கடன் வலையில் சிக்க வைக்கும் ஏழரை நாட்டு சனி... சில ‘எளிய’ சனி பரிகாரங்கள்!

கடன் பிரச்சனையில் சிக்கிக் கொண்டால், அதிலிருந்து அவ்வளவு சீக்கிரம் வெளியேற முடியாது. கடன் பிரச்சனையால் போராடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் இருந்து விடுபட குறிப்பிட்ட  4 பரிகாரங்கள் மிகவும் பலன் தரும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 1, 2023, 04:52 PM IST
  • சனி தோஷம் நீங்க பரிகாரங்கள்.
  • கடன் வலையில் சிக்க வைக்கும் ஏழரை நாட்டு சனி.
  • சனியின் கோபம் நீங்கி கடனில் இருந்து விடுபடலாம்.
கடன் வலையில் சிக்க வைக்கும் ஏழரை நாட்டு சனி... சில ‘எளிய’ சனி பரிகாரங்கள்! title=

வாழ்க்கையில் தனது குடும்பத்தை நடத்தவும், நெருக்கடி நிலையை சமாளிக்கவும், பலருக்கு கடன் வாங்க வேண்டியுள்ளது. அந்தக் கடன்கள் அனைத்தையும் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்த தன்னால் இயன்றவரை முயற்சி செய்தால், பல சமயங்களில் முடியாமல் போய் விடுகிறது. பல நேரங்களில் அவரது திட்டம் வெற்றியடையாமல் கடன் வலையில் சிக்கிக் கொள்கிறார். கடனாளிகள் தனது மகிழ்ச்சி, அமைதி அனைத்தும் இழந்து வாழ்க்கை பல சமயங்களில் நரகமாக ஆகி விடுகிறது . நீங்களுக்கு அதே போன்று,  கடன் வலையில் சிக்கியிருந்தால், கவலைப்பட வேண்டாம். சனிக்கிழமைகளில் செய்யப்படும் 4 உறுதியான பரிகாரங்கள் மூலம், கடன் தொலைகளில் இருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கையை வாழலாம். 

சனி பகவானுக்கான கடன் நிவாரண பரிகாரம்

கடன் வலையில் சிக்க வைக்கும் ஏழரை நாட்டு சனி

ஜோதிட சாஸ்திரப்படி, ஏழரை நாட்டு சனி கால கட்டத்தில் , கடன் வலையில் மிக விரைவாக சிக்கிக் கொள்வார்கள். இந்த நிலையில் இருந்து விடுபட, ஒவ்வொரு சனிக்கிழமையும் உங்கள் உணவில் சிவப்பு மிளகாய்க்கு பதிலாக கருப்பு மிளகு பயன்படுத்தவும். மேலும் வெள்ளை உப்புக்கு பதிலாக கருப்பு உப்பு சேர்க்கவும். இதற்குப் பிறகு, சனி தேவருக்கு உணவை அர்ப்பணித்த பிறகு குடும்பத்தில் உள்ளவர்கள் அதை சாப்பிட வேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம், கடன் வலையில் இருந்து மீளலாம் என்று கூறப்படுகிறது.

மீன்களுக்கு உணவு

சனி தோஷமும் தலையில் கடன் பெற ஒரு காரணமாக இருக்கலாம். அதை அகற்ற, சனிக்கிழமையன்று மீன்களுக்கு உணவளிக்கவும். இதைச் செய்வதன் மூலம் சனி தேவர் மகிழ்ச்சியடைந்து ஆசீர்வாதங்களைப் பொழிவார் என்று நம்பப்படுகிறது. இந்த பரிகாரத்தை செய்தால், சில வாரங்களில், கடன் வலையில் இருந்து விடுபடலாம்.  இது தவிர ஏழை எளியவர்களுக்கு தானம் செய்யுங்கள். அவருக்கு உணவு, உடைகள், காலணிகள் மற்றும் செருப்புகளை தானம் செய்யுங்கள். இது சனி பகவானை மகிழ்விக்கிறது. இது தவிர கருப்பு எள், கருப்பு வஸ்திரம் தானம் செய்வதும் நல்லது.

மேலும் படிக்க | செவ்வாய் பெயர்ச்சியின் கெடு பலன்களில் இருந்து தப்பிக்க ‘சில’ பரிகாரங்கள்!

சனி தோஷம்  நீங்க பரிகாரங்கள்

சில சமயங்களில் நமது ஜாதகத்தில் சனிதோஷம் இருப்பதால் கடன் அதிகமாகும். விருப்பமில்லாமல் கடன் வாங்குகிறோம். மேலும் கடன் சுழலில் சிக்கிக் கொண்ட பின்னர் அதை திருப்பிச் செலுத்துவது மிகவும் கடினம். னில் இருந்து விடுபடுவீர்கள். சனி தோஷம் நீங்க, உளுந்து, கறுப்பு எள், இரும்பு ஆகியவற்றை கருப்பு துணியில் நனைத்து எண்ணெயில் தோய்த்து, சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். இது நிவாரணம் தரும். மேலும், சனி பகவானின் சாலிசாவைப் பாராயணம் செய்யுங்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் சனி சாலிசா, சனி ஸ்தோத்திரம் அல்லது சனி தசரத்கிருத ஸ்தோத்திரம் பாராயணம் செய்வது மிகவும் நல்லது.

தானங்கள்

தலையில் உள்ள கடனை குறைக்க, வருமானத்தை அதிகரிக்க வேண்டியது அவசியம். இதற்காக, சனிக்கிழமையன்று விரதம் இருந்து, அன்றைய தினம் கருப்பு பறவை (காகம்), கருப்பு நிற பசு அல்லது கருப்பு நாய்க்கு உணவளிக்கவும். இந்த நாளில் சனி தேவருக்கு கருப்பு உளுத்தம் பருப்பை அர்பணிப்பதும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஏழ மக்களுக்கு அன்ன தானம் செய்யவும்.  இவ்வாறு செய்வதன் மூலம் சனியின் கோபம் நீங்கி கடனில் இருந்து விடுபடலாம்.

அரச மரத்தின் வேருக்கு நீர் வழங்குங்கள்

ஜாதகத்தில் சனி கிரக பலவீனம் காரணமாக,  கடன் சுமை அதிகரிக்கத் தொடங்குகிறது. இது நிகழும்போது, ​​​​சனி தேவர் அவருக்கு கடன் சுமையை கொடுத்து தொந்தரவு செய்கிறார். சனியை மகிழ்விக்க, ஒவ்வொரு சனிக்கிழமையும்  தண்ணீரில் பால் மற்றும் சர்க்கரை கலந்து பீப்பல் மரத்தின் வேரில் ஊற்றி அர்பணிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் பொருளாதார நிலை மேம்படும் என்பது ஐதீகம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சுக்கிரனின் அருளால் ஏப்ரலில் ராஜ வாழ்க்கை வாழப்போகும் ‘சில’ ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News