ஜூலை 6 வரை இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்கை, பண மழை கொட்டும்

ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் அதன் குறிப்பிட்ட நேரத்தில் மாறுகிறது. கிரகப் பெயர்ச்சியின் சுப மற்றும் அசுப பலன்களை அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தெளிவாகக் காணலாம். இந்த மாதத்தின் கடைசிப் பெயர்ச்சி மே 30 அன்று நடக்கப் போகிறது. ஆம், மே 30 ஆம் தேதி இரவு 07.40 மணிக்கு சுக்கிரன் கடக ராசியில் பெயர்ச்சியாகி ஜூலை 6 ஆம் தேதி வரை இந்த ராசியில் தான் இருப்பார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 29, 2023, 02:55 PM IST
  • மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் ராசி மாற்றம் பல நன்மைகளைத் தரும்.
  • உங்கள் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.
  • சுக்கிரன் பெயர்ச்சியால் சுகபோகங்களை அனுபவிக்கவுள்ள ராசிகள் எவை?
ஜூலை 6 வரை இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்கை, பண மழை கொட்டும் title=

சுக்கிரன் பெயர்ச்சி 2023: ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் அதன் குறிப்பிட்ட நேரத்தில் மாறுகிறது. கிரகப் பெயர்ச்சியின் சுப மற்றும் அசுப பலன்களை அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தெளிவாகக் காணலாம். இந்த மாதத்தின் கடைசிப் பெயர்ச்சி மே 30 அன்று நடக்கப் போகிறது. ஆம், மே 30 ஆம் தேதி இரவு 07.40 மணிக்கு சுக்கிரன் கடக ராசியில் பெயர்ச்சியாகி ஜூலை 6 ஆம் தேதி வரை இந்த ராசியில் தான் இருப்பார்.

இதன் பிறகு சுக்கிரன் சிம்ம ராசியில் பெயர்ச்சி அடைவார். இதற்கிடையில் தற்போது கடக ராசியில் சுக்கிரன் நுழைவதன் மூலம் 12 ராசிக்காரர்களுக்கும் வித்தியாசமான பலன் கிடைக்கும். சுக்கிரனின் இந்த பெயர்ச்சி மற்ற ராசிக்காரர்களுக்கு என்ன பலன் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | வக்ரத்தில் செல்லும் சனி..! 7 ராசிக்காரர்கள் 5 மாதங்கள் கவனமாக இருக்கணும் 

மேஷ ராசி: ஜோதிட சாஸ்திரத்தின் படி, மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். உங்கள் நான்காவது வீட்டை சுக்கிரன் கடக்கப் போகிறார். இது நிலம், கட்டிடம் மற்றும் வாகனத்தின் இடமாக கருதப்படுகிறது. ஜூலை 6 ஆம் தேதி வரை இது தொடர்பான சுபகாரியங்களை நீங்கள் பெறுவீர்கள். உங்களின் கடின உழைப்பின் பலன் நிச்சயம் கிடைக்கும். அதுமட்டுமின்றி இந்த நேரத்தில் நட்பும் அதிகரிக்கும். 

பரிகாரம்: சுக்கிரன் பெயர்ச்சி போது வீட்டில் உள்ள சுவாமி இடத்தில் கற்பூர தீபம் ஏற்றி வழிபட சுப பலன்கள் கிடைக்கும் மற்றும் அசுப பலன்களை தவிர்க்கலாம்.

மிதுன ராசி: சுக்கிரன் மே 30 ஆம் தேதி கடக ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். இதன் போது மிதுன ராசியின் இரண்டாம் ஸ்தானத்தில் பெயர்ச்சி அடைவார். இந்த இடம் செல்வம் மற்றும் இயற்கையின் இடமாக கருதப்படுகிறது. இந்த சுக்கிரனின் பெயர்ச்சியால் உங்களுக்கு பண பலன்கள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்க முழு வாய்ப்புகள் உள்ளன. இந்த ராசிக்காரர்கள் ஜூலை 6 ஆம் தேதி வரை சுப பலன்களை மட்டுமே பெறுவார்கள். 

பரிகாரம்: சுக்கிரனின் சுப பலன்களைப் பெற, ஜூலை 6-ஆம் தேதி வரை வீட்டின் சுவாமி இடத்தில் பசு நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வர கடவுள் அருள் கிடைக்கும்.

மீன ராசி: ஜோதிடத்தின் படி, சுக்கிரன் கிரகம் உங்கள் ஐந்தாவது வீட்டை கடக்கப் போகிறது. இந்த இடத்தின் உறவு, புத்திசாலித்தனம், விவேகம் மற்றும் காதல் போன்றவையாக கருதப்படுகிறது. இந்த ராசி மாற்றம் மூலம் நீங்கள் அனைத்து வகையான மகிழ்ச்சியையும் பெறுவீர்கள். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மத நம்பிக்கை அதிகரிக்கும், அன்பு நிலைத்திருக்கும். 

பரிகாரம் சுக்கிரனின் சுப பலன்களை முழுமையாகப் பெற, ஜூலை 6-ஆம் தேதி வரை மாடுக்கு வேகவைத்த உருளைக்கிழங்கைக் கொடுக்கவும். அன்னைக்கு சேவை செய்யவும். இதன் மூலம் வாழ்வில் நிறைய முன்னேற்றம் அடைவீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 18 நாட்கள்.. சனி வக்ர பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு பண மழை, லட்சுமி கடாஷம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News