Viral Video: கில்லாடிம்மா நீ... புலிக்கு தண்ணி காட்டிய வாத்து... மூக்கில் விரல் வைத்த நெட்டிசன்ஸ்!

Viral Video of Tiger Vs Duck: வல்லவன் வாழ்வான் என்ற தத்துவம் சிறப்பாக பொருந்தும் வாழ்க்கை காட்டு வாழ்க்கை. வல்லமை என்பது உடல் வலிமை மட்டுமல்ல புத்தி கூர்மையும் கூட. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 13, 2023, 07:13 PM IST
  • புலிகள் தங்கள் இரையை மிகவும் துல்லியமாக பதுங்கி தாக்கும் திறன் பெற்றவை.
  • வாத்து புத்திசாலித்தனமாக புலியை ஏமாற்றி தப்பிக்கிறது.
  • சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ.
Viral Video: கில்லாடிம்மா நீ... புலிக்கு தண்ணி காட்டிய  வாத்து... மூக்கில் விரல் வைத்த நெட்டிசன்ஸ்! title=

வல்லவன் வாழ்வான் என்ற தத்துவம் சிறப்பாக பொருந்தும் வாழ்க்கை காட்டு வாழ்க்கை. வல்லமை என்பது உடல் வலிமை மட்டுமல்ல புத்தி கூர்மையும் கூட.  இதனை நிரூபிக்கும் வகையில், இரையாக போவதை தவிர்ப்பதில் வாத்து காட்டும் சமயோஜித தன்மையை காட்டும் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ கூடவே வன வாழ்க்கையில் உண்மை நிலையை நமக்கு எடுத்து காட்டுகிறது. காட்டில் உயிர்வாழ்வதற்கு எச்சரிக்கை, விழிப்புணர்வு மற்றும் சமயோஜித புத்தி ஆகிய அனைத்தும் தேவைப்படுகிறது.

தற்போது  சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில் தண்ணீரில் நீந்தி செல்லும் வாத்து ஒன்றை குறி வைத்து, அதனை இரையாக்க புலி மெல்ல மெல்ல நெருங்கி வருவதைக் காணலாம். அதனை இலகுவான இரையாக கருதி புலி அணுகும் அதே வேளையில், தனது புத்தி கூர்மை காரணமாக, அதனிடம் இருந்து எளிதாக தப்பிக்கிறது வாத்து. புலி எந்த விலங்கையாவது இரையாக்க நினைத்தால், அதனை கொன்ற பிறகு தான் அமைதி அடையும். இந்த வீடியோவிலும் (Viral Video) வாத்தை பார்த்ததும், புலி மிக ஆர்வமுடன் நீரில் நீந்தி வருவதை நீங்கள் காணலாம். அதன் மீது பாயவும் தயாராக இருக்கிறது. ஆனால், கில்லாடி வாத்து, புலிக்கு தண்ணி காட்டி விட்டது. 

புலி - வாத்து வேட்டை வீடியோவை  இங்கே கணலாம்: 

நாம் வாத்து புலிக்கு இரையாகி விடும் என எண்ணிய நிலையில்,  வாத்து புத்திசாலித்தனமாக அதனை ஏமாற்றி தப்பிக்கிறது. தண்ணீருக்கும் ஒளிந்து கொண்டு வித்தை காட்டு வாத்தை புலி குழப்பம் அடைந்து தேடுவதையும் நீங்கள் காண்பீர்கள். தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, ​​வாத்து அந்த இடத்திலிருந்து சாதுரியமாக தப்பிச் செல்கிறது. வாத்து தண்ணீருக்குள் மூழ்கி, புலியின் பின் பக்கம் வழியாக தண்ணீரில் இருந்து வெளியே வந்து தப்பித்து விடுகிறது. இந்த  வீடியோ  Buitengebieden @buitengebieden என்ற ட்விட்டர் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த காட்சியை லட்சக்கணக்கானோர் பார்த்து ரசித்துள்ளனர்.

மேலும் படிக்க | Viral Video: தோகை விரித்து ஆடி காதலியை கவர போராடும் ஆண் மயில்... மசியாத பெண் மயில்!

காடுகளில், புலிகள் தங்கள் சுற்றுப்புறம் மற்றும் அவர்கள் சந்திக்கும் இரையின் வகையைப் பொறுத்து பல்வேறு வேட்டை நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன. புலிகள் தங்கள் இரையை மிகவும் துல்லியமாக பதுங்கி தாக்கும் திறன் பெற்றவை. அவற்றின் சக்தி வாய்ந்த தசைகள், கூர்மையான நகங்கள் மூலம் வல்லமையாக வேட்டையாடுபவை. இரையை தாக்குவதற்கான சரியான தருணம் எழும் வரை பொறுமையாக தன்னை சுற்றி நடப்பதை அவதானிக்கும் திறன் பெற்றவை. அப்படிப்பட்ட புலியையே, வாத்து தண்ணி காட்டிய விதம் இணைய வாசிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | பாம்புடன் விளையாடும் பாப்பா: இணையத்தை பதற வைத்த பகீர் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

Trending News