குருவின் மாற்றத்தால் உருவாகும் மகாபுருஷ யோகம்: இந்த ராசிகளுக்கு பொற்காலம்

Jupiter Transit: வியாழன் மீனத்தில் சஞ்சரிக்கும் போது பஞ்ச மகாபுருஷ ராஜயோகம் உருவாகும். இந்த யோகத்தால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அபரிமிதமான மகிழ்ச்சி கிடைக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 12, 2022, 06:18 PM IST
  • கன்னி ராசியின் நான்காவது மற்றும் ஏழாவது வீடுகளுக்கு வியாழன் அதிபதியாக உள்ளார்.
  • குருவின் மாற்றத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு பணம் ஈட்டுவதற்கான பல வாய்ப்புகள் உருவாகும்.
  • பண வரவு அதிகரிக்கும்.
குருவின் மாற்றத்தால் உருவாகும் மகாபுருஷ யோகம்: இந்த ராசிகளுக்கு பொற்காலம் title=

குருவின் நிலை மாற்றம்: ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் நிலையை மாற்றுகின்றன. கிரகங்களின் நிலை மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் பல மாற்றங்கள் ஏற்படும். தற்போது தேவகுரு வியாழன் வக்ர நிலையில் உள்ளார். நவம்பர் 24 அன்று அவர் வக்ர நிலையிலிருந்து மாறி தனது இயல்பு நிலைக்கு மாறவுள்ளார். ஜூலை 29 ஆம் தேதி, வியாழன் மீனத்தில் வக்ரமானார். நவம்பர் 24 ஆம் தேதி அவர் தனது நிலையை மாற்றவுள்ளார். குருவின் இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

வியாழன் மீனத்தில் சஞ்சரிக்கும் போது பஞ்ச மகாபுருஷ் ராஜயோகம் உருவாகும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு இதன் சிறப்பு பலன்கள் கிடைக்கும். இந்த யோகத்தால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அபரிமிதமான மகிழ்ச்சி கிடைக்கும். குருவின் மாற்றத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கப்போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

மேஷம்:

ஜோதிடத்தின் படி, மேஷ ராசியின் ஒன்பதாம் மற்றும் 12 ஆம் வீடுகளுக்கு வியாழன் அதிபதியாக உள்ளார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த ராசிக்காரர்களுக்கு குருவின் பாதை மாற்றம் சிறப்பாக பலனளிக்கப் போகிறது. இந்த காலகட்டத்தில் அலுவலக வேலையில் உள்ளவர்கள் இடமாற்றம் பெறலாம். இதுமட்டுமின்றி, இந்த காலகட்டத்தில் புதிய வருமான ஆதாரங்களும் உருவாகும். 

மேலும் படிக்க | ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் சிக்கப்போகும் ராசிகள் இவைதான்: இந்த பரிகாரங்கள் உதவும்

மிதுனம்:

ஒரு கிரகம் மார்கி ஆகிறது என்றால், அது தனது இயல்பான பாதையில் பயணிக்கத் தொடங்குகின்றது என்று பொருள். குருவின் இந்த மாற்றத்தின் பலன் மிதுன ராசியில் தெரியும். வியாழன் மிதுன ராசியின் 8 மற்றும் 11 ஆம் வீட்டிற்கு அதிபதியாக உள்ளார். ஆகையால், இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறப் போகிறார்கள். நீங்கள் புதிய தொழிலில் முதலீடு செய்ய நினைத்தால், இந்த நேரம் சாதகமாக இருக்கும். இக்காலத்தில் தடைபட்ட பணிகள் வேகம் பெறும். சிக்கிய பணம் திரும்பக் கிடைக்கும். இதுமட்டுமின்றி, பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். மேலும் அந்த நபருக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

கடகம்:

ஜோதிட சாஸ்திரப்படி வியாழன் கிரகத்தின் பாதை மாற்றம் கடக ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியைத் தரப் போகிறது. இவர்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். எடுத்த அனைத்து காரியங்களையும் வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள். குடும்பத்துடனான உறவு இனிமையாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

கன்னி:

கன்னி ராசியின் நான்காவது மற்றும் ஏழாவது வீடுகளுக்கு வியாழன் அதிபதியாக உள்ளார். குருவின் மாற்றத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு பணம் ஈட்டுவதற்கான பல வாய்ப்புகள் உருவாகும். பண வரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் மகத்தான வெற்றியைப் பெறுவீர்கள். மேலும், அலுவலக பணிகளில் இருப்பவ்ரகளுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Name Astrology: இந்த '5' எழுத்துகள் உங்கள் பெயரில் உள்ளதா? அப்போ அதிர்ஷ்டசாலி நீங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News