வரலட்சுமி விரத நாளன்று யாருக்கு என்ன ராசிபலன்? குரோதி ஆண்டு கடைசி வெள்ளி ராசி பலன்கள்!

Varalakshmi Vratham Rasipalan : குரோதி ஆண்டில் ஆடி 31 வளர்பிறை ஏகாதசி ஆகஸ்ட் மாதம் 16ம் நாள் வருகிறது. மூலம் நட்சத்திர நாளன்று வரலட்சுமி விரதம்! ஆடிவெள்ளியில் வீடு தேடிவரும் அன்னை...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 15, 2024, 10:06 PM IST
  • குரோதி ஆண்டில் ஆடி 31 வளர்பிறை ஏகாதசி
  • ஆகஸ்ட் மாதம் 16ம் நாள் மூலம் நட்சத்திரm
  • ஆடிவெள்ளியில் வீடு தேடிவரும் அன்னை...
வரலட்சுமி விரத நாளன்று யாருக்கு என்ன ராசிபலன்? குரோதி ஆண்டு கடைசி வெள்ளி ராசி பலன்கள்! title=

குரோதி ஆண்டு, ஆடி 31 வளர்பிறை ஏகாதசி ஆகஸ்ட் மாதம் 16ம் நாள் வருகிறது. மூலம் நட்சத்திர நாளன்று வரலட்சுமி விரதம்! ஆடிவெள்ளியில் வீடு தேடிவரும் அன்னையை வரமகாலட்சுமி விரதம் இருந்து வழிபடுவோம். ஆடிமாத கடைசி வெள்ளியன்று யாருக்கு என்ன ராசிபலன்? அறிவோம் ராசி பலன்கள்... 12 ராசிகளுக்குமான வரலட்சுமி விரத நாள் ராசிபலன்கள்!

மேஷம் 
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்படலாம். வாழ்க்கைத்துணைவரிடம் அனுசரித்துச் செல்லவும். வேலைகளில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். சாதுரியமான பேச்சுக்களால் நெருக்கடிகளைக் குறைத்துக் கொள்வீர்கள். வியாபாரம் மற்றும் வேலையில் இணக்கமாபான சூழல் உண்டாகும்.

ரிஷபம்
சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். கடன் வாங்குவது மட்டுமல்ல, கொடுப்பதிலும் சிந்தித்துச் செயல்படவும். பயணங்கள், அலைச்சலைக் கொடுக்கும், அனுபவத்தையும் கொடுத்துச் செல்லும். அனுசரித்துச் செல்லவது நல்லது. பண விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

மிதுனம் 
உடன்பிறந்தவர்கள் உங்களுடன் ஒத்துழைப்பார்கள். மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். பிரபலமானவர்களின் சந்திப்புகள் உற்சாகத்தைத் தரும். வரலட்சுமி விரதம் இருப்பவர்களுக்கு வரங்களை அள்ளித் தருவார் மகாலட்சுமி. இது மிதுன ராசியினருக்கு அதிக பொருத்தமானது. வெளியூர் பயணங்கள் நல்ல பலனைத் தரும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். பணியிடத்தில் பொறுப்பும், மதிப்பும் அதிகரிக்கும்.  

கடகம் 
சேமிப்பை மேம்படுத்த வேண்டிய அவசியம் புரிபடும். எதிர்பாராத பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். குடும்பத்தில் சுப காரியம் நடைபெறும் வாய்ப்புகள் தென்படுகின்றன. குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் ஆன்மீகப் பணியில் ஈடுபடுவீர்கள்.  

மேலும் படிக்க | சொந்த வீட்டிற்குக் குடியேறப்போகும் சூரியன்! ஆசியை ‘நாலு’ ராசிகளுக்கு அள்ளி வழங்கும் சூரியப் பெயர்ச்சி!

சிம்மம்
முயற்சிக்கேற்ற பலன்கள் ஆடிவெள்ளியன்று கிடைக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் மாற்றம் ஏற்படும் நாள் இது. சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்தலாம் என்பதை உணரும் நாள் இது.

கன்னி 
கவனத்துடன் கையாண்டால், பிரச்சனைகள் குறைந்துவிடும். எதிர்பாலினத்தை சேர்ந்தவர்களால் ஆதாயம் ஏற்படும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். ஆன்மீகத் தேடல் உண்டாகும். மனதில் இதுவரை தோன்றாத எண்ணங்கள் எல்லாம் தோன்றும். நிர்வாகத்தில் உங்களுடைய தனித்திறமை வெளியில் தெரியும். மருத்துவத்துறை தொடர்பானவர்களை சந்திப்பீர்கள்.

துலாம்
வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சனைகள் குறையும்.  பிள்ளைகள் வழியில் ஆதாயம் உண்டாகும். வீடு மாற்றலாமா என்ற சிந்தனை மேம்படும். இறைவழிபாடு செய்வது நல்லது. உறவினர்கள் மற்றும் நண்பர்களின் மனநிலையை புரிந்துக் கொள்வீர்கள்.

விருச்சிகம்
வரவுகள் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். சமூகப் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதுவிதமான அனுபவம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காத என்ற ஏக்கம் வரும். வாக்கு சாதுரியம் ஆதாயத்தைத் தரும்.  பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சோர்வு நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.

மேலும் படிக்க | குரோதி ஆண்டு வரலட்சுமி விரதம் அபூர்வமாய் வரும் அற்புதமான நாள்! சூரிய பெயர்ச்சி நாளி்ல் நோன்பு!

தனுசு 
மனதில் தேடல்கள் அதிகரிக்கும் காலம் இது. வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். நண்பர்கள், உறவினர்களிடையே ஒத்துழைப்பு மேம்படும். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்ளவும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வெளி வட்டாரத்தில் ஏற்படும் அனுவம் புதுவிதமானதாக இருக்கும்.

மகரம் 
சிந்தனைகள் மற்றும் செயல்களில் சோர்வு உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வுகள் தேடி அலைவீர்கள். பூர்வீக சொத்துக்கள் வந்து சேரும், தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் அலைச்சல் உண்டாகும்.

கும்பம் 
பேச்சுத்திறனால் காரியங்கள் சட்டென்று முடியும்.  ஆரோக்கியம் மேம்படும், பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கல்விப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல நாள், லாபம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

மீனம்
வியாபாரம் மற்றும் தொழிலில் லாபம் மேம்படும். அரசு தொடர்பான பணிகள் சாதகமாக நிறைவேறும் என்றாலும் விவேகத்துடன் செயல்படவும். செலவுகள் அதிகரிக்கும், தேவையின் தன்மைகளை அறிந்து செலவு செய்யவும்.  

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே! உங்களை இப்படி அடிக்கடி யாராவது சொன்னால் நீங்க இந்த ராசி தான்...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News