மேஷத்தில் குரு பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு பம்பர் ஜாக்பாட் லாபம்

Jupiter Transit 2023: ஜோதிட சாஸ்திரப்படி இந்த வருடம் குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப் பெயர்ச்சியாகப் போகிறார். இந்த காலகட்டத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 5, 2023, 04:12 PM IST
  • 12 ஆண்டுக்கு பிறகு மேஷத்தில் குரு பெயர்ச்சி.
  • யாருக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • என்ன பரிகாரம் செய்ய வேண்டும்.
மேஷத்தில் குரு பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு பம்பர் ஜாக்பாட் லாபம்

குரு பெயர்ச்சி 2023: குரு பகவான் ஒரு ராசி மண்டலத்தை கடக்க 12 ஆண்டுகள் எடுத்துக்கொள்வார் குருபகவான். ராசி மண்டலத்தின் கடைசி ராசியான மீன ராசியில் ஆட்சி பெற்று இருக்கும் குருபகவான் கடகம், கன்னி, விருச்சிகம் ராசிகளை பார்வையிடுகிறார். அந்த வகையில் தற்போது 12 வருடங்களுக்குப் பிறகு குரு பகவான் மீன ராசியை விட்டு மேஷ ராசியில் பெயர்ச்சியாகப் போகிறார். இந்த பெயர்ச்சி 22 ஏப்ரல் 2023 அன்று நடக்க உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், அதன் சுப பலன் பல ராசிகளில் தென்படும்.

குரு பார்வை
குருவின் பார்வை ஒருவர் மீது விழுந்தால், அந்த நபர் வாழ்வில் சகல ஐஷ்வர்யங்களையும் வெற்றிகளையும் பெறுவார்கள். எனவே குரு பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று பார்ப்போம். 

மேலும் படிக்க | தைப்பூசம் 2023: விரதம் இருப்பது எப்படி? வழிபாட்டிற்கான சரியான நேரம் எது?

மேஷ ராசி: உங்கள் பணியிடத்தில் சக்தி அதிகரிக்கும். அதே சமயம் வாழ்க்கைத்துணையுடனான உறவில் பலம் ஏற்படும். பதவி உயர்வு, முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களும் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டியது வரும். மேலதிகாரிகளிடம் பேசும் போது கவனம் தேவை. உயரதிகாரியின் பார்வை உங்கள் மேல் விழும்.

கடக ராசி: கடக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி சாதகமாக அமையும். பொருளாதார ரீதியாக பல நன்மைகள் ஏற்படும். நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வீடு நிலம் வாங்கலாம். வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யலாம். வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் கவனம், மேலதிகாரிகளின் உத்தரவுக்கு கட்டுப்படுங்கள்.

மீனம் ராசி: மீன ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சாதகமாக இருக்கும். திடீர் பண பலன்களைப் பெறுவீர்கள். உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி வரும். சிலருக்கு வேலையில் புரமோசன் சம்பள உயர்வு கிடைக்கும். வார்த்தைகளில் கவனமாக இருக்கவும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Shani: ஏழரை நாட்டு சனியின் கெடு பலன்களால் அவதி! இந்த தவறை தவிர்த்தால் போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News