குரு நட்சத்திர பெயர்ச்சியால் இந்த ராசிகள் மீது குரு பார்வை... மகிழ்ச்சியில் திளைப்பார்கள்

Guru Nakshatra Peyarchi Palangal: குரு நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 15, 2024, 02:27 PM IST
  • மிதுன ராசிக்காரர்களுக்கு குரு நட்சத்திர பெயர்ச்சி சுபமானதாக இருக்கும்.
  • வேலை, வியாபாரத்தில் நன்மைகள் ஏற்படும்.
  • திருமணமானவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும்.
குரு நட்சத்திர பெயர்ச்சியால் இந்த ராசிகள் மீது குரு பார்வை... மகிழ்ச்சியில் திளைப்பார்கள் title=

Guru Nakshatra Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு சிறப்பான முக்கியத்துவம் உள்ளது. கிரகங்களின் ராசி மாற்றம் கிரக பெயர்ச்சி என்று அழைக்கப்படுகின்றது. ராசிகளை தவிர கிரகங்களின், நட்சத்திரம், உதய, அஸ்தமான நிலைகள், வக்கிரப் பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பல வித மாற்றங்கள் ஏற்படுகின்றன.

அனைத்து கிரகங்களிலும் சனி பகவானும், குரு பகவானும் மிகவும் முக்கியமான கிரகங்களாக பார்க்கப்படுகின்றன. இந்த கிரகங்களில் ஏற்படும் சிறிய மாற்றங்களும் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக கருதப்படுகின்றன. மே ஒன்றாம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் பெயர்ச்சியானார். சுமார் ஒரு ஆண்டு காலம் அவர் இந்த ராசியில் இருப்பார். இதற்கிடையில் அவர் பல வித மாற்றங்களை மேற்கொள்வார்.

ஜூன் 13ஆம் தேதி குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் பெயர்ச்சியாகியுள்ளார். குரு நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். இவர்களுக்கு வியாபாரம் விருத்தி அடையும். பண வரவு அதிகமாகும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் (Zodaic Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.

மேஷம் (Aries)

குரு நட்சத்திர பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். எதிர்பாராத இடங்களில் இருந்து பணவரவு இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பண வரவு அதிகம் ஆவதால் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். திருமணத்திற்காக காத்திருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு இப்பொழுது திருமணம் நிச்சயமாகும். உங்களது அனைத்து ஆசைகளும் நிறைவேறும். வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு இப்பொழுது லாபம் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | நட்பை பலப்படுத்தும் புதன்-சுக்கிரன் ஃப்ரெண்ட்ஷிப்! லட்சுமி நாராயண யோகத்தின் ஆசி பெறும் ராசிகள்!

ரிஷபம் (Taurus)

ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் வேலை கிடைக்கும். ஏற்கனவே நல்ல வேலையில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முழுமையான ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான பொழுதே கழிப்பீர்கள். வேறு ஊர்களுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ சுற்றுலா செல்வீர்கள். இந்த பயணங்களால் உங்களுக்கு அனுகூலமான நன்மைகள் ஏற்படும். உங்கள் பணித்திறன் மேம்படும். அலுவலகத்தில் உங்கள் பணி பாராட்டப்படும்.

மிதுனம் (Gemini)

மிதுன ராசிக்காரர்களுக்கு குரு நட்சத்திர பெயர்ச்சி சுபமானதாக இருக்கும். உங்களுக்கு வேலை, வியாபாரத்தில் நன்மைகள் ஏற்படும். திருமணமானவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும். எதிர்பாராத இடங்களில் இருந்து பணவரவு இருக்கும். குரு பகவான் உங்கள் பேச்சாற்றலையும், எழுத்தாற்றலையும் மேன்மைப்படுத்துவார். கணவன் மனைவி இடையே அன்பும் புரிதலும் அதிகரிக்கும். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பல புதிய ஒப்பந்தங்களுடன் லாபம் பெருகும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் வெற்றி... மகிழ்ச்சியான வாழ்க்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News