Kamika Ekadashi: காமிகா ஏகாதசியில் விஷ்ணுவுக்கு துளசி அர்ச்சனை செய்வது புண்ணியம்

Kamika Ekadashi Fasting for Lord Vishnu: காமிகா ஏகாதசியான இன்று, விரதம் இருப்பதும், விஷ்ணுவை துளசியால் அர்ச்சனை செய்வது பிறவி அறுக்கும்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 24, 2022, 06:51 AM IST
  • இன்று காமிகா ஏகாதசி நன்னாள்
  • ஆடி ஏகாதசியான இன்று விரதம் இருப்பது புண்ணியம்
  • காமிகா ஏகாதசியில் விஷ்ணுவை துளசியால் அர்ச்சனை செய்வது வல்வினைகளை போக்கும்
Kamika Ekadashi: காமிகா ஏகாதசியில் விஷ்ணுவுக்கு துளசி அர்ச்சனை செய்வது புண்ணியம் title=

காமிகா ஏகாதசி 2022: ஆடி மாதம் இந்து மதத்தில் மிகவும் முக்கியமானது. சிவன், பார்வதி, லட்சுமிக்கு மட்டுமல்ல மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதம் ஆடி. ஆடி மாதத்தில் வரும் ஏகாதசி முக்கியத்துவம் வாய்ந்தது. ஆடி மாதத்தின் தேய்பிறை ஏகாதசி இன்று. இன்று பெருமாளுக்கு இருக்கும் ஏகாதாசி விரதம் நினைத்ததெல்லாம் நடத்திக் கொடுக்கும், கேட்டதையெல்லாம் பெற்றுக் கொடுக்கும் என்பது ஐதீகம்.சில ஏகாதசிகளுக்கு மிகவும் சிறப்பான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அதில் இன்றைய காமிகா ஏகாதசியும் ஒன்று. இந்த ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்து வாழ்வில் வளங்களைப் பெறலாம்.

காமிகா ஏகாதசி விரதம் இருப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று தெரியுமா?  சூரிய கிரகணத்தன்று குருக்ஷேத்திர பூமியில் புண்ணிய தீர்த்தமாடினால் கிடைக்கும் பலன்கள் கிடைக்கும் என்றும், பூமி தானம் செய்தால் ஏற்படும் புண்ணிய பலன்கள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. 

காமிகா ஏகாதசி நாளான இன்று, பெருமாளுக்கு துளசி அர்ச்சனை செய்வது விஷேசம் ஆகும். ஏகாதசியான இன்று மட்டுமல்ல, நாளை துவாதசியிலும் மாலோனை வணங்குவது வாழ்வில் நிம்மதியைத் தரும்.  ஏகாதசி அன்று புளியோதரையும் துவாதசி அன்று தயிர்சாதமும் நைவேத்தியம் செய்து வழிபடலாம். ஏகாதசி நாளில், அன்னதானம் செய்வது தலைமுறைக்கே பலன்களை வழங்கும். 

இந்த ஏகாதசியில் தண்ணீர் கூட அருந்தாமல், பக்தர்கள் விரதம் இருக்கிறார்கள். பக்தர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து, லட்சுமி தேவி சமேதராக விஷ்ணுவையும், பார்வதி தேவி சமேதராக சிவ பெருமானையும் வணங்குகிறார்கள். 

மேலும் படிக்க | Mohini Ekadasi 2022: நோயற்ற வாழ்வைத் தரும் மோகினி ஏகாதாசி விரதம் 

இந்த விரதத்துக்கான சில விதிமுறைகள் உள்ளன. இவற்றை கண்டிப்பாக கடைபிடித்து விரதம் இருந்தால்தான், விரதம் இருப்பதன் முழு பலன் கிடைக்கும். ஏகாதசி நாளில் கண்டிப்பாக அரிசி சாப்பிடக்கூடாது. விரதத்தின் முந்தைய நாள் இரவிலும், விரதத்தின் மறுநாளிலும் அரிசி சாதம் சாப்பிடக்கூடாது.

விரதம் இருக்கும்போது, பழங்கள் சாப்பிடலாம், உப்புள்ள பண்டங்களை சாப்பிடக்கூடாது என்பது தெரிந்தாலும், சிலர் பழங்களில் உப்பை கலந்து உண்கின்றனர். இது பலனளிக்காது. அதேபோல விரதம் இல்லாதவர்களும் ஏகாதாசி நாளில், அரிசி, பருப்பு, முள்ளங்கி, கத்தரிக்காய், பீன்ஸ் உள்ளிட்டவற்றை  உட்கொள்ளக் கூடாது.

ஏகாதசி அன்று அசைவம் மற்றும் மது அருந்த வேண்டாம், தாம்பத்திய உறவை தவிர்த்து பிரம்மச்சரியத்தைப் பின்பற்றுவது நல்லது. 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இந்த 3 ராசிகளின் தலைவிதி மாறவுள்ளது: மகாலட்சுமி யோகத்தால் அடிச்சது ஜாக்பாட் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News