ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. ஆடிப்பெருக்கன்று நதிகளை வழிபடுவதன் மூலம் நீர்வளம் பெருகும் என்பது நம்பிக்கை. மேலும், திருமணமான பெண்கள் மாங்கல்ய பலத்திற்காகவும், திருமணமாகாத பெண்கள் மனதிற்கு பிடித்த கணவரை மணக்க வேண்டும் என வேண்டி கொண்டு, இந்த ஆடிப்பெருக்கு நாளில் அம்பிகையை வனங்கி பூஜிப்பது வழக்கம். ஆடிப்பெருக்கு நாளில் மேற்கொள்ளும் செயல்கள் பல்கி பெருகும் என்பது ஐதீகம். ஆடிப்பெருக்கன்று விரதம் இருந்து இறைவனை வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
ஆடிப்பெருக்கு அன்று கல் உப்பு வாங்கி வந்து வீட்டில் இருக்கும் பீங்கான் ஜாடியில் முழுவதுமாக தழும்ப நிரப்பி வைக்க வேண்டும். அது போல குண்டு மஞ்சளும் ஆடிப்பெருக்கு அன்று வாங்க வேண்டிய முக்கிய பொருளாகும். இதனால் செல்வம் பெருகும். தடைகள் நீங்கி வாழ்வில் மங்கலம் உண்டாகும் என்பது நம்பிக்கை.
கிராம பகுதிகளில் இதனை ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றும் வழிபடுகின்றனர். நல்ல மழை பெய்து ஆறுகள் புது வெள்ளம் பெருகி ஒடி வரும் நிலையில், இந்த நாளில் நதிகளை வணங்கி புனித நீராடுவார்கள்.
மேலும் படிக்க | Astro: ஏழரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்
ஆடி மாதம் 18ம் நாளான ஆடிப்பெருக்கு நாளில் நதிக்கரையோரம், மக்கள் நதிக்கு ஆரத்தி எடுத்து வணங்கி, பூக்களைத் தூவி பூஜிப்பார்கள். தென் மேற்கு பருவமழை தொடங்கும் இந்த காலத்தில் பொங்கி பெருகி பாயும் நதிகளை தெய்வமாக வணங்கி வழிபடுவர். ஆடி 18-ம் நாளில் பெருகி வரும் புது வெள்ளத்தை வணங்கினால் பயிர்கள் செழிக்கும், விவசாயத்திற்கு தேவையான நீர்வளம் குறைவின்றி கிடைக்கும் என்பது உண்மை.
அதனாலேயே விவசாய பெருமக்கள் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பார்கள். நதியை வழிபடுவது பன்னெடுங்காலமாய் இருந்து வரும் வழக்கம். தமிழகத்தில், குறிப்பாக ஆடி பெருக்கு எனும் பதினெட்டாம் நாள் பெருக்கு அன்று நதிகள் கரைபுரண்டு ஓடும். அந்த நாளில் புதுவெள்ளம் ஓடும் நதிகள் தம்மை வணங்கும் பெண்களுக்கு நல்ல கணவனையும், கணவனின் நலத்தை காப்பாள் என்று வணங்குகின்றனர்.
இதற்காகவே ஆடிபெருக்கு அன்று சுமங்கலிகளும், கன்னி பெண்களும் நாதிகளின் படித்துறை தோறும் புத்தாடை அணிந்து பொங்கி வரும் நதியை வணங்கி, அவளை அலங்கரிக்கும் பொருட்களை சமர்பிக்கின்றனர்.
ஆடிபெருக்கு பூஜையில், காவிரி அன்னையை கர்ப்பிணியாக பாவித்து, காதோலை, கருகுமணி, பூமாலை, வளையல், தேங்காய், பழம், வெல்லம் வைத்து வணங்குவார்கள்.
மேலும் படிக்க | நீதி தேவன் சனி பகவானின் அருளை முழுமையாக பெறும் ‘3’ ராசிகள்
மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ