கேது பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு கேட்டதெல்லாம் கிடைக்கும்.. வெற்றியின் உச்சம் தொடுவார்கள்

Ketu Transit 2023 Effect: கேது பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 21, 2023, 12:31 PM IST
  • கேதுவின் பெயர்ச்சி காரணமாக, தனுசு ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் சிறந்த வெற்றியைப் பெறுவார்கள்.
  • வியாபாரத்தில் மகத்தான லாபம் கிடைக்கும்.
  • வருமானத்தில் உயர்வு இருக்கும்.
கேது பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு கேட்டதெல்லாம் கிடைக்கும்.. வெற்றியின் உச்சம் தொடுவார்கள் title=

கேது பெயர்ச்சி 2023, ராசிகளில் அதன் தாக்கம்: வேத ஜோதிடத்தில் அனைத்து கிரகங்களுக்கும் அவற்றுக்கான தனித்துவமான முக்கியத்துவம் உள்ளது. அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தங்கள் ராசியை மாற்றுகின்றன. கிரகங்களின் கிரக மாற்றங்கள், இயக்க மாற்றங்கள், உதய மற்றும் அஸ்தமன நிலைகள் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

ராகு மற்றும் கேது நிழல் கிரகங்களாகக் கருதப்படுகின்றன. இந்த இரண்டு கிரகங்களும் எப்போதும் பின்னோக்கி, அதாவது வக்ர நிலையில் நகர்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருவரின் ஜாதகத்தில் கேது அசுப நிலையில் இருக்கும்போதெல்லாம் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வருகிறது. கேது ஒன்றரை வருடத்திற்கு ஒரு முறை ராசி மாறுகிறார். இந்த வருடம் அக்டோபர் 30 ஆம் தேதி கேது கன்னி ராசியிலிருந்து விலகி துலாம் ராசிக்குள் நுழைகிறார். 

கேது பெயர்ச்சி

நிழல் கிரகமான கேதுவின் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களது வாழ்க்கை ஒளிமயமாகும். கேது பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்கள் பல நன்மைகளைப் பெறுவார்கள். இந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

ரிஷப ராசி

ஜோதிட சாஸ்திரப்படி துலாம் ராசியில் கேதுவின் பிரவேசம் ரிஷப ராசிக்காரர்களின் வாழ்வில் செல்வச் செழிப்பைக் கொண்டுவரும். ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி அதிகப்படியான நல்ல பலன்களை அள்ளித் தரும். இந்த காலத்தில் ரிஷப ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக வாட்டி வதைத்து வந்த மன உளைச்சல் நீங்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் நீண்ட பயணம் செல்லக்கூடும். இந்த பயணங்களால் அனுகூலமான சில நன்மைகள் உண்டாகும். இந்த காலத்தில் உங்கள் பொருளாதார நிலை மேம்படும். தடைபட்ட பணிகள் இப்போது முடிவடையும். வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் ரிஷப ராசிக்காரர்கள் கூட்டாண்மையில் ஏதேனும் ஒரு வேலையைச் செய்தால், அது இப்போது பயனளிக்கும்.

மேலும் படிக்க | சனிபகவானின் ஆசியுடன் இந்த 5 ராசிகளுக்கு அடுத்த 139 நாட்கள் ஜாக்பாட்

சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கு கேதுவின் இந்தப் பெயர்ச்சி மங்களகரமாகவும், பலனளிக்கக்கூடியதாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கேதுவின் சஞ்சாரம் இவர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவில் இனிமை இருக்கும். நீங்கள் சொத்து போன்றவற்றில் முதலீடு செய்ய விரும்பினால், அதற்கு இந்த நேரம் நல்லதாக இருக்கும். இந்த காலத்தில் செய்யப்படும் அனைத்து முதலீடுகளும் எதிர்காலத்தில் லாபத்தை பெற்றுத்தரும். இந்த நேரத்தில் நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். சமூகத்தில் மரியாதை கூடும்.

தனுசு ராசி

வேத ஜோதிடத்தின்படி, இந்த நேரத்தில் கேதுவின் பெயர்ச்சி காரணமாக, தனுசு ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் சிறந்த வெற்றியைப் பெறுவார்கள். வியாபாரத்தில் மகத்தான லாபம் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு இருக்கும். நீங்கள் ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த நேரத்தில் அந்த நோயிலிருந்து முற்றிலுமாக விடுபடுவீர்கள். 

மகர ராசி

துலாம் ராசியில் கேதுவின் பிரவேசம், மகர ராசிக்காரர்களுக்கு அதிக பண பலன்களைத் தருகிறது. நிதி ரீதியான சிக்கல்கள் நீங்கும். இந்த நேரத்தில் பொருளாதார நிலையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். புதிய பண ஆதாரங்கள் உருவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பெரிய பதவிக்கான பொறுப்பைப் பெறலாம். இதுமட்டுமின்றி, இப்போது ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். வணிக வகுப்பினருக்கும் இந்த நேரம் பயனுள்ளதாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் அதிக லாபம் பெறுவீர்கள். இப்போது முதலீடு செய்வது உங்களுக்கு நல்ல லாபத்தை அளிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: உருவாகும் புதாதித்ய யோகம்... உச்சகட்ட லாபத்தை பெறப்போகும் இந்த 5 ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News