புதன் பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் அட்டகாசமான வளர்ச்சி.... பண மழையில் நனைவார்கள்

Budhan Peyarchi Palangal: புதன் பெயர்ச்சியின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் 5 ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி அற்புதமாக இருக்கவுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 25, 2024, 02:25 PM IST
  • விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.
  • குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும்.
புதன் பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் அட்டகாசமான வளர்ச்சி.... பண மழையில் நனைவார்கள் title=

Budhan Peyarchi Palangal: வணிகம், ஞானம், பேச்சாற்றல், புத்திசாலித்தனம் ஆகியவற்றின் காரணி கிரகமான புதன் மே 31 ஆம் தேதி தனது ராசியை மாற்றி ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அனைத்து ராசிகளின் பெயர்ச்சியும் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். புதன் பெயர்ச்சியின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் 5 ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி அற்புதமாக இருக்கவுள்ளது. இவர்களது தொழில் மற்றும் வணிகத்தில் பெரிய நேர்மறையான தாக்கம் ஏற்படும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 

ரிஷப ராசியில் புதன் பெயர்ச்சியால் அற்புதமான நற்பலன்களை பெறவுள்ள ராசிகள்:

மேஷம் (Aries):

ரிஷப ராசியில் புதன் பெயர்ச்சியால் அனுகூலமான பல பலன்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மாணவர்கள் தங்கள் தொழிலில் முன்னேற்றம் அடைவார்கள். புதிய திட்டங்களை தீட்டி அவற்றில் வெற்றி காண்பார்கள். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். வியாபாரத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபார விஷயங்களில் வெற்றியும் லாபமும் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் கடின உழைப்பின் பலனைப் பெறுவீர்கள். புதிய திட்டங்களைத் தொடங்க இது நல்ல நேரமாக இருக்கும்.

சிம்மம் (Leo):

சிம்ம ராசிக்காரர்களுக்கு ரிஷப ராசியில் புதன் பெயர்ச்சி சாதகமான பலன்களை அளிக்கும். சரியான வழியில் கடின உழைப்பில் ஈடுபட்டால் உங்கள் தொழிலில் வெற்றியை அடையலாம். ஆளுமை மற்றும் உரையாடல் திறன் அதிகரிக்கும். இது பணியிடத்தில் நன்மை பயக்கும். சில வியாபாரங்களில் நீங்கள் பங்குதாரர் ஆகலாம். வியாபாரத்தில் விரிவாக்கம் மற்றும் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தகுந்த முடிவுகளை எடுப்பதில் அனுபவமுள்ள ஒருவரின் ஆலோசனையைப் பெறத் தவறாதீர்கள்.

கன்னி (Virgo):

கன்னி ராசிக்காரர்களுக்கு ரிஷப ராசியில் புதன் பெயர்ச்சி நல்ல அதிர்ஷ்டக் காலமாக அமையும். மாணவர்களின் படைப்பாற்றல் அதிகரிக்கும். புதிய சிந்தனையைப் பின்பற்ற அவர்கள் பயப்படக்கூடாது. துடிதுடிப்புடன் அறிவாற்றலுடன் இருப்பது தொழிலில் வெற்றிக்கு வழிவகுக்கும். உங்களின் தலைமைத்துவ குணம் உயரும். வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளைப் பெறலாம். விரிவான திட்டத்துடன் செயல்படுவது விரைவில் பலன்களைத் தரும். பொருளாதார செழிப்பு அதிகரிக்கும்.

மேலும் படிக்க | வார ராசிபலன்... அதிர்ஷ்ட ராசிகளும் கவனத்துடன் இருக்க வேண்டிய ராசிக்காரர்களும்... 

விருச்சிகம் (Scorpio):

விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். இது உங்கள் வாழ்க்கையின் சிறந்த நேரம் என்று கூறலாம். இருப்பினும், பணியிடத்தில் வெற்றி என்பது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் மட்டுமே கிடைக்கும். ஆனால் இந்த வெற்றி மிகப்பெரியதாகவும் நிரந்தரமாகவும் இருக்கும். சில்லறை வியாபாரிகளுக்கு லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைக்கும். வணிகத்தில் கூட்டாண்மையைத் தொடங்கலாம், அது உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் வணிக கூட்டாளருடன் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம், விரைவாக முன்னேறலாம். மாணவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படலாம்.

கும்பம் (Aquarius):

ஐடி, கணினி, ஏஐ ஆகிய துறைகள் தொடர்பான மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது. வணிகர்கள் தங்கள் வணிக பயணங்களால் பயனடைவார்கள். புதிய வாய்ப்புகளுக்கான கதவுகள் திறக்கப்படலாம். வியாபாரத்தில் புதிய செயல் திட்டத்தில் செயல்படும் வாய்ப்பு உள்ளது. சில்லறை வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் முதலீடு செய்ய இதுவே சிறந்த நேரம், லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. முதலீடுகளால் நல்ல லாபம் பெறலாம். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளுக்கு சிக்கல்... தப்பிக்க சில பரிகாரங்கள்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News