குரு - ராகு கூட்டணி: தொல்லைக்கு உள்ளாகும் ஐந்து ராசிகள்... கண்ணும் கருத்துமாக இருங்க!

Guru Peyarchi 2023: மேஷ ராசியில் ஏற்கெனவே ராகு குடியிருக்கும் நிலையில், வரும் ஏப்.22ஆம் தேதி முதல் குருவும் அந்த ராசியில் நுழைகிறார், இதனால் இந்த 5 ராசிகள் பாதிக்கப்படுவார்கள். 

Written by - Sudharsan G | Last Updated : Mar 24, 2023, 07:32 AM IST
  • குரு - ராகு கூட்டணியால் குரு சண்டாள யோகம் உருவாகும்.
  • இதனால், பல விஷயங்களில் இந்த 5 ராசிகள் தொல்லைக்கு ஆளாவார்கள்.
  • இது அக். 30ஆம் தேதி வரை நீடிக்கும்.
குரு - ராகு கூட்டணி: தொல்லைக்கு உள்ளாகும் ஐந்து ராசிகள்... கண்ணும் கருத்துமாக இருங்க!

Guru Peyarchi 2023: ஜோதிடத்தில் குரு நல்ல அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் கிரகமாக கருதப்படுகிறார்ய ராகு, பாவ கிரகம் என்று அழைக்கப்படுகிறது. வரும் ஏப். 22ஆம் தேதி, குரு மேஷ ராசியில் நுழைகிறார். 

இந்த ராசியில், குரு சுமார் ஒரு வருடம் நிலைத்திருப்பார். மறுபுறம், ராகு ஏற்கனவே மேஷத்தில் உள்ளது, இதன் காரணமாக மேஷத்தில் ராகு மற்றும் குரு இணைவு உருவாகும். குரு - ராகுவின் கூட்டணி குரு சண்டாள யோகத்தை உருவாக்கும்.

இது இந்த ஐந்து ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரும் தொந்தரந்தவை உருவாக்கும். வரும் அக். 30ஆம் தேதி வரை ராகு மேஷ ராசியில் இருப்பார். எனவே இதுவரை இவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

மேலும் படிக்க | சுக்கிரன் அருளால் சித்திரையில் ராஜ யோகத்தை அனுபவிக்க உள்ள ‘6’ ராசிகள்!

மேஷம்

மேஷ ராசியிலேயே ராகு, வியாழன் இணைவதால் இவர்களுக்கு நல்லது என்று சொல்ல முடியாத குரு சாண்டாள யோகம் உருவாகும். ஏமாற்றமே இவர்களை ஆட்கொள்ளும். செயல்களில் தோல்வி ஏற்படும். செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் மோசமான விளைவு ஏற்படலாம்.

மிதுனம்

குரு சண்டாள யோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு பணத்திலும், ஆரோக்கியத்திலும் தொல்லை தரும். தொழிலிலும் பிரச்சனைகள் வரலாம். எந்த முடிவையும் கவனமாக எடுங்கள். பணியிடத்தில் சர்ச்சை வேண்டாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களின் பணிகளில் குரு சண்டாள யோகம் தடைகளை ஏற்படுத்தும். வருமானம் குறையலாம். வீட்டில் தகராறு மற்றும் பதட்டமான சூழ்நிலை இருக்கலாம். தொழிலில் பிரச்சனை வரலாம்.

தனுசு

குரு சண்டாள யோகம் உருவாகும் போது, தனுசு ராசிக்காரர்கள் விபத்து மற்றும் நோய்களில் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொருளாதார நிலை மோசமடையலாம். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படலாம், கவனமாக முதலீடு செய்யுங்கள். உத்தியோகத்தில் சவால்களையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு குரு சாண்டாள யோகம் வாழ்வில் பல வகையான போராட்டங்களைக் கொடுக்கும். வீட்டில் சண்டை சச்சரவுகள் வரலாம். செலவுகள் அதிகரித்துக்கொண்டே இருக்கும். திருமண வாழ்வில் விரிசல் ஏற்படலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மிடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சியால் 4 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்..! நல்ல காலம் பிறக்கப்போகிறது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News