குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், நல்ல காலம் ஆரம்பம்!!

Guru Peyarchi: ரிஷப ராசியில் குருவின் பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் பல வித மாற்றங்களை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு இந்த பெயர்ச்சி அதிகப்படியான நற்பலன்களை அளிக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 27, 2024, 04:12 PM IST
  • கடக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி விசேஷ பலன்களை கொண்டு வரும்.
  • பொருளாதார ரீதியாக மிகப்பெரிய மேன்மை அடைவீர்கள்.
  • பணியிடத்தில் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், நல்ல காலம் ஆரம்பம்!!

Guru Peyarchi: ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. ராசிகள் மட்டுமின்றி, கிரகங்களின் நட்சத்திரங்கள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பலவித மாற்றங்கள் ஏற்படுகின்றன. அனைத்து கிரகங்களும் தங்கள் ராசிகளை அவ்வப்போது மாற்றினாலும் சில குறிப்பிட்ட கிரகங்களின் ராசி மாற்றங்கள் ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியமான நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன.

Add Zee News as a Preferred Source

ஜோதிட சாஸ்திரத்தில் குரு பெயர்ச்சிக்கும் சனிப்பெயர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த இரு கிரகங்களும் தங்கள் ராசிகளை மாற்றும்போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் அதிகப்படியாக இருக்கின்றது. குருபகவான் சுமார் 13 மாதங்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். இன்னும் சில மாதங்களில் குரு பெயர்ச்சி நடக்க இருக்கின்றது. 2024 மே ஒன்றாம் தேதி மதியம் 2:29 மணிக்கு குரு தனது சொந்த ராசியான மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

ரிஷப ராசியில் குருவின் பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் பல வித மாற்றங்களை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு இந்த பெயர்ச்சி அதிகப்படியான நற்பலன்களை அளிக்கும். இவர்கள் வாழ்வில் சுபிட்சம் இருக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த சுப காரியங்கள் இப்போது நடைபெறும். இந்த ராசிக்காரர்களின் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் மேலோங்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகள் (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.

மேஷம் (Aries)

சுமார் பதிமூன்று மாதங்களுக்கு பிறகு குரு மேஷத்தில் இருந்து விலகி ரிஷப ராசிக்குள் பெயர்ச்சியாக உள்ளார். இதன் காரணமாக மேஷ ராசியில் சுபமான மற்றும் ஆக்கப்பூர்வமான பலன்களை காண முடியும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பல வேலைகள் இப்போது வெற்றிகரமாக நடந்து முடியும். செல்வச் செழிப்பு அதிகரிக்கும். நல்ல செய்திகளை பெறுவீர்கள். நீங்கள் செய்யும் அனைத்து வேலைகளிலும் வெற்றியை காண்பீர்கள். பணியிடத்தில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கல்வித்துறையில் புதிய உச்சங்களை தொடுவீர்கள். நிதிநிலை நன்றாக இருக்கும்.

மேலும் படிக்க | மகா சிவராத்திரி 2024... ராசிகளுக்கு ஏற்ற ‘சில’ எளிய பரிகாரங்கள்!

ரிஷபம் (Taurus)

ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி சுகமானதாக இருக்கும். பணியிடத்தில் உங்களுக்கு பெரிய வெற்றி கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு இப்பொழுது புதிய வேலை கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். பண வரவு அதிகமாகும். வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். திருமணத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு இப்போது திருமணம் நடந்து முடியும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அனைத்து பணிகளிலும் நாட்டம் அதிகரிக்கும்.

கடகம் (Cancer)

கடக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி விசேஷ பலன்களை கொண்டு வரும். பொருளாதார ரீதியாக மிகப்பெரிய மேன்மை அடைவீர்கள். பணியிடத்தில் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் மன நிம்மதி நிலைத்திருக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள கடக ராசிக்காரர்களுக்கு இது லாபத்திற்கான காலமாக இருக்கும். புதிய திட்டங்களை தீட்டி புதிய ஒப்பந்தங்களில் ஈடுபட நினைப்பவர்கள் அதை இப்பொழுது தாராளமாக செய்யலாம். வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பரிபூரண ஆதரவு கிடைக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் உங்கள் உறவு நன்றாக இருக்கும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி 2024: அதிர்ஷ்டம், பண வரவு.... மகிழ்ச்சி உச்சம் இந்த ராசிகளுக்கு தான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News