புத-ஆதித்ய யோகம்... ‘இந்த’ ராசிகளின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்!

புதன் கிரகம், ஒரு பிப்ரவரி 20ம் தேதி கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறது. சூரிய பகவானும் சனி பகவானும், ஏற்கனவே கும்ப ராசியில் உள்ள நிலையில், சூரியனும் சேர்ந்து புத ஆதித்ய யோகம் உருவாகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 14, 2024, 05:57 PM IST
  • புதன் பெயர்ச்சியும் புத ஆதித்யோகமும் வெற்றிகளை கொண்டு வந்து சேர்க்கும்.
  • வாழ்க்கையில் வெற்றிக்கும் முன்னேற்றத்திற்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
  • நிறைவேறாத ஆசைகள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் வாய்ப்பு உண்டு.
புத-ஆதித்ய யோகம்... ‘இந்த’ ராசிகளின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்!

Mercury Transit Effects: புத்திசாலித்தனத்தை வழங்கும் காரகராக கருதப்படும் புதன் கிரகம், ஒரு பிப்ரவரி 20ம் தேதி கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறது. சூரிய பகவானும் சனி பகவானும், ஏற்கனவே கும்ப ராசியில் உள்ள நிலையில், சூரியனும் சேர்ந்து புத ஆதித்ய யோகம் உருவாகிறது. இந்த யோகத்தினால் சில ராசிக்காரர்கள், வேலை கல்வி தொழில் குடும்பம் என அனைத்து வகையிலும் வெற்றிகளை குவித்து, வாழ்க்கையில் மிக சந்தோஷமாக இருப்பார்கள். செல்வ வளத்தையும், மகிழ்ச்சியையும் அனுபவிக்க போகும் அந்த ஐந்து ராசிக்காரர்கள் யார் என்று தெரிந்து கொள்வோம்.

Add Zee News as a Preferred Source

மேஷ ராசிக்கான புத ஆதித்ய யோக பலன்கள்

மேஷ ராசிக்காரர்களுக்கு சூரியனும் புதனும் சேரும் புத ஆதித்ய யோகம், அவரிவிதமான பலனை அள்ளிக் கொடுக்கும். இவர்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கும் திருப்திக்கும் குறைவே இருக்காது. பதவி உயர்வு சம்பள உயர்வு மன மகிழ்ச்சியை தரும். மூதாதைய சொத்துக்கள் கைக்கு வரும் வாய்ப்பு உண்டு.. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவுகள் வலுவாக இருக்கும். சிறிய அளவில் உடல் நல பிரச்சனைகள் ஏற்பட்டாலும், பொதுவாக ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும்

ரிஷப ராசிக்கான புத ஆதித்ய யோக பலன்கள்

ரிஷப ராசிக்காரர்களுக்கு, புதன் பெயர்ச்சியும் புத ஆதித்யோகமும் வெற்றிகளை கொண்டு வந்து சேர்க்கும். புதிதாக ஏற்படும் வருமான ஆதாரங்களால் நிதி நிலைமை மேம்பட்டு, பொருளாதார ரீதியாக வலுவான நிலையில் இருப்பார்கள். வாழ்க்கையில் வெற்றிக்கும் முன்னேற்றத்திற்கும் வாய்ப்புகள் கிடைக்கும். நிறைவேறாத ஆசைகள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் இணக்கமும் நிம்மதியும் இருக்கும்.

மிதுன ராசிக்கான புத ஆதித்ய யோக பலன்கள்

மிதுன ராசிக்காரர்களுக்கு புத்த பகவானும் சூரிய பகவானும் வெற்றிகளை அள்ளிக் கொடுப்பார்கள். நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. அந்த பயணத்தினால், வரும் காலத்தில் பெரிய அளவில் ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.. உடல் நிலையும் சிறப்பாகவே இருக்கும். நிதி நிலைமை மேம்பட்டு, கடன் பிரச்சினைகளிலிருந்து விடுபடும் வாய்ப்பு கிடைக்கும்.

மேலும் படிக்க | இந்த ராசிகளின் தலைவிதி மாறும்: சுக்கிரன் அருளால் வாழ்க்கை ஜொலிக்கும்

கடக ராசிக்கான புத ஆதித்ய யோக பலன்கள்

கடக ராசிக்காரர்களுக்கு, புதன் பெயர்ச்சியும் புத ஆதித்ய யோகமும் வாய்ப்புகளை அள்ளி வழங்கும். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால், சிறப்பாக வாழ்க்கையில் முன்னேறலாம். தொழிலில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் போட்டியாளர்களை முந்திக்கொண்டு, உங்கள் திறமையை நீங்கள் நிரூபிப்பீர்கள். உங்கள் வாழ்க்கை துணை உங்களுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்பார்கள்.

தனுசு ராசிக்கான புத ஆதித்ய யோக பலன்கள்

தனுசு ராசிக்காரர்களுக்கு, பணியிடத்தில் உழைப்புக்கான அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும். நிதி ரீதியாகவும் வலுவாக இருப்பீர்கள். முதலீடுகள் நல்ல லாபத்தை கொடுக்கும். மேலும் பணத்தை சேமிக்கும் ஆர்வம் ஏற்படும். குடும்பத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி, சந்தோஷம் இருக்கும். குழந்தைகளின் வருங்காலத்திற்கு திட்டமிட இது ஏற்ற சமயம்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | கும்பத்தில் சூரியனின் உச்ச பெயர்ச்சி, அடுத்த 30 நாட்கள் இந்த ராசிகளுக்கு சுபிட்சம், பண வரவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News