சுக்ரன் பெயர்ச்சியும் மாளவ்ய ராஜயோகமும்! 3 ராசிகளுக்கு சுகபோக வாழ்க்கை அமையும்!

மாளவியா யோகம் இருக்கிற ராசிகளுக்கு சுகபோக வாழ்க்கை அமையும். எப்பொழுதுமே பணவரவு இருந்து கொண்டே இருக்கும். சொகுசான வாழ்க்கை வாழ்வார்கள். ஆடம்பரமாக வாழ்வார்கள். அவங்களது சந்தோஷத்துக்கு குறைவே இருக்காது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 19, 2022, 03:29 PM IST
  • திடீர் பண ஆதாயங்களைப் பெறலாம். சொகுசான வாழ்க்கை வாழ்வார்கள்.
  • உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் அமையும்.
  • கூட்டுத் தொழில் செய்பவர்கள் லாபம் அடைவார்கள்.
சுக்ரன் பெயர்ச்சியும் மாளவ்ய ராஜயோகமும்! 3 ராசிகளுக்கு சுகபோக வாழ்க்கை அமையும்! title=

மாளவியா யோகம் மகத்தானது. சுக்கிரன் ஒருவரின் ஜாதகத்தில் ரிஷபம் அல்லது துலாமில் ஆட்சியோ, மீனம் ராசியில் உச்சமோ பெற்றிருந்து அது கேந்திர ஸ்தான வீடுகளான 1,4,7,10 ஆம் இடமாக அமையப்பெற்றால் அந்த ஜாதகருக்கு மாளவியா யோகம் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் இருக்கும். வீடே லட்சுமி கடாட்சமாக இருக்கும். மாளவியா யோகம் இருக்கிற ராசிக்காரர்களுக்கு சுகபோக வாழ்க்கை அமையும். எப்பொழுதுமே பண வரவு கொண்டே இருக்கும். சொகுசான வாழ்க்கை வாழ்வார்கள். பெரிதாக வீடு கட்டி ஆடம்பரமாக வாழ்வார்கள். அவங்களது சந்தோஷத்துக்கு குறைவே இருக்காது. வாகன யோகம் கிடைக்கும். 

பஞ்சாங்கத்தின்படி, சுக்கிரன் பிப்ரவரி 15, 2023 புதன்கிழமை இரவு 8.12 மணிக்கு சுக்ரன் ராசி மாறுகிறார். சுக்ரன் இந்த நேரத்தில் மீனத்தில் நுழையும் நிலையில், மாளவ்ய ராஜயோகம் உருவாகும். ஜோதிட சாஸ்திரப்படி, பஞ்ச மகாபுருஷ யோகங்களில் மாளவ்ய யோகமும் ஒன்று. இது மிகவும் மங்களகரமான யோகமாக கருதப்படுகிறது. மீனத்தில் ஏற்படும் இந்த மாளவ்ய ராஜயோகத்தின் பலன் அனைத்து ராசிகளிலும் இருக்கும். ஆனால் 3 ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் சிறப்பான பலனைத் தரும். இதனால் இந்த ஆண்டு திடீர் பண ஆதாயமும் முன்னேற்றமும் உண்டாகும்.

மேலும் படிக்க | மகர ராசியில் திரிகிரஹி யோகம் ‘4’ ராசிகளின் தலைவிதியை மாற்றும்!

ரிஷபம்: தொழில், வியாபாரத்தில் இந்த நேரம் சிறப்பாக இருக்கும். புதிய வேலை வாய்ப்புகள் வரலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வு பெறலாம். தொழிலில் பெரிய முன்னேற்றத்தை தரும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் ஒரு பெரிய ஒப்பந்தத்தை பெறுவீர்கள். உங்கள் வேலையை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். பதவி உயர்வு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும்.

மேலும் படிக்க | வார பலன் - துலாம் முதல் மீனம் வரை! வெற்றிகளை குவிக்கப் போகும் ‘சில’ ராசிகள்!

கும்பம்: கும்பத்தை ஆளும் கிரகம் சனி பகவான். உங்கள் ராசியிலிருந்து லக்ன வீட்டிற்குள் நுழையப் போகிறார்கள். எனவே, இந்த நேரத்தில் நீங்கள் திடீர் பண ஆதாயங்களைப் பெறலாம். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் லாபம் அடைவார்கள். வெளிநாட்டு பயணம் செல்லலாம். வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க இதுவே சரியான நேரம். குடும்ப வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டும் அற்புதமாக இருக்கும்.

சிம்மம்: திருமணம் தொடர்பான பிரச்சனைகள் விலகும். அரசியலில் தொடர்புடையவர்கள் பெரிய பொறுப்பைப் பெறலாம். புதிய வாகனம் அல்லது சொத்து வாங்கலாம். சுக்கிரனின் அருளால் வாழ்வில் மகிழ்ச்சியும், வளமும் பெருகும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம். சொத்துக்களால் ஆதாயம் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உண்டு.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.) 

மேலும் படிக்க | மாதங்களில் நான் மார்கழி! கண்ணனுக்கு பிடித்தமான 2022 மார்கழி மாத ராசி பலன்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News