Viral Video: குரங்குக்கு குசும்பு கொஞ்சம் ஓவர் தான்... தவளையை சீண்டும் குரங்குகள்... கடுப்பில் சத்தமிடும் தவளை!

குரங்குகள் மனநிலையை கணிப்பது கடினம். அவை என்ன செய்ய போகின்றன என்பது என்றுமே புரியாத புதிர். அதனால் தான், கணிக்க முடியாத அளவிற்கு பயங்கரமாக குறும்பு செய்யும் குழந்தைகளை பார்த்து குரங்கு சேட்டை என்று பெரியவர்கள் கூறுவார்கள்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 8, 2023, 01:13 PM IST
  • குரங்கு சேட்டைகளை ரசிக்கும் இணைய பயனர்கள் ஏராளம்.
  • தவளையை சீண்டும் குரங்கின் சேட்டை வீடியோ
  • குரங்குகள் மனநிலையை கணிப்பது கடினம்.
Viral Video: குரங்குக்கு குசும்பு கொஞ்சம் ஓவர் தான்... தவளையை சீண்டும் குரங்குகள்... கடுப்பில் சத்தமிடும் தவளை! title=

சமூக ஊடகத்தில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம். விலங்குகளின் வேட்டை என்றாலும் சரி, விலங்குகளின் சேட்டைகள் என்றாலும் சரி அதனை நாம் ரசித்து அனுபவிக்கலாம். அதிலும் குரங்கு சேட்டைகளை ரசிக்கும் இணைய பயனர்கள் ஏராளம். அந்த வகையில், குரங்கு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. குரங்குகள் மனநிலையை கணிப்பது கடினம். அவை என்ன செய்ய போகின்றன என்பது என்றுமே புரியாத புதிர். அதனால் தான், கணிக்க முடியாத அளவிற்கு பயங்கரமாக குறும்பு செய்யும் குழந்தைகளை பார்த்து குரங்கு சேட்டை என்று பெரியவர்கள் கூறுவார்கள்.  அந்த வகையில் சும்மா இருக்கும் தவளையை சீண்டும்  குரங்கின் சேட்டை வீடியோ வைரலாகி வருகிறது.

வீடியோவில் தவளை ஒன்று அமைதியாக ஓரமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறது. அதனை மைக் டெஸ்டிங் செய்வதை போல, அதனை தொட்டு சுரண்டு, அது சத்தம் போடுவதை பார்த்து விலகுகிறது. வீடியோவில் காணப்படும் இரு குரங்குகளும் இதே வேலையை தான் செய்கின்றன.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த குரங்கின் வீடியோ Testing the frog என்ற தலைப்பில் Buitengebieden (@buitengebieden) என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது.  வெளியான ஒரு நாளிலேயே ட்விட்டரில் 4.6 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். குரங்கின் சேட்டையை கண்டு மகிழ்ந்து பலர் ஆச்சரியப்பட்டு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

வைரலாகும் சேட்டை குரங்கின் வீடியோ:

 

 

சில நாட்களுக்கு முன் இதே போல வைரலான நாய் வீடியோவில், நாய் ஒன்று பூனைக்குட்டியின் எதிரே உள்ளதை காண்லாம். இரண்டு செல்ல பிராணிகள் என்பதையும் நாம் எளிதாக புரிந்து கொள்ளலாம். அதில் நாய்க்கும் பூனை குட்டிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதல் மிகவும் சுவாரஸ்யமானது. முதலில் இரண்டு இடையே ஏதோ மோதல் வெடித்த நிலையில், நாயும் பூனையும் கட்டிப் புரளுகின்றன. ஆனால், நாய் என்ன நினைத்ததோ, உடனை தன்னை விடுவித்துக் கொண்டு, மிக வேகமாக சுழலுகிறது. அதனை பார்த்த பூனை புரியாமல் குழம்புகிறது. சமூக வலைதளத்தில் வைரலாகும் நாய் குட்டி - பூனைக்குட்டி வீடியோவைக் கீழே உள்ள இணைப்பில் காணலாம். 

இணைய உலகம் பல வித அதிசயங்களையும் அற்புதங்களையும் தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகம். இங்கு பல விதமான அரிய விஷயங்களை பற்றி நாம் தெரிந்து கொள்கிறோம். சுருக்கமாக கூற வேண்டும் என்றால், இது தகவல்களின் களஞ்சியமாக விளங்குகிறது. இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன், மன அழுத்தத்தை போக்கும் கேளிக்கைக்கான ஒரு அம்சமாகவும் உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 

மேலும் படிக்க | Viral Video: கில்லாடிம்மா நீ... சண்டையிட்ட பூனைக்குட்டியை குழப்பிய நாய் 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News