Mars transit: 69 நாட்களுக்கு பண மழை! மிதுன ராசியில் நவபஞ்சம் யோகம்

Mangal Gochar 2023: மார்ச் 13, 2023 அன்று செவ்வாய் மிதுன ராசிக்குள் நுழைகிறார். செவ்வாய் மிதுன ராசியில் 69 நாட்கள் தங்குகிறார். மிதுன ராசியில் செவ்வாய் தங்குவதால் நவம பஞ்சம யோகம் உண்டாகும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 8, 2023, 07:10 PM IST
  • மிதுன ராசியில் நவபஞ்சம் யோகம்
  • 2 மாசத்துக்கு வாழ்க்கையை ஜாலியா எஞ்ஞாய் பண்ணுங்க
  • செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள்
Mars transit: 69 நாட்களுக்கு பண மழை! மிதுன ராசியில் நவபஞ்சம் யோகம் title=

Mangal Gochar 2023: தற்போது ரிஷப ராசியில் சஞ்சரித்து வரும் செவ்வாய்,மார்ச் 13, 2023 அன்று செவ்வாய் மிதுன ராசிக்குள் நுழைகிறார். செவ்வாய் மிதுன ராசியில் 69 நாட்கள் தங்குகிறார். மிதுன ராசியின் கிரக அதிபதி செவ்வாய் தற்போது ரிஷப ராசியில் சஞ்சரித்து வருகிறார். மார்ச் 13, 2023 அன்று செவ்வாய் மிதுன ராசிக்குள் நுழைகிறார். செவ்வாய் மிதுன ராசியில் 69 நாட்கள் தங்குகிறார். மிதுன ராசியில் செவ்வாய் தங்குவதால் நவம பஞ்சம யோகம் உண்டாகும்.

இந்த காலகட்டத்தில், சூரியனும் வியாழனும் தங்கள் ராசியை மாற்றுகிறார்கள். செவ்வாய் பெயர்ச்சி சிலருக்கு மிகவும் சாதகமாக இருக்கும். தைரியத்தையும், வீரத்தையும் தொடர்ந்து அதிகரிக்கும் பெயர்ச்சிகளால் சில ராசிகளுக்கு மிகவும் அதிக நன்மை ஏற்படும்.  

மிதுனம்: செவ்வாய் கிரகம், மிதுன ராசிக்குள் வந்ததும், இந்த ராசிக்காரர்கள் பெரிய அளவிலான நற்பலன்களைப் பெறுவார்கள். நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகும். சொத்துக்களால் லாபம் உண்டாகும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். சமூகத்தில் அதிக மரியாதை கிடைக்கும்.

மேஷம்: மேஷ ராசிக்கு, இன்னும் 4 நாட்களில் அதிர்ஷ்டம் அதிகரிக்கும், காலம் சாதகமாக இருக்கும். இதற்கு காரணம், செவ்வாய்ப் பெயர்ச்சி ஆகும். செவ்வாய்ப் பெயர்ச்சியால், நேர்மறை ஆற்றலும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளும் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரித்து தடைப்பட்ட வேலையை முடிப்பீர்கள். பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறலாம். தந்தையின் ஆதரவு கிடைக்கும்.

மேலும் படிக்க | 700 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் பஞ்ச யோகம்! ‘இந்த’ ராசிகள் தொட்டது அனைத்தும் துலங்கும்! 

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு நிதி விஷயங்களில் வலுவான லாபம் கிடைக்கும். பழைய முதலீடு லாபகரமாக இருக்கும். பணத்தை முதலீடு செய்வதால் நல்ல லாபம் கிடைக்கும். சம்பளம் கூடும். பண வரத்தும் சாதகமாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். சட்ட சிக்கல்கள் ஏதேனும் இருந்தால், அவற்றிலும் வெற்றி கிடைக்கும். 

மகரம் : மகர ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி நல்ல பலன்களைத் தரும் . விரும்பிய வேலை கிடைக்கும்.தொழில் செய்பவர்களுக்கு நல்ல நேரம். பணம் வந்து சேர்வதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

கன்னி: செவ்வாய் சஞ்சாரம் கன்னி ராசிக்கு பதவி உயர்வு தரும். மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். விருதுகள் வந்து சேரலாம். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். நம்பிக்கை தொடர்ந்து அதிகரிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | தோஷங்கள் அனைத்தையும் நீக்கி, சகல செல்வங்களையும் கொடுக்கும் கோபூஜை!

மேலும் படிக்க | Sani Palan: நண்பர்களையும் பகைவராக்கும் சனி உதயம்! எச்சரிக்கை 3 ராசிக்காரர்களே

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News