ஜூன் 1 செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், செழிக்க வைப்பார் செவ்வாய்

Sevvai Peyarchi: ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இந்த மாற்றங்கள் கிரக பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 29, 2024, 11:45 AM IST
  • மிதுன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி பல நன்மைகளை அள்ளித்தரும்.
  • செவ்வாயும் சனியும் சேர்ந்து மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அள்ளித் தருவார்கள்.
  • பணியிடத்தில் புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள்.
ஜூன் 1 செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், செழிக்க வைப்பார் செவ்வாய் title=

Sevvai Peyarchi: ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இந்த மாற்றங்கள் கிரக பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கின்றது.

கிரகங்களின் சேனாதிபதியாக கருதப்படும் செவ்வாய் சுமார் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். தன்னம்பிக்கை, தைரியம், வீடு, நிலம், மனை ஆகியவற்றின் காரணி கிரகமாக இருக்கும் செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். செவ்வாய் பெயர்ச்சியாகும் போது அவர் காரணியாக இருக்கும் அம்சங்களில் மாற்றங்கள் ஏற்படும். 

ஜோதிட கணக்கீடுகளின் படி செவ்வாய் ஜூன் ஒன்றாம் தேதி மதியம் 3:27 மணிக்கு மேஷ ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். மேஷத்தில் செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு இது அதிகப்படியான நன்மைகளை அளிக்கும்.

இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். அடுத்த 42 நாட்களுக்கு இவர்களுக்கு அனுகூலமான நன்மைகள் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். பண வரவு அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.

மேஷம் (Aries)

மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான பொழுதை கழிப்பீர்கள். அனைத்து துறைகளிலும் வெற்றி காண்பீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். இதன் காரணமாக பொருளாதார நிலை மேம்படும். தான தர்மத்தில் ஈடுபடுவீர்கள்.

வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மேஷ ராசிக்காரர்களுக்கு இப்பொழுது லாபம் அதிகமாகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் அன்பும் புரிதலும் அதிகரிக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். பல இடங்களில் இருந்து வருமானம் இருக்கும். பணத்தை சேமிப்பதிலும் வெற்றி பெறுவீர்கள். உடல்நிலை நன்றாக இருக்கும்.

மேலும் படிக்க | குரு உதயம்: ஜூன் 6 முதல் இந்த ராசிகளுக்கு குபேர யோகம், வீட்டில் சுபீட்சம் கூடும்

மிதுனம் (Gemini)

மிதுன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி பல நன்மைகளை அள்ளித்தரும். செவ்வாயும் சனியும் சேர்ந்து மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அள்ளித் தருவார்கள். பணியிடத்தில் புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். உங்கள் பணி பாராட்டப்படும். மேல் அதிகாரிகளின் முழுமையான ஆதரவு கிடைக்கும். ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் நீண்ட கால ஆசைகள் பல நிறைவேறும். 

வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு இது லாபகரமான நேரம். இப்பொழுது அதிக லாபம் காண்பீர்கள். உங்கள் பொருளாதார நிலை மேம்படும். வருமானத்திற்கான அதிக வழிகள் திறக்கும். வாழ்க்கைத் துணையுடன் உறவு மேம்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

கடகம் (Cancer)

செவ்வாய் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு பலவித நன்மைகளை அள்ளித்தரும். இந்த காலத்தில் அதிகப்படியான மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பல பணிகள் இப்பொழுது வெற்றிகரமாக நடந்து முடியும். உங்கள் கடின உழைப்பிற்கான பலன்கள் இப்பொழுது கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அதிகப்படியான முன்னேற்றத்தை காண்பீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவுடன் உங்கள் இலக்குகளை எளிதாக அடைவீர்கள்.

அரசு வேலைகளுக்காக தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு இப்பொழுது கண்டிப்பாக வேலை கிடைக்கும். வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் கடக ராசிக்காரர்களுக்கு லாபம் அதிகரிக்கும். உங்கள் கடின உழைப்பு மற்றும் புத்திசாலித்தனத்தால் வியாபாரத்தில் வெற்றி காண்பீர்கள். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். எதிர்பாராத இடங்களில் இருந்து பண வரவு இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 18 ஆண்டுகளுக்குப் பிறகு சனி நட்சத்திரத்தில் நுழையும் ராகு..! 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News