வார ராசிபலன்: சில ராசிகளுக்கு பண விரயம்... சில ராசிகளுக்கு பண வரவு..!

Weekly Rasipalan (Feb 6- 12): இந்த வாரம் அறிவுத் திறன், பணம், வேலை, தொழில், வியாபாரம் மற்றும் பேச்சுத் திறன் ஆகியவற்றின் காரணியான புதன் பெயர்ச்சியாகப் போகிறது. இது அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும் என்றாலும், வாராந்திர ராசி பலன்களின்படி, அடுத்த வாரம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 6, 2023, 12:43 AM IST
  • நிதி நிலை சாதாரணமாக இருக்கும்.
  • நேர்மையாக செயல்பட்டு பொறுமையை கடைபிடித்தால் வெற்றி நிச்சயம்.
  • குடும்பத்தில் ஒருவரின் உடல்நிலை மோசமடையலாம்.
வார ராசிபலன்: சில  ராசிகளுக்கு பண விரயம்... சில ராசிகளுக்கு பண வரவு..! title=

Weekly Rasipalan (Feb 6- 12): இந்த வாரம் அறிவுத் திறன், பணம், வேலை, தொழில், வியாபாரம் மற்றும் பேச்சுத் திறன் ஆகியவற்றின் காரணியான புதன் பெயர்ச்சியாகப் போகிறது. இது அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும் என்றாலும், வாராந்திர ராசி பலன்களின்படி, அடுத்த வாரம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.

மேஷம் வார பலன்: மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் செலவுகளில் கவனம் தேவை. இல்லை என்றால் சிக்கலை சந்திக்க நேரிடும். எதிரிகள் உங்களுக்கு தீங்கு செய்ய முயற்சி செய்யலாம். யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். எதுவாக இருந்தாலும் சிந்தித்து செயல்பட வேண்டும்

ரிஷபம் வார பலன்:  ரிஷப ராசிக்காரர்கள்  இந்த வாரம் பெரிய பண ஆதாயங்களைப் பெறலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இருப்பினும், உங்கள் வேலையை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்கவும். இல்லையெனில் அது நிறைவடையாமல் தாமதமாகி, அதனால் பாதிப்பு ஏற்படலாம்.

மேலும் படிக்க | February Horoscope 2023: பிப்ரவரி மாதம் யாருக்கு எழுச்சி, யாருக்கு வீழ்ச்சி? முழு ராசிபலன் இதோ

மிதுனம் வார ராசிபலன்: மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சராசரியான வாரமாக இருக்கும். அதாவது பெரிய அளவில் நல்ல பலன்களோ அல்லது அஞ்சும் வகையில் கெடு பலன்களோ இல்லை. பேச்சில் கவனம் தேவை, இல்லையெனில் உறவுகள் பாதிக்கப்படக் கூடும். வேலையில் நிலைமைகள் மோசமாகலாம்.

கடகம் வார ராசி பலன்:  கடக ராசிக்காரர்கள் சோகம் அல்லது விரக்தியை உணரலாம். உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்துங்கள். இதனால் செய்த வேலை கெட்டுப் போகலாம். வியாபாரிகள் பொறுமையுடன் செயல்பட வேண்டும். பணியில் இருப்பவர்களும் வேலை விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்

சிம்மம் வார ராசிபலன்: சிம்ம ராசிக்காரர்களுக்கு நெருங்கியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். தவறான புரிதலைத் தவிர்த்து, நேர்மையாக செயல்படுங்கள். உங்கள் பிரச்சினைகள் மற்றும் வாழ்க்கையில் கவனம் செலுத்துங்கள். பிறர் விவகாரங்களில் தலையிடாதீர்கள்.

கன்னி வார ராசிபலன்: கன்னி ராசிக்காரர்கள் இந்த வாரம் பல நன்மைகளைப் பெறலாம். அஞ்சாமல் ரிஸ்க் எடுக்கலாம். உங்கள் இலக்குகளில் உறுதியாக இருங்கள். வெற்றிகளை குவிப்பீர்கள் ஐயம் வேண்டாம். உங்களுக்கு வெற்றி வந்து சேரும் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். 

துலாம் வார ராசிபலன்: இந்த வாரம் துலாம் ராசிக்காரர்கள் மிகவும் ஆற்றல் அதிகம் உள்ளவர்களாகளாக இருப்பார்கள், மேலும் இது, அவர்களுக்கு சிறப்பான நன்மைகளை தரும். உங்கள் வேலையில் திருப்தி அடைவீர்கள். எல்லோரும் உங்களைப் புகழ்வார்கள். கடின உழைப்பு பாராட்டப்படும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.

விருச்சிகம் வார ராசிபலன்: இந்த வாரம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இயல்பில் கோபம் ஆதிக்கம் செலுத்தும். சோக உணர்வும் இருக்கலாம். பொறுமையாக இருங்கள். ஆடம்பரத்தைத் தவிர்க்கவும். வியாபாரிகளுக்கு வணிக பங்குதாரர் அல்லது வாடிக்கையாளரிடம் இருந்து விலகல் இருக்கலாம். கவனமாக பேசுங்கள்.

தனுசு வாரா ராசி பலன்: தனுசு ராசிக்காரர்கள் எதிர் பாலினத்தினரிடம் ஈர்க்கப்படலாம். துறையில் புதிய வாய்ப்புகள் அமையும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.  உடல்நலம் மற்றும் பட்ஜெட்டில் கவனம் செலுத்துங்கள். இல்லாவிட்டால் சிக்கலை சந்திக்க கூடும்

மகரம் வார ராசிபலன்: மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுமாரான வாரமாக இருக்கும். புதிய தொடர்புகளை உருவாக்குவதிலும் பழையவற்றைச் சேமிப்பதிலும் கவனம் செலுத்துங்கள். பல பிரச்சனைகள் இருக்கலாம் ஆனால் குறுக்குவழிகளை எடுக்க வேண்டாம்.நேர்மையாக செயல்பட்டு பொறுமையை கடைபிடித்தால் வெற்றி நிச்சயம்.

கும்பம் வார ராசிபலன்: இந்த வாரம் கும்ப ராசிக்காரர்கள் புதிய வேலைகளில் ஆர்வமாக ஈடுபடுவார்கள். உற்சாகமாக இருப்பார்கள். பொருளாதார நன்மை அடைவீர்கள். எனினும் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். குடும்பத்தில் ஒருவரின் உடல்நிலை மோசமடையலாம். அரசியலில் ஈடுபடுபவர்கள் பலன் அடைவார்கள்.

மீனம் வார ராசிபலன்: இந்த வாரம் மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு பெரிய வாய்ப்பு கிடைக்கலாம். நல்ல செய்திகள் கிடைக்கும். நீங்கள் பெரிய சாதனைகளை செய்ய முடியும். மொத்தத்தில், இந்த நேரம் மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பிப்ரவரி 2023 ராசி பலன்: ‘இந்த’ ராசிகளுக்கு பண விரயம்; நிதி நெருக்கடி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News