மேஷ ராசியில் குரு - ராகு கூட்டணி: இந்த 8 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்

சித்திரை 9 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். மேலும் குரு பகவான் ராகு உடன் பயணம் செய்யப்போகிறார். இந்த கூட்டணி மற்றும் பயணத்தால் யாருக்கு ஜாக்பாட் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 7, 2023, 04:33 PM IST
  • குரு மற்றும் ராகு இணைவதால் புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.
  • அஷ்டமத்து சனி காலத்தில் இழந்த செல்வங்களை மீட்கப்போகிறீர்கள்.
  • நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
மேஷ ராசியில் குரு - ராகு கூட்டணி: இந்த 8 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் title=

ஜோதிடத்தின் படி, அனைத்து கிரகங்களின் ராசி மாற்றம் அனைத்து 12 ராசிகளின் வாழ்க்கையையும் பாதிக்கும். ஒரு கிரகம் ராசியை மாற்றும்போதெல்லாம் பல ராசிகளை பாதிக்கிறது. அதன்படி சித்திரை 9 ஆம் (22 ஏப்ரல் 2023) தேதி அதிகாலை 5 மணிக்கு குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். ஓராண்டு காலம் குரு பகவான் மேஷ ராசியில் அஸ்வினி, பரணி, கார்த்திகை நட்சத்திரங்களில் பயணம் செய்வார். அத்துடன் குரு பகவான் ராகு உடன் பயணம் செய்யப்போகிறார். இந்த கூட்டணி மற்றும் பயணத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு அதீத ஜாக்பாட் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.

மேஷ ராசி
மேஷ ராசிக்காரர்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும். குரு மற்றும் ராகு இணைவதால் புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வேலை மாற்றம், ஊர் மாற்றம், இடமாற்றம் ஏற்படும் நினைத்தது நிறைவேறும். தொட்டது துலங்கும் காலமாக இருக்கும். புதிய சொத்துக்கள், வீடு வாங்கலாம். முதலீடுகளில் லாபங்கள் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | 700 ஆண்டுக்கு உருவாகும் 5 ராஜயோகங்கள், இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்

மிதுன ராசி
ராகு உடன் இணையும் குருவினால் உங்களுக்கு திடீர் ஜாக்பாட் அடிக்கும். முதலீட்டில் உங்களுக்கு லாபம் கிடைக்கப்போகிறது. அஷ்டமத்து சனி காலத்தில் இழந்த செல்வங்களை மீட்கப்போகிறீர்கள். கையை விட்டு போன பணம் வீடு தேடி வரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

சிம்ம ராசி
சிம்ம ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப்போகிறது. தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் நிலை உயரும். பண வருமானம் அதிகரிக்கும். புதிய வேலை கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கூடி வரும்.

துலாம் ராசி
குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். அதிக பண வருமானம் வரும் கடன் பிரச்சினைகள் நீங்கும். கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். அலுவலகத்தில் உழைப்பிற்கு ஏற்ற நல்ல புரமோஷனும் கிடைக்கும்.

விருச்சிக ராசி
உங்களுக்கு மிகப்பெரிய யோகம் உண்டாகும். உங்களின் பெயர் புகழ், வளர்ச்சி அதிகரிக்கும். உடலில் ஏற்பட்டிருந்த நோய்கள் நீங்கும். பண வருமானமும் அதிகரிக்கும்.

தனுசு ராசி
தனுசு ராசிக்காரர்களுக்கு அற்புதங்களை நிகழ்த்தப்போகிறது. வேலையில் புரமோஷன் கிடைக்கும். வேலை, தொழில் நன்றாக இருக்கும். வெளிநாடு வேலை வாய்ப்பு அமையும். நல்ல பண வருமானம் கிடைக்கும் அதே நேரத்தில் திடீர் ஜாக்பாட் அடிக்கும்.

மகர ராசி
நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரப்போகிறது. அரசு தேர்வு எழுதியிருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும்.

மீன ராசி
உங்களுக்கு பண வருமானம் அதிகரிக்கும். நல்ல சம்பளத்தில் புதிய வேலையும், புரமோசனும் கிடைக்கப்போகிறது. எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் தேடி வரும். உங்களுக்கு திடீர் ஜாக்பாட் அடிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மேஷத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், தொட்டதெல்லாம் பொன்னாகும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News