சென்னை மியூசிக் அகாதமியில் தெய்வீக இசைக்கச்சேரி... செவிக்கு விருந்தான "ஹே கோவிந்த்" இசை!!

உன்னத அர்ப்பணிப்புக்காக நடைபெற்ற தெய்வீக இசைக்கச்சேரியில் ஜெயதீர்த் மேவுண்டி மற்றும் பிரவீன் கோட்கிண்டி ஆகியோர் இசையின் மூலம் பார்வையாளர்களை ஆன்மீகத்தில்  உருகச் செய்தனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 28, 2024, 03:29 PM IST
  • சென்னை மியூசிக் அகாதமியில் "ஹே கோவிந்த்" எனும் கிருஷ்ண பகவானுக்கான இசைக்கச்சேரி.
  • பக்தி மற்றும் இசையின் மறக்க முடியாத இரவாக அமைந்த இசைக்கச்சேரி.
  • எய்ம் ஃபார் சேவா 2000 ஆம் ஆண்டு பூஜ்யஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது.
சென்னை மியூசிக் அகாதமியில் தெய்வீக இசைக்கச்சேரி...  செவிக்கு விருந்தான "ஹே கோவிந்த்" இசை!! title=

சென்னை மியூசிக் அகாதமியில் "ஹே கோவிந்த்" எனும் கிருஷ்ண பகவானுக்கான இசைக்கச்சேரி எய்ம் ஃபார் சேவா நிறுவனம் மூலம் நடத்தப்பட்டது. இதில், புகழ்பெற்ற ஜெயதீர்த் மேவுண்டி, பிரவின் கோட்கிண்டி ஆகியோர், இசைக்கலைஞர்களின் குழுவோடு பங்கேற்று ஆன்மாவைத் தூண்டும் வகையில் கச்சேரி நடத்தினர். இந்த ஆன்மீக இசைக்கச்சேரி அனைத்து பங்கேற்பாளர்களின் இதயங்களையும் கவர்ந்து உருவாக்கியது. பக்தி மற்றும் இசையின் மறக்க முடியாத இரவாக இது அமைந்தது. 

உன்னத அர்ப்பணிப்புக்காக நடைபெற்ற தெய்வீக இசைக்கச்சேரியில் ஜெயதீர்த் மேவுண்டி மற்றும் பிரவீன் கோட்கிண்டி ஆகியோர் இசையின் மூலம் பார்வையாளர்களை ஆன்மீகத்தில்  உருகச் செய்தனர்.

எய்ம் ஃபார் சேவா 2000 ஆம் ஆண்டு பூஜ்யஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது. இது  தேசிய அளவிலான பொது தொண்டு அறக்கட்டளை. 2001 இல் நிறுவப்பட்ட முதன்மைத் திட்டமான சத்ராலயம் (இலவச மாணவர் விடுதிகள்) ஏழை கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு சம வாய்ப்புகளை வழங்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. 

கடந்த இரண்டு தசாப்தங்களாக, 2 கோடிக்கும் அதிகமான மக்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. இந்தியா முழுவதும், தேவைப்படுபவர்களுக்கு ஆதரவளித்து மேம்படுத்துவதற்கான  பணியில் எய்ம் ஃபார் சேவா உறுதியாக இருக்கிறது. 

மேலும் படிக்க | செல்வமகள் லட்சுமியின் செல்லப்பிள்ளைகளாக மாற இதெல்லாம் உங்க வீட்ல இருக்கா? தேடிவந்த ஆடிவெள்ளி!

இந்த "ஹே கோவிந்த்" கச்சேரி  பக்தியின் சிம்பொனியாகும்.  இது ஸ்ரீ கிருஷ்ணரின் பஜன்கள் மற்றும் அபாங்க்கள், கிளாசிக்கல் மற்றும் செமி கிளாசிக்கல் பாணிகளை உள்ளடக்கி கொண்டாடப்பட்டது. 

பூஜ்ய சுவாமி தயானந்தா உள்ளிட்ட துறவிகள் மற்றும் ஞானிகளின் பாடல்கள் மூலம் ஆன்மீக அனுபவத்தை அளித்தது. ஜெயதீர்த் மேவுண்டியின் குரலில்,பிரவின் கோட்கிண்டியின்  புல்லாங்குழல் இசையில், நரேந்திர எல் நாயக் ஹார்மோனியம் வாசிக்க, சூர்யகாந்த் கோபால் சர்வேயின் பக்க வாத்தியத்தொடு, சுகத் மாணிக் முண்டே, யஷ்வந்த் வைஷ்ணவ் உள்ளிட்டோரின் பங்களிப்போடு மிளிர்ந்தது.

இந்த "ஹே கோவிந்த்" ஆன்மீக  இசைக்கச்சேரி சுவாமி தயானந்த கிருபாவை ஆதரிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டது.

மேலும் படிக்க | ஆடியில் அம்மனுக்கு மாவிளக்கு வழிபாடு! சகல செல்வங்களையும் பெற அம்மாவை மாவால் வழிபடலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News