டிசம்பரில் இந்த ராசிகளுக்கு தன ராஜயோகம்: கிரக மாற்றத்தால் எக்கச்சக்க பண வரவு

December 2022 Rajayogam: டிசம்பர் 5 ஆம் தேதி தனுசு ராசியில் சுக்கிரன் சஞ்சரிக்கும் வரை தன ராஜயோகம் இருக்கும். இந்த யோகத்தின் காரணமாக 3 ராசிக்காரர்கள் பெரும் பண பலன்களைப் பெறுவார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 25, 2022, 07:31 PM IST
  • கடக ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் பல நன்மைகளைத் தரும்.
  • இந்த நேரம் தொழிலுக்கு நல்லது.
  • பணம், பதவி, மரியாதை கிடைக்கும்.
டிசம்பரில் இந்த ராசிகளுக்கு தன ராஜயோகம்: கிரக மாற்றத்தால் எக்கச்சக்க பண வரவு title=

டிசம்பர் 2022 ராஜயோக ராசிகள்: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் பெயர்ச்சியும், கிரகங்களின் சேர்க்கையும் அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கின்றன. சமீபத்தில், நவம்பர் 13 அன்று, செவ்வாய் கிரகம் ரிஷப ராசியில் பிரவேசித்தது. சுக்கிரன் கிரகமும் ராசி மாறி விருச்சிக ராசியில் நுழைந்துள்ளது. இதனால் செவ்வாய் கிரகம், சுக்கிரன் அதிபதியாக உள்ள ரிஷப ராசியிலும், சுக்கிரன், செவ்வாய் அதிபதியாக உள்ள விருச்சிக ராசியிலும் உள்ளனர். செவ்வாய் மற்றும் சுக்கிரனின் இத்தகைய நிலை தன ராஜயோகத்தை உருவாக்குகிறது. 

டிசம்பர் 5 ஆம் தேதி தனுசு ராசியில் சுக்கிரன் சஞ்சரிக்கும் வரை இந்த ராஜயோகம் இருக்கும். இந்த யோகத்தின் காரணமாக 3 ராசிக்காரர்கள் பெரும் பண பலன்களைப் பெறுவார்கள். தன ராஜயோகத்தால் அபரிமிதமான அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் எவை என இந்த பதிவில் காணலாம்.

இந்த ராசிக்காரர்களுக்கு தன ராஜயோகம் அதீத நற்பலன்களை தரும்

ரிஷபம்: 

ரிஷப ராசிக்காரர்களுக்கு தன ராஜயோகம் பல நன்மைகளைத் தரும். தைரியம், நம்பிக்கை அதிகரிக்கும். மக்கள் உங்கள் மீது எளிதில் ஈர்க்கப்படுவார்கள். விரைவில் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது. கவர்ச்சி, ஊடகம் சம்பந்தப்பட்டவர்கள் ஆதாயம் அடைவார்கள். நீங்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் வெற்றி உண்டாகும். சில நல்ல செய்திகள் கிடைக்கும்.

மேலும் படிக்க | Astro: கடன் தொல்லை கழுத்தை நெரிக்கிறதா... சில எளிய ஜோதிட பரிகாரங்கள்! 

கடகம்: 

கடக ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் பல நன்மைகளைத் தரும். இந்த நேரம் தொழிலுக்கு நல்லது. பணம், பதவி, மரியாதை கிடைக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமணம் ஆகாதவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். வியாபாரம் வளரும். தடைபட்ட வேலைகள் முடிவடையும்.

தனுசு: 

தன ராஜ யோகம் உருவாகி வருவதால் தனுசு ராசிக்காரர்கள் மிகுந்த நற்பலன்களை பெறுவார்கள். தனுசு ராசிக்காரர்களுக்கு செவ்வாய், சுக்கிரன் இரு கிரகங்களுமே நல்ல பலன்களைத் தரும். வாழ்வில் சுகபோகங்கள் அதிகரிக்கும். முன்னேற்றம் கிடைக்கும். தடைபட்ட வேலைகள் முடிவடையும். புதிய வேலை தேடுபவர்களுக்கு லாபம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு இப்போது திருமணம் நிச்சயம் ஆகும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மிடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நெருங்கும் ஏழரை சனி: தாக்கத்தை குறைக்க இந்த எளிய பரிகாரங்கள் கண்டிப்பாக உதவும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News