தினசரி ராசிபலன்: வந்துவிட்டது நல்ல காலம்... எந்த ராசிக்காரர்கள் இன்று சொத்து வாங்கலாம்...?

Today Horoscope June 20: 2024ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களை இங்கு காண்போம்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 20, 2024, 06:26 AM IST
  • சிலருக்கு இன்று செலவு அதிகமாக இருக்கும்.
  • சிலர் இன்று உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும்.
  • சிலருக்கு இன்று பண வரவு நல்ல வகையில் இருக்கும்.
தினசரி ராசிபலன்:  வந்துவிட்டது நல்ல காலம்... எந்த ராசிக்காரர்கள் இன்று சொத்து வாங்கலாம்...? title=

Today Horoscope June 20: ஒவ்வொருவருக்கும் இன்றைய நாளை சிறப்பாகவும், நல்ல முறையிலும் செயல்பட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அந்த வகையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்களுக்கும் இன்றைய நாளின் பலனை தெரிந்துகொள்வது கூடுதல் பலனளிக்கலாம். 2024ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி ஆனி 6ஆம் நாளான இன்றைய ராசிபலனை இங்கு காணலாம். 

மேஷம்

மேஷ ராசிக்காரர்களில் பணிக்கு செல்வோருக்கு இன்று பெரும் நம்பிக்கை அளிக்கும் நாளாகும். இன்று உங்கள் பயணத்தில் நல்ல மனிதர்களை நீங்கள் சந்திக்கக் கூடும். வீடு வாங்கவும், விற்கவும் தற்போதைய சூழல் ஏதுவாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் இன்று நீண்ட தூரம் பயணம் செல்லலாம், அதற்கு சாதகமான காலகட்டம் இது. சொத்து பிரச்னையில் ஒரு நல்ல முடிவு எட்டப்படலாம். 

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நாள் எனலாம். பணியிடத்தில், உங்களின் மேல் அதிகாரி உங்கள் பணியின் தனித்துவத்தை பாராட்டுவார். சொத்து வாங்குவதற்கும், வீடு வாங்குவதற்கும் இது நல்ல நாளாகும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று செலவு அதிகமாக இருக்கும். பெரிய விஷயங்களில் பெரியளவில் செலவு செய்தாலும் அதில் எவ்வித பிரச்னையும் இருக்காது. நண்பர்களுடன் பயணிப்பதற்கு நல்ல வாய்ப்பு இருப்பதால், கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் உடல்நிலையில் சிரத்தையாக இருக்க வேண்டும். அதற்கு குறிப்பாக, துரித உணவுகளுக்கு டாட்டா சொல்ல வேண்டும். மேலும் செலவுகளை கட்டுப்படுத்துவது கூடுதல் நன்மையாகும். சொத்து வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றால் அதுசார்ந்து எளிதில் கடனும் கிடைக்கலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு மிக நம்பிக்கையான நாள் எனலாம். இன்று உங்கள் மீது நம்பிக்கை கொண்டு ஒரு பெரிய பொறுப்பு வழங்கப்படலாம். அதை நீங்கள் கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். அலுவலகம் சார்ந்த பயணத்தையும் சிலர் இன்று கொண்டாட்டமான பயணமாக மாற்றிவிடுவார்கள். இப்போது சொத்து வாங்குவதற்கு ஏதுவான காலமில்லை.

மேலும் படிக்க | என்றென்றும் தீரா மர்மங்களை கொண்ட ரகசிய பிரமிடுகள்! எகிப்தின் பிரம்மாண்டமான கிசா பிரமிடு!

துலாம்

துலாம் ராசிக்கார்களுக்கு இன்று பணம் ஒரு பெரிய பிரச்னையாக இருக்காது, பண வரவு நன்றாக இருக்கும். சாலை வழியான பயணம் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். வேலையிலும் நல்ல பெயர் கிட்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இன்று உடல்நிலையில் அதிகம் கவனம் செலுத்துவார்கள். சம்பள விவகாரங்களில் நீடித்த பிரச்னை நீங்கும். வீடு மாற்ற வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது நல்ல நேரமாகும்.

தனுசு

தனசு ராசிக்காரர்களுக்கு இன்று பண வரவு அதிகமாக இருக்கும். ஒரு நிகழ்வால் ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்று கூடும், நீங்கள் மகிழ்ச்சியாக உணர்வீர்கள். சொத்து வாங்குவது குறித்து பரிசீலிப்பீர்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு அவர்களின் பணியிலேயோ, தொழிலிலேயோ பெரிய முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று உங்களுக்கு நல்ல அதிர்ஷடமான நாளாகும். இன்று உங்களுக்கு நல்ல நேரம்தான், முக்கியமாக வீட்டில்...

கும்பம்

கும்ர ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நாளாகும். பண ரீதியிலும் வரவு இருக்கும். பணியிடத்தில் நிலவும் பிரச்னையும் விரைவில் தீரும். நீண்ட தூர பயணங்களுக்கு தயாராகுங்கள். உறவினர்களுடன் அதிக நேரம் செலவிடுவீர்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்கள்தான் இன்று உலகத்தின் உச்சியில் இருப்பது போல் மகிழ்ச்சியாக உணர்வீர்கள். முந்தைய காலத்து முதலீடு இன்று உங்களுக்கு கைக்கொடுக்கலாம். குடும்பத்தினருடன் இன்று சுற்றுலா செல்லலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கு அளிக்கப்பட்ட கணிப்புகள் அனைத்தும் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்கள் அடிப்படையில் எழுதப்பட்டது. இதனை ஜீ மீடியா உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | லட்சுமியின் அருளைப் பெற சிவனுக்கு அபிஷேகம் செய்யாலாம்! இது பெளர்ணமி சிவ வழிபாடு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News