Astro Traits: அறிவும் அதிர்ஷ்டமும் நிறைந்த ‘சில’ நட்சத்திரங்கள்!

இந்து மதத்தில் பிறந்த நட்சத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ராசிகளைப் போலவே, நட்சத்திரத்தை வைத்து, ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவரது தன்மைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 28, 2022, 05:30 PM IST
  • குறைவான பேச்சு நிறைவான வேலை இவர்களது சிறப்பு.
  • வசீகரமான கண்கள் மற்றும் முகத்தில் வசீகரமான புன்னகை கொண்டவர்கள்.
  • நேர்மறையான சிந்தனை, செய்யும் செயலில் ஈடுபாடு ஆகியவை இருக்கும்.
Astro Traits: அறிவும் அதிர்ஷ்டமும் நிறைந்த ‘சில’ நட்சத்திரங்கள்! title=

பொதுவாக வீட்டில் குழந்தை பிறந்தால் எந்த நட்சத்திரத்தில் குழந்தை பிறக்கிறது என்று பார்ப்பது வழக்கம். குழந்தை பிறக்கும் நட்சத்திரம் மிகவும் முக்கியமானது. நட்சத்திரத்தின் மூலம் வாழ்க்கை, குறிக்கோள்கள் மற்றும் ஆளுமை தொடர்பான விஷயங்களை அறிந்து கொள்ளலாம். சில நட்சத்திரங்கள் மிகவும் அதிர்ஷ்டம் நிறைந்தவர்களாகவும், அறிவுத் திறமை படைத்தவர்களாகவும் இருப்பார்கள் என கூறப்படுகிறது. மற்றவற்றிலிருந்து வேறுபட்டு நிற்கும் 4 நட்சத்திரங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

ஜோதிடத்தில் பிறந்த நட்சத்திரத்தின் முக்கியத்துவம் விளக்கப்பட்டுள்ளது. வேத ஜோதிடத்தில், அறிஞர்கள் ராசியை 27 வெவ்வேறு நட்சத்திரங்களாக பிரித்துள்ளனர். இதில் 4 நட்சத்திரங்களில் பிறந்த குழந்தைகள் அதிர்ஷ்டசாலிகள் என்று கூறப்படுகிறது.

அஸ்வினி 

அஸ்வினி நட்சத்திரம் ராசியின் முதல் நட்சத்திரமாக உள்ள நிலையில், மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நக்ஷத்திரத்தில் பிறந்த குழந்தைகள் கூர்மையான அறிவாற்றல், கண்ணியம் மற்றும் மன வலிமை கொண்டவர்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு சில சிறப்பு குணங்கள் இருக்கும். வேலையை விரைந்து முடிக்கும் திறன், நேர்மறையான சிந்தனை, செய்யும் செயலில் ஈடுபாடு ஆகியவை இருக்கும். 

மேலும் படிக்க | நவம்பர் ராசிபலன்: யாருக்கு ‘சூப்பர்’... யாருக்கு ‘சுமார்’; பலன்கள் கூறுவது என்ன!

பரணி

பரணி நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகள் மிகவும் உணர்ச்சிவசப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ராசியின் இரண்டாவது நட்சத்திரமாக இருப்பதால், பரணி நட்சத்திரம் அதன் அதிபதியான சுக்கிரனால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஆசை மற்றும் தியாக உணர்வு அதிகம் இருக்கும். குறைவான பேச்சு நிறைவான வேலை இவர்களது சிறப்பு. வசீகரமான கண்கள் மற்றும் முகத்தில் வசீகரமான புன்னகை கொண்டவர்கள். மிகவும் தைரியமானவர்கள்.

மேலும் படிக்க | துலாமில் இணையும் புதன்-சுக்கிரன்; லக்ஷ்மி நாராயண யோகம் பெறும் '3' ராசிகள்!

பூசம்

பூச நட்சத்திரம் எட்டாவது நட்சத்திரம். பூச நட்சத்திரம் என்பது சந்திரனின் அனைத்து ராசிகளிலும் அதிக பண்புகளைக் கொண்ட நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகள் கூர்மையான அறிவு கொண்டவர்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகள் பெற்றோர்களை மதிப்பவர்களாகவும், ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டவர்களாகவும். உறவுகள், மக்கள் மற்றும் சூழ்நிலைகளைக் கையாளும் திறன் கொண்டவர்களாகவும், தன்னைச் சுற்றியுள்ள மக்களுக்கு பலம் கொடுப்பவர்களாகவும் இருக்கிறார்கள். 

மகம்

மக நட்சத்திரம் ராசியின் பத்தாம் நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகள் பிறப்பிலிருந்தே மரியாதைக்குரிய மற்றும் அரசர்களுக்கு உரிய இயல்புடன் தலைவர்களாக வளர்வார்கள். இந்தக் குழந்தைகள் எந்தத் துறைக்குச் சென்றாலும் அதில் சிறந்து விளங்குகிறார்கள். புத்திசாலித்தனமாக தங்கள் வேலையைச் செய்யக்கூடியவர்கள். செலவுகளைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டவர்கள். பெற்றோருடன் நல்ல உறவை வைத்திருப்பார்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு சாண்டள யோகம்; சில எளிய பரிகாரங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News