வெள்ளி ஆபரணங்களை அணிந்தால் இந்த 3 ராசிகளுக்கு பணம் கொட்டும்...!

Benefits Of Wearing Silver: வெள்ளி ஆபரணங்களை அணிவதன் மூலம் எந்தெந்த ராசிக்காரக்களுக்கு பணம் கொட்டும் என்பது இதில் விரிவாக காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : May 27, 2024, 03:23 PM IST
  • வெள்ளி ஆபரணங்கள் சில ராசிகளுக்கு அசுபமாக பார்க்கப்படுகிறது.
  • ஜோதிடம் பார்த்து வெள்ளி ஆபரணங்களை அணிய அறிவுறுத்தப்படுகிறது.
  • இந்த மூன்று ராசிகளுக்கு வெள்ளி அணிந்தால் பிரச்னைகள் தீரும்.
வெள்ளி ஆபரணங்களை அணிந்தால் இந்த 3 ராசிகளுக்கு பணம் கொட்டும்...! title=

Astrological Benefits Of Wearing Silver: இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும் தங்கத்தை வாங்குவதும், தங்கத்தை அணிந்துகொள்வதையும் ஒரு சுபமான செயலாக பார்க்கப்படுகிறது. தங்கம் மட்டுமின்றி வெள்ளி பொருள்களும் ஆன்மீக ரீதியாக இந்திய சமூகத்தில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. தங்க ஆபரணங்களை அணிவதை போன்றே வெள்ளியையும் சின்னச்சின்ன ஆபரணங்களாக மக்கள் அணிந்துகொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். 

அதிலும் குறிப்பாக ஆண்களை விட பெண்கள்தான் வெள்ளி ஆபரணங்களை அணிவதை விரும்புவார்கள். கொலுசு மற்றும் மோதிரம் என வெள்ளி பொருள்களை அணிந்துகொள்வது வாழ்க்கை நன்மையை தரும் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளது. மேலும், அழகை மேருகேத்தவும் இந்த வெள்ளி ஆபரணங்கள் உதவுகின்றன. 

இருந்தாலும் ஜோதிடப்படி சிலருக்கு வெள்ளி பொருள்களையும், ஆபரணங்களையும் அணிவது அசுபமான செயலாக பார்க்கப்படுகிறது. எனவே, ஒருவர் வெள்ளியில் ஆபரணங்களை அணியவதற்கு முன் தங்களின் ராசிக்கு அது ஏற்றதா இல்லையா என்பதை அறிந்துகொண்டது அணிவதே சாலச் சிறந்தது என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளின் வாழ்க்கையில் மாற்றம் - முன்னேற்றம்..

யார் யார் வெள்ளி அணியலாம்?

அதாவது, நீங்கள் உங்களின் ராசிப்படி வெள்ளியை அணியும்போது நீங்கள் பணக்காரர் ஆகும் வாய்ப்பும் அதிகரிக்கும் என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள். அந்த வகையில் எந்தெந்த ராசிகளுக்கு வெள்ளி பொருள்கள் மிகவும் சுபமானது என்பதை இங்கு விரிவாக காணலாம்.

ஜோதிடப்படி வெள்ளி என்பது சந்திரன் மற்றும் சுக்கிரனின் ஒரு அடையாளமாக பார்க்கப்படுகிறது. இதில் சந்திரன் என்பது உங்களின் அறிவாற்றலுடன் தொடர்புடையது. உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் உச்சத்தில் இருந்தால் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும், நீங்கள் படைப்புத்திறனிலும் சிறந்து விளங்குவீர்கள் என அர்த்தமாகும். 

எனவே, இந்த சமயத்தில் நீங்கள் வெள்ளி பொருள்களை அணிந்துகொண்டால் உங்களுக்கு செல்வம் பெருகும். மேலும், உங்களின் படைப்பாற்றல் திறன் இன்னும் அதிகரிக்கும், பண வரவும் அதிகரிக்கும். அந்த வகையில், எந்தெந்த ராசிகளுக்கு வெள்ளி பொருள்கள் மிகவும் ராசியானது என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு வெள்ளி ஆபரணங்களை அணிவது என்பது மிகவும் நல்லதாகும். வெள்ளி ஆபரணங்களை அணிவதன் மூலம் மன கட்டுப்பாடு வரும் என நம்பப்படுகிறது. இதனால், ஒருவர் மனநலம் சார்ந்த பிரச்னைகளில் இருந்து வெளிவரலாம். குறிப்பாக, கடக ராசிக்காரர்கள் மிக மிக அதிகமாக சிந்திக்கக் கூடியவர்கள், உணர்ச்சிவசப்படுபவர்கள். எனவே, இவர்கள் வெள்ளி சார்ந்த பொருள்களை அணிந்துகொள்வது உணர்ச்சியை கட்டுப்படுத்தலாம்.  உடல்நிலை மோசமாக இருந்தால் வெள்ளி அணிவதன் மூலம் ஆரோக்கியமடைவீர்கள். 

துலாம் 

துலாம் ராசிக்காரர்களுக்கு அதிபதி சுக்கிரன் என ஜோதிடத்தில் நம்பப்படுகிறது. எனவே, இந்த ராசிக்காரர்களின் சிந்தனையே வித்தியாசமாக தெரியும். இருப்பினும் அது பல நேரங்களில் கைக்கூடாமலும் போய்விடும். இந்த நேரத்தில் நீங்கள் வெள்ளி ஆபரணங்களை அணிவதன் மூலம் உங்களின் சிந்தனை சரியான பாதையில் செல்லும், பிரச்னைகள் தீரும். உடல் ஆரோக்கியம் அதிகமாகும். பண பிரச்னை, குடும்ப பிரச்னைகள் தீரும். 

ரிஷபம்

ரிஷப ராசிக்கு வெள்ளி ஆபரணங்களை அணிந்துகொள்வது என்பது மிகுந்த நன்மையை அளிக்கும். வெள்ளி ஆபரணங்களை அணிவதன் மூலம் ரிஷப ராசிக்காரர்களிந் கோபம் கட்டுக்குள் வரும் என்ற நம்பிக்கை வரும். மேலும், யாருடைய பிரச்னையிலும் அவர்கள் தலையிடவே மாட்டார்கள். ரிஷப ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள் என்பது நம்பிக்கை. இருந்தாலும் கடினமாக உழைத்தாலும் வாழ்வில் முன்னேற்றம் இல்லை என்றால் வெள்ளி ஆபரணங்களை அணிந்தால் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் திரும்பும், விரைவில் வாழ்வில் முன்னேற்றம் வரும். 

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இதில் கொடுக்கப்பட்டுள்ள உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எவ்வித உத்தரவாதம் இல்லை. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே ஆகும். ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது)

மேலும் படிக்க | திங்கள் முதல் ஞாயிறு வரை! வரும் வாரத்தில் உங்கள் அதிர்ஷ்டம் எப்படி இருக்கும்? ராசிபலன்!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News