கும்பத்தில் சனிப்பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் நன்மைகள், வாழ்க்கை பிரகாசிக்கும்

Saturn Transit in Aquarius: சில ராசிக்காரர்களுக்கு சனியின் இந்த மாற்றம் மிகப்பெரிய நல்ல யோகத்தை கொண்டு வரும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 20, 2022, 11:41 AM IST
  • தனுசு ராசிக்காரர்களின் துன்பங்கள் நீங்கும்.
  • பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். மனஅழுத்தம் மற்றும் நீண்ட நாட்களாக வாட்டி வதைத்து வந்த நோய்கள் நீங்கும்.
  • உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
கும்பத்தில் சனிப்பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் நன்மைகள், வாழ்க்கை பிரகாசிக்கும் title=

கும்பத்தில் சனிப்பெயர்ச்சி: ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களின் கிரக மாற்றங்களும் நிலை மாற்றங்களும் அனைத்து ராசிக்காரர்ரகளின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சனி பகவானுக்கு கிரகங்களில் மிக முக்கிய பங்கு உள்ளது. மனிதர்கள் செய்யும் செயல்ளுக்கு ஏற்ப பலன்களை அளிப்பவர் சனி பகவான். ஆகையால் அவர் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். சனியின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் மிக அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும். 

2023 ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் பிறக்கவுள்ளது. புத்தாண்டில் சனியின் ராசியில் பெரிய மாற்றம் ஏற்படும். சனி பகவான் ஜனவரி 17 ஆம் தேதி கும்ப ராசியில் பிரவேசிக்கிறார். சனியின் ராசி மாற்றம் சிலருக்கு சுபமாகவும் சில ராசிக்காரர்களுக்கு அசுபமாகவும் அமையும். சில ராசிக்காரர்களுக்கு சனியின் இந்த மாற்றம் மிகப்பெரிய நல்ல யோகத்தை கொண்டு வரும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

சனிப்பெயர்ச்சி 2023 இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசிக்கச்செய்யும்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு சனியின் பெயர்ச்சி சாதகமாக அமையும். இவ்வளவு காலமாக இருந்து வந்த தடைகள் நீங்கும். பெரிய பதவியும் பணமும் கிடைக்கும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படலாம். இந்த மாற்றம் பல அனுகூலமான பலன்களை அள்ளிக்கொடுக்கும். தொழில் மற்றும் காதல் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண வாய்ப்புகள் வரும். அலுவலகத்தில் ஊதிய உயர்வு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. 

மேலும் படிக்க | புத்தாண்டின் கிரக பெயர்ச்சிகள்: சனி, சுக்கிரன், சூரியன் வியாழன் கிரகங்களின் சஞ்சாரம் 

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி நிம்மதி தரும். மிதுனத்தில் ஏழரை நாட்டு சனியின் தாக்கம் முடிவடையும். மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். தொழிலில் நல்ல காலம் தொடங்கும்.

துலாம்

ஜனவரி 17 ஆம் தேதி துலாம் ராசியில் இருந்த சனி தசை முடிவடைகிறது. இதனால் உங்கள் வாழ்க்கையில் இருந்துவந்த அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். பணம் தொழில் ரீதியாக இருந்துவந்த பிரச்சனைகள் முடிந்து அதிகப்படியான பண வரவு கிடைக்கும். பண ஆதாயம் உண்டாகும். மன மகிழ்ச்சியும் அமைதியும் கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களின் துன்பங்கள் நீங்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். மனஅழுத்தம் மற்றும் நீண்ட நாட்களாக வாட்டி வதைத்து வந்த நோய்கள் நீங்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Lord shani: சனி பகவானை சாந்திப்படுத்தி வாழ்வில் வளம் தரும் மந்திரத்தின் தந்திரம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News