்கிய சுகோய் போர் விமானம்

ராஜஸ்தானில் உள்ள தேசிய நெடுஞ்சாலை NH925A யில் இந்திய விமானப்படையின் சுகோய் போர் விமானம் தரையிறங்கி சாதனை படைத்தது.   

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 9, 2021, 02:39 PM IST
  • சுகோய் போர் விமானம் நெடுஞ்சாலையில் தரையிறங்கியது
  • போர் விமானத்தில் மத்திய அமைச்சர்கள் இருந்தனர்
  • அவசரகாலங்களில் போர் விமானங்களை தரையிறக்குவதற்கான பயிற்சி இது
Watch Viral Sukhoi: தேசிய நெடுஞ்சாலையில் தரையிறங்கிய சுகோய் போர் விமானம்   title=

ராஜஸ்தானில் உள்ள தேசிய நெடுஞ்சாலை NH925A யில் இந்திய விமானப்படையின் சுகோய் போர் விமானம் தரையிறங்கி சாதனை படைத்தது.   

சுகோய் சு -30 எம்.கே.ஐ போர் விமானம், இந்திய விமானப்படையின் (IAF) மகுடமாக திகழ்கிறது. இந்த போர் விமானம் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலையில் தரையிறங்குவது இதுவே முதல் முறையாகும்.

இந்த சாதனை செப்டம்பர் 9 வியாழக்கிழமை ராஜஸ்தானின் ஜாலூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் (national highway) இந்த அவசரகால தரையிறக்க நடவடிக்கை நிகழ்த்தப்பட்டது.  இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

சுகோய் போர் விமானம் மட்டுமின்றி, சிஏ -130 ஜே சூப்பர் ஹெர்குலஸ் போக்குவரத்து விமானத்தை ஜலூரில் உள்ள அவசரகாலத்தில் தரையிறங்கும் பகுதியில் (Emergency Landing Field) ஐஏஎஃப் தரையிறக்கியது. போக்குவரத்து விமானத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சாலை போக்குவரத்து அமைச்சர், ஏர் சீஃப் மார்ஷல் ஆர்.கே.எஸ் பதவுரியா ஆகியோர் இந்த விமானத்தில் பயணித்தனர்.  

READ ALSO | Glad News for Women: NDA-வில் இனி பெண்களும் சேரலாம் - உச்சநீதிமன்றம்

தேசிய நெடுஞ்சாலையில் (NH) 925A, ராஜஸ்தானின் பார்மேரில் உள்ள சத்தா-காந்தவ் பகுதியில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் நிதின் கட்கரி ஆகியோர் அவசரகாலத்தில் தரையிறங்கும் வசதியைத் தொடங்கிவைத்தனர். அப்போது, அவசரகாலத்தில் எப்படி செயல்படுவது என்பதை இந்திய விமானப்படையினர் செய்துக் காட்டினர்.  

NH925 இல் சத்தா-காந்தவ் பிரிவில் 3 கிலோமீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலையை, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) உருவாக்கியது. இந்திய விமானப்படை (IAF) அவசரகால வசதியாகப் (emergency facility) பயன்படுத்துவதற்காக இந்த நெடுஞ்சாலை உருவாக்கப்பட்டது.

பல்வேறு ஐஏஎஃப் விமானங்கள் லக்னோ-ஆக்ரா எக்ஸ்பிரஸ்வேயில் அவசரமாக தரையிறங்கும் பகுதியில் தரையிறக்க பயிற்சிகளை நிகழ்த்தின. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவு நெடுஞ்சாலைகளில் அவசரகாலத்தில் தரையிறக்கும் சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதற்காக இந்த பயிற்சியை இந்திய விமானப்படை மேற்கொண்டது.  

READ ALSO | COVID Chandelier: காலி கோவிட் தடுப்பூசி குப்பிகளில் இருந்து தயாரிக்கப்பட்ட சரவிளக்கு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News