குரு பெயர்ச்சி 2024 ... சிலருக்கு சாதகம்... சிலருக்கு பாதகம்... உங்கள் ராசி என்ன?

குரு பெயர்ச்சி பலன்கள்: குரு பெயர்ச்சி சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் கொடுக்க கூடியதாக இருக்கும். இந்நிலையில் எந்தெந்த ராசிக்காரர்கள் பயனடைவார்கள், யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 5, 2024, 04:39 PM IST
  • குரு பெயர்ச்சியினால் ஆதாயத்தை பெற இருக்கும் சில ராசிகள்
  • குரு பெயர்ச்சியினால் வாழ்க்கையில் பாதிப்பை சந்திக்கப் போகும் சில ராசிகள்.
  • குரு பகவான் 2024 மே மாதம், மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
குரு பெயர்ச்சி 2024 ... சிலருக்கு சாதகம்... சிலருக்கு பாதகம்... உங்கள் ராசி என்ன? title=

குரு பெயர்ச்சி பலன்கள்: குரு பகவான் 2024 மே மாதம், மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்ளும் நிலையில், 2025 மே மாதம் 14ஆம் தேதி வரை ரிஷப ராசியில் இருப்பார். குரு பெயர்ச்சி சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் கொடுக்க கூடியதாக இருக்கும். இந்நிலையில் எந்தெந்த ராசிக்காரர்கள் பயனடைவார்கள், யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

குரு பெயர்ச்சியினால் ஆதாயத்தை பெற இருக்கும் சில ராசிகள்

மேஷ ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்

மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும். நீங்கள் கை வைத்த காரியம் அனைத்தும் வெற்றி பெறும். பணியிடத்தில் உங்கள் வேலை திறன் பாராட்டப்படும். மாணவர்கள் போட்டி தேர்வில் வெற்றி பெற்று, அவர்களுக்கு பிடித்த உயர்கல்வியில் இணைய வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலைமையும் சிறப்பாக இருக்கும்.

ரிஷப ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்

ரிஷப ராசி எனை பொறுத்த வரை, இந்த ஒரு வருட காலம், மிகவும் மங்களகரமான நேரமாக இருக்கும். ஆன்மீகத்தின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு இது மிகவும் சிறந்த ஆண்டாக இருக்கும். தொழிலில் இருப்பவர்கள் வெற்றியை குதிப்பார்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

மிதுன ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்

மிதுன ராசியினரை பொறுத்தவரையில், குரு பகவான், செல்வ வளத்தை அள்ளிக் கொடுப்பார். இந்த காலகட்டத்தில் நிதி ஆதாயம் காரணமாக பொருளாதார நிலை மேம்படும். வேலையில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. வணிகத்தில் இருப்பவர்கள், தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வார்கள்.

கடக ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்

கடக ராசி அதை பொருத்தவரை, குரு பெயர்ச்சியின் இந்த காலகட்டம், எல்லாவற்றிலும் வெற்றியை அள்ளிக் கொடுக்கும் காலமாக இருக்கும். தொழிலில், தனி இடத்தை பிடித்துக் கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு, சக ஊழியர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவார்கள்.

சிம்ம ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்

சிம்ம ராசியினரை பொறுத்தவரை, குரு பெயர்ச்சியின் இந்த காலகட்டம் அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் காலமாக இருக்கும். நிதி நிலைமை மேம்படும். இதனால் கடன் தொல்லைகளிலிருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கையை தொடங்குவீர்கள்.

கன்னி ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்

கன்னி ராசியின் அதை பொறுத்தவரை, இந்த காலகட்டத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவை திருப்திகரமாக இருக்கும். வேலையில் வளர்ச்சிக்கான அனைத்து வாய்ப்புகளும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 

தனுசு ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்

தனுசு ராசிக்கு குரு பகவான், அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்குவார். வேலை தேடுபவர்களுக்கு வேலை கைகூடும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்வில் இது வரை சந்தித்து வந்த நெருக்கடிகள் தீரும். பொருளாதார நிலை மேம்படும். உடல்நல பிரச்சனை இருந்தால், அதிலிருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்வை வாழ தொடங்குவீர்கள்.

மேலும் படிக்க | 12 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ராகு சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு அன்னை மகாலட்சுமியின் அருளால் பொற்காலம்

குரு பெயர்ச்சியினால் வாழ்க்கையில் பாதிப்பை சந்திக்கப் போகும் சில ராசிகள்

துலாம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்

துலாம் ராசியினரை பொறுத்தவரை, குடும்ப வாழ்க்கையின் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். நெருங்கிய உறவினர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டு அதனால் செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு.

விருச்சிக ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்

விருச்சிக ராசியினரை பொறுத்தவரை, குரு பெயர்ச்சி மன சஞ்சலங்களை ஏற்படுத்தும். குடும்பத்தில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் மன நிம்மதி கெடும் வாய்ப்பு உண்டு. செலவுகள் அதிகமாகும் என்பதால் நிதிநிலை பாதிக்கப்படலாம்.

மகர ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்

மகர ராசியினரை பொறுத்தவரை குரு பெயர்ச்சி காலகட்டத்தில், வேலையில் தொழில் பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. உடல் நல பாதிப்பு காரணமாக, மன உளைச்சலும் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி இன்மை இருக்கும்.

கும்ப ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்

கும்ப ராசியினரை பொறுத்தவரை இந்த குரு பெயர்ச்சி காலகட்டத்தில், பண விஷயத்தில் சில நெருக்கடிகள் ஏற்படலாம். இதனால் கடன் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. குழந்தைகள் விஷயத்திலும் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | Astro: பாடாய படுத்துவார் சுக்கிர பகவான்...பலன்களும் பரிகாரங்களும்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News