நவராத்திரி சேல் தொடங்கியாச்சு! ஓபன் ரோர் பைக் வாங்கினா ஐபோன் 15! அட்டகாசமான சலுகை!

Festive offer on Oben Rorr : ஓபன் எலக்ட்ரிக் பைக் தசாரா விற்பனையில் அதிரடி தள்ளுபடி மற்றும் சலுகைகளுடன் கிடைக்கிறது. ₹ 30,000 தள்ளுபடியுடன் மலிவாக ஓபன் பைக் வாங்க அக்டோபர் 12 கடைசி நாள்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 26, 2024, 07:01 PM IST
  • ஓபன் எலக்ட்ரிக் பைக்
  • தசாரா விற்பனையில் அதிரடி தள்ளுபடி
  • மலிவாக ஓபன் பைக் வாங்க அக்டோபர் 12 கடைசி நாள்...
நவராத்திரி சேல் தொடங்கியாச்சு! ஓபன் ரோர் பைக் வாங்கினா ஐபோன் 15! அட்டகாசமான சலுகை! title=

 தீபாவளி, தசரா, நவராத்திரி என பண்டிகைக் காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல நிறுவனங்களும் புதிய பொருட்களை வாங்க தள்ளுபடி மற்றும் சலுகை விற்பனையை அறிவிக்கின்றன. அந்த வகையில் தற்போது ஓபன் எலக்ட்ரிக் ஒரு சிறந்த சலுகையை வழங்கியுள்ளது.  மின்சார மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்யும் ஓபன் எலக்ட்ரிக் நிறுவனம், ₹ 30,000 தள்ளுபடி விலையில் பைக்குகளை விற்பனை செய்யும். இந்த ஆஃபர் அக்டோபர் 12 வரை செல்லுபடியாகும், iPhone 15 ஐ வெல்லும் வாய்ப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி உள்நாட்டு மின்சார வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றான ஓபன் எலக்ட்ரிக், நாடு முழுவதும் கவர்ச்சிகரமான சலுகைகளுடன் நவராத்திரி விற்பனையைத் தொடங்கியுள்ளது. பண்டிகைக் காலத்தில் பைக் வாங்க திட்டமிட்டால், வாடிக்கையாளர்களுக்கு ஓபன் எலக்ட்ரிக் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

மின்சார பைக் விற்பனையை அதிகரிக்கவும், நிறுவனம் தள்ளுபடி சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 12 வரை வாடிக்கையாளர்கள் ஓபன் எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிறப்பு செயல்திறன் கொண்ட மின்சார மோட்டார் சைக்கிளை குறைந்த விலையில் வாங்கலாம். ஓபன் நிறுவனத்தின் பிராண்டின் LFP பேட்டரி தொழில்நுட்பம், சிறந்த செயல்திறன், அதிக வெப்ப எதிர்ப்பு மற்றும் நீண்ட ஆயுளை வழங்குகிறது.

மேலும் படிக்க | விலை அதிகம்னாலும் வொர்த் தான்! iphone 16 வாங்க இந்த காரணங்கள் போறாதா? அருமையான லேட்டஸ்ட் ஐபோன்!

ஓபன் ரோர் நவராத்திரி சலுகை

இந்த மின்சார பைக்கின் அசல் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1,49,999 என்றால், அதற்கு ரூ.30,000 தள்ளுபடி என்பதால், எலக்ட்ரிக் பைக்கின் விலை ரூ.1,19,999 ஆக குறைத்துள்ளது, நீட்டிக்கப்பட்ட 5 ஆண்டு உத்தரவாதத்துடன் இந்த சலுகை விற்பனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், iPhone 15, iPad Mini மற்றும் Sony ஹெட்ஃபோன்களை வெல்லும் வாய்ப்பும் உள்ளது.

நவராத்திரி விற்பனை

பெங்களூரு, டெல்லி மற்றும் புனேவில் உள்ள அதன் ஷோரூம்களில் சிறப்பு விற்பனைக்கும் ஓபன் எலக்ட்ரிக் ஏற்பாடு செய்கிறது. இந்த சிறப்பு ஒரு நாள் விற்பனையில், வாடிக்கையாளர்களுக்கு ஓபன் ரோரில் ரூ.60,000 வரை தள்ளுபடி வழங்கப்படும். அப்போது பைக்கின் விலை ரூ.89,999 மட்டுமே இருக்கும்.

பெங்களூரில் செப்டம்பர் மாதம் (லேஅவுட் ஷோரூமில்) நடைபெறும். தில்லியில் (துவாரகா ஷோரூமில்) அக்டோபர் 2ஆம் தேதியும், புனேவில் (வாகத் ஷோரூமில்) அக்டோபர் 6ஆம் தேதியும் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்துக் கொள்ள ஓபன் எலெக்ட்ரிக் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.  

புதிய ஷோரூம் திறப்பு அறிவிப்பு
பண்டிகைக்கால சலுகைகளின் அறிவிப்புக்கு பிறகு, விரைவில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் புதிய ஷோரூம்களைத் திறக்கும் ஓபன் எலக்ட்ரிக் நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டங்களும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூரு, புனே, டெல்லி மற்றும் கேரளாவில் ஓபன் பைக்குக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

மேலும் படிக்க | அட்வென்ச்சர் பயணங்களுக்கு ஏற்ற கார் தார் ROXX 4x4! அறிமுக விலை, சிறப்பம்சங்கள்...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News