பிப்ரவரியில் செவ்வாய்ப் பெயர்ச்சி! அடுத்த மாதம் முதல் அடி தூள் கிளப்பப் போகும் 3 ராசிகள்!

Mangal Gochar 2024: பிப்ரவரியில் செவ்வாய் மகர ராசியில் நுழையப் போகிறது. இது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 8, 2024, 03:58 PM IST
  • சொத்தில் முதலீடு செய்யப்போகும் ராசி
  • பண வரவால் மனம் மகிழும் ராசி
  • உத்யோகத்தில் உயர்வு பெறும் ராசிக்காரர்
பிப்ரவரியில் செவ்வாய்ப் பெயர்ச்சி! அடுத்த மாதம் முதல் அடி தூள் கிளப்பப் போகும் 3 ராசிகள்! title=

Mars Transit 2024: ஒவ்வொரு கிரகமும் அதன் குறிப்பிட்ட நேரத்தில் மாறுகிறது. 2024 ஆம் ஆண்டில், பல பெரிய கிரகங்களின் சஞ்சாரங்கள் நடைபெறவிருக்கின்றன. பிப்ரவரியில் செவ்வாய் மகர ராசியில் நுழையப் போகிறது. இது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதிலும் மங்கலகாரகரான செவ்வாய் சஞ்சாரம் பலருக்கும் பல்வேறுவிதமான பிரச்சனைகளையும் கொடுப்பார் என்றாலும், சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும் கொடுக்கிறார்.  

12 ராசிக்காரர்களின் வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்தும் நவகிரகங்கள், சில சமயங்களில் அசுபமான விளைவுகளையும் கொடுக்கின்றன. 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது மாதமான பிப்ரவரியின் 5 ஆம் தேதி, செவ்வாய் கிரகம் பெயர்ச்சி அடைகிறது. மகர ராசியில் செவ்வாய் நுழைவதால் மூன்று ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.

செவ்வாய் ஆற்றல், தைரியம், வீரம், சக்தி, நிலம் மற்றும் வீரம் போன்றவற்றுக்கு காரணமான கிரகமாக கருதப்படுகிறது. செவ்வாய் எந்த ராசியில் சஞ்சரிக்கிறாரோ அந்த ராசிக்காரர்களுக்கு தைரியமும் வலிமையும் அதிகம் ஏற்படும். பிப்ரவரியில் ராசி மாறும் செவ்வாய் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் தரப்போகிறார் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | சனிப்பெயர்ச்சி... பாடாய் படுத்தும் சனி பகவானை மகிழ்விக்க ‘சில’ எளிய பரிகாரங்கள்!
 
மேஷம்

ஜோதிட சாஸ்திரப்படி, மேஷ ராசிக்காரர்கள் செவ்வாய் சஞ்சாரத்தால் பல சுப பலன்களைப் பெறுவார்கள். தொழிலில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் உங்கள் பணிக்கு ஊக்கம் கிடைக்கும். குடும்பத்தில் அனைவரும் உங்களுக்கு கிடைக்கும் பாராட்டைப் பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள். பொருளாதார நிலை மேம்படும் எனபதால், செவ்வாய் பெயர்ச்சி சுபமாக இருக்கும்..

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கும் செவ்வாய்ப் பெயர்ச்சி சிறப்பான பலன்களைக் கொடுக்கும். தொழிலில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. பிப்ரவரி மாதம் நிதி பலம் தரும். வியாபாரத்தில் இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கும். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். செவ்வாயின் ராசி மாற்றத்தால் புதிய வாகனம், வீடு வாங்கும் யோகம் உண்டாகும். சொத்தில் முதலீடு செய்யலாம்.  

துலாம்

ஜோதிட சாஸ்திரப்படி துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய்ப் பெயர்ச்சி சுப பலன்களைக் கொடுக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கும் சிறப்பான பலன்கள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வீர்கள். சுற்றுலா செல்லும் வாய்ப்புகளும் இருக்கின்றன. ஆனால், இந்த காலகட்டத்தில் செலவுகள் அதிகரிக்கும், அது சுப செலவாக இருக்கலாம். உறவினர்களிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது)

மேலும் படிக்க | நீங்கள் ஜனவரி மாதம் பிறந்தவரா? அப்போ உங்கள் குணம் இப்படித்தான் இருக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News