குரு-சுக்கிரன் சேர்க்கை, இந்த 4 ராசிக்காரர்களுக்கு பண மழை ஜாக்பாட்

Guru And Venus yuti: ஒவ்வொரு கிரகமும் உதயம் மற்றும் அஸ்தமனம் அல்லது பெயர்ச்சியாகும் போதெல்லாம் 12 ராசிக்கும் சுப அசுப பலனை ஏற்படுத்தகி தரும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 10, 2023, 12:38 PM IST
  • ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்.
  • தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகளைத் தரும்.
  • கடக ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக் கதவுகளைத் திறக்கும்.
குரு-சுக்கிரன் சேர்க்கை, இந்த 4 ராசிக்காரர்களுக்கு பண மழை ஜாக்பாட் title=

சுக்கிரன் குரு சேர்க்கை 2023: பிப்ரவரி 15 அன்று இரவு 8:14 மணிக்கு, சுக்கிரன் தனது உற்ற நண்பரின் ராசியிலிருந்து விலகி குருவின் ராசியாகிய மீன ராசியில் பிரவேசித்தார். இத்தலத்திற்கு வருவதால் சுக்கிரன் உச்சம் பெறுகிறார். சுக்கிரன் மார்ச் 11 வரை இங்கே அமர்ந்திருப்பார். மேலும் அவர் குரு பகவானுடன் இணைந்து நல்ல பலன்களைத் தருவார். இரண்டு கிரகங்களும் இணைந்ததால் மீனத்தில் 'சஞ்சீவனி யோகம்' உண்டாகும். இந்த நிலையின் சாதகமான பலன் 4 ராசிகளில் காணப்படும். அவர்களுக்கு முன்னேற்ற வாய்ப்புகள் இருக்கும், எங்கிருந்தோ திடீர் பண ஆதாயம் ஏற்படும், அதன் காரணமாக அவர்களின் பொருளாதார நிலை வலுப்பெறும்.

ரிஷபம்
குரு மற்றும் சுக்கிரனின் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில், இந்த ராசிக்காரர்கள் தங்கள் கைகளை வைக்கும் அனைத்து வேலையிலும் வெற்றி பெறுவார்கள். வெளிநாட்டில் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் ஈட்டுவார்கள், அதன் மூலம் நிறைய பண வரவு ஏற்படும்.

மேலும் படிக்க | Sun transit: பங்குனி மாதத்தில் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும்! ஜாக்பாட் லக்

தனுசு
குரு மற்றும் சுக்கிரனின் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகளைத் தரும். குடும்ப உறுப்பினர்களின் சகவாசம் கிடைக்கும். குறிப்பாக சகோதர, சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். சமூக மரியாதை கூடும், உடல் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

கடகம் 
இரு கிரகங்களின் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக் கதவுகளைத் திறக்கும். வசதிகள் பெருகும். அனைத்து விதமான வேலையிலும் வெற்றி கைகூடும். உங்களுக்கு திடீர் பணம் கிடைக்கும், இதன் காரணமாக நிதி நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பும் கிடைக்கும்.

மீனம்
குரு மற்றும் சுக்கிரனின் பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை அளிக்கும். குரு ஹன்ச ராஜயோகத்தை இந்த ராசிக்காரர்களின் ஜாதகத்தில் உருவாக்கும். அதே நேரத்தில் மாளவ்ய ராஜயோகத்தையும் சுக்கிரன் உருவாக்கியுள்ளார். இதன் மூலம் அனைத்து வேலையிலும் வியாபாரத்திலும் வெற்றி கிடைக்கும். தொழிலதிபர்கள் லாபம் அடைவார்கள், வருமானம் அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Mercury Transit: புதன் பெயர்ச்சியால் காதல் கைகூடும்! தொட்டதெல்லாம் துலங்கும் மீன ராசிக்காரரே!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News