உலகிலேயே மிகவும் ஆபத்தான 5 நாய்கள்

மனிதர்களின் சிறந்த நண்பனாக பார்க்கப்படும் நாய்களில் சில இனங்கள் மிகவும் ஆபத்தானவை. கொஞ்சம் அசந்தாலும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. 

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 20, 2022, 03:10 PM IST
  • உலகிலேயே மிகவும் ஆபத்தான நாய்கள்
  • கொஞ்சம் அசந்தால் உயிருக்கு ஆபத்து
  • ஆபத்தான நாய் இனங்கள் இவைதான்
உலகிலேயே மிகவும் ஆபத்தான 5 நாய்கள்  title=

Most Dangerous Dog Breeds: அண்மையில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் கடித்து 82 வயது ஓய்வுபெற்ற ஆசிரியை உயிரிழந்தார். அவருடைய மகன் வளர்த்து வந்த பிட்புல் நாய், திடீரென ஓய்வு பெற்ற ஆசிரியையை கடித்துக் கொன்றது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும், ஆபத்தான நாய்கள் எவை என்பதை தெரிந்து கொள்ள மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். அந்தவகையில் உலகிலேயே மிகவும் ஆபத்தான நாய்களின் பட்டியலை தெரிந்து கொள்வோம். 

ரோட்வீலர்
(Rottweiler)

ரோட்வீலர் உலகின் மிகவும் ஆபத்தான நாய் இனங்களில் ஒன்றாகும். இந்த நாயின் உடல் தடிமனாகவும், தாடைகள் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும். இந்த இனத்தின் நாய்களுக்கு மற்ற நாய்களை பிடிக்கவே பிடிக்காது. ரோட்வீலர்கள் சிறிய ஆபத்தை உணர்ந்தாலும், தாக்குவதற்கு தொடங்கிவிடும். கோபம் வந்துவிட்டால், யாரையும் தாக்குவதற்கு துளியும் தாமதிக்காது.

மேலும் படிக்க | ரோஜா கொடுத்து ப்ரபோஸ் செய்த முதியவர்: இணையத்தை இளக வைத்த வைரல் வீடியோ

பிட் புல்
(Pitt Bull)

அடுத்ததாக, உலகின் மிகவும் ஆபத்தான நாய்களில் பிட்புல்ஸும் ஒன்று. பிட்புல் இன நாய்கள் ஆக்ரோஷமான அணுகுமுறைக்கு பெயர் பெற்றவை. இவை மிகவும் ஆபத்தானவை. இந்த இன நாய்களை நம்புவது சரியல்ல. இருப்பினும், தங்கள் உரிமையாளர்களுடன் விசுவாசமாகவும், நட்பாகவும், நம்பிக்கையுடனும் இருக்கும். ஆனால், எப்போது தாக்கும் என்றெல்லாம் கூறவே முடியாது. 

ஜெர்மன் ஷெப்பர்ட்
(German Shepherd)

 
இந்த நாய் இனம் ஜெர்மனியைச் சேர்ந்தது. பெரும்பாலான மக்கள் ஜெர்மன் ஷெப்பர்டை விரும்புகிறார்கள். இந்த இனத்தின் நாய்கள் தங்கள் வலிமை மற்றும் அச்சமின்மைக்காக உலகம் முழுவதும் அறியப்படுகின்றன. ஜெர்மன் ஷெப்பர்ட்கள் நட்பாக இருப்பது போலவே, ஆபத்தானவையும் கூட. சிறிய ஆபத்தைக் உணர்ந்தாலும் தாக்க ஆரம்பித்துவிடும். மிகவும் சுறுசுறுப்பாகவும், வேகமாகவும் இருக்கும்.

சவ் சவ்
(Chow Chow)

சீனாவில் காணப்படும் சவ்-சவ் நாய்கள் தோற்றத்தில் மிகவும் அமைதியானவை. ஆனால் இந்த இனத்தின் நாய்கள் மிகவும் ஆபத்தானவை. இதுவும் உலகின் மிகவும் ஆபத்தான நாய்களில் ஒன்றாகும். அவற்றின் சம்மதமின்றி யாரும் அருகில் செல்ல முடியாது. மீறினால் உங்கள் நிலைமை கஷ்டம் தான்.

பெர்சா கனேரியோ
(presa canario)

உலகில் உள்ள நாய்களில் மிகவும் ஆபத்தான இனங்களில் ப்ரெசா கனாரியோவும் ஒன்று. ஆப்பிரிக்காவில் காணப்படும் இந்த வகை நாய்களின் எடை மனிதர்களின் எடைக்கு சமம். இது 60 கிலோ வரை இருக்கும். அவை மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படுகின்றன. யாரையாவது தாக்கினால், தப்பிப்பது மிகவும் கடினம்.

மேலும் படிக்க | சேட்ட பண்ணுவியா? அம்மாவின் ஒரே அடியில் பம்மிய பூனைக்குட்டி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News