புதனின் அருளால் உருவான விபரீத ராஜயோகம்: 4 ராசிகளுக்கு பணக்கார யோகம், செல்வம் பெருகும்

Budh Gochar: கும்ப ராசியில் புதன் சஞ்சாரம் செய்வதால் 4 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் உருவாகி வருகிறது. அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 3, 2023, 11:00 AM IST
  • கன்னி ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரத்தால் உருவாகும் விபரீத ராஜயோகம் பண ஆதாயத்தைத் தரும்.
  • வருமானம் அதிகரிக்கும்.
  • சட்ட விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள்.
புதனின் அருளால் உருவான விபரீத ராஜயோகம்: 4 ராசிகளுக்கு பணக்கார யோகம், செல்வம் பெருகும் title=

புதன் பெயர்ச்சி 2023, ராசிகளில் அதன் தாக்கம்: வேத ஜோதிடத்தின் படி, அனைத்து கிரகங்களின் பெயர்ச்சியும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்து. புத்திசாலித்தனம், பேச்சாற்றல் ஆகியவற்றின் காரணியான புதனின் பெயர்ச்சியும் மக்களின் வாழ்க்கையில் பல மாற்றங்களைக் கொண்டு வரும். புதனின் பெயர்ச்சி மக்களின் புத்திசாலித்தனம், பேச்சாற்றல், தகவல் தொடர்பு பாணி, பொருளாதார நிலை மற்றும் வணிகம் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளுக்கு புதன் அதிபதியாக உள்ளார். 

சமீபத்தில் புதன் கிரகம் தனது ராசியை மாற்றி சனியின் ராசியான கும்பத்தில் நுழைந்துள்ளது. புதன் மார்ச் 15, 2023 வரை கும்ப ராசியில் இருந்து அதன் பிறகு மீன ராசியில் பெயர்ச்சியாவார். கும்ப ராசியில் புதன் சஞ்சாரம் செய்வதால் 4 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் உருவாகி வருகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு மார்ச் 15 வரை பண வரவு மற்றும் அதீத முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

இந்த ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும்
 
மேஷம்: 

புதன் சஞ்சாரத்தால் உருவாகும் விபரீத ராஜயோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இவர்களின் வருமானத்தில் வலுவான அதிகரிப்பு இருக்கலாம். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணமும் இப்போது கிடைக்கும். முதலீடுகள் மூலம்  மூலம் லாபம் உண்டாகும். சொத்துக்களால் லாபம் உண்டாகும்.

கடகம்: 

கடக ராசிக்காரர்களுக்கு புதன் மாற்றத்தால் உருவாகும் விபரீத ராஜயோகம் பெரும் பலன்களைத் தரும். இந்த ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அலுவலக பணிகளில் இருப்பவர்கள் பெரும் வளர்ச்சி அடைவார்கள். வருமானம் அதிகரிக்கும். உங்கள் தைரியம் மற்றும் வலிமை அதிகரிக்கும் அறிகுறிகள் உள்ளன.

மேலும் படிக்க | சூரியப் பெயர்ச்சியால் குருவருள் பெறும் 4 ராசிகள்! குருவுடன் இணையும் சூரியனின் ஆசீர்வாதம்

கன்னி: 

கன்னி ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரத்தால் உருவாகும் விபரீத ராஜயோகம் பண ஆதாயத்தைத் தரும். வருமானம் அதிகரிக்கும். சட்ட விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்தால், உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரலாம்.

தனுசு: 

தனுசு ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் வரப்பிரசாதமாக அமையும். குறிப்பாக உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இது சாதகமாக இருக்கும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன் : இன்று சில ராசிகளுக்கு சந்திராஷ்டமம்... செய்ய வேண்டியவை என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News