சூரிய கிரகணம் 2022: செய்ய வேண்டியதும்... செய்யக் கூடாததும்...!!

Solar Eclipse 2022: சூரிய கிரகணம் என்பது விஞ்ஞானம் முதல் ஆன்மீகம் மற்றும் ஜோதிடம் வரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 25, 2022, 10:24 AM IST
  • இந்தியாவில் சூரிய அஸ்தமனத்துக்கு முன் தொடங்கும் சூரிய கிரகணத்தை பெரும்பாலான இடங்களில் பார்க்க முடியும்.
  • சூரிய கிரகணம் அக்டோபர் 25 அன்று மாலை 04.29 மணிக்கு தொடங்கி மாலை 05.42 வரை நீடிக்கும்.
சூரிய கிரகணம் 2022: செய்ய வேண்டியதும்... செய்யக் கூடாததும்...!! title=

Solar Eclipse 2022: சூரிய கிரகணம் என்பது விஞ்ஞானம் முதல் ஆன்மீகம் மற்றும் ஜோதிடம் வரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். கிரகணங்களுக்காக வானியலாளர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வருவதால், சூரியனை நம்மால் பார்க்க முடியாது. அதை சூரிய கிரகணம் என்கிறோம். 2022 ஆம் ஆண்டின் கடைசி மற்றும் இரண்டாவது சூரிய கிரகணம் அக்டோபர் மாதத்தில் நிகழும். ஜோதிட சாஸ்திரப்படி சூரிய கிரகணம் அமாவாசையிலும், சந்திர கிரகணம் பௌர்ணமியிலும் ஏற்படும். தீபாவளிக்கு அடுத்த நாள் நிகழ உள்ள பகுதி நேர சூரிய கிரகணம் 2022 அக்டோபர் 25ம் தேதி நிகழும்.

இந்தியாவில் சூரிய அஸ்தமனத்துக்கு முன் தொடங்கும் சூரிய கிரகணத்தை பெரும்பாலான இடங்களில் பார்க்க முடியும். சூரிய கிரகணம் அக்டோபர் 25 அன்று மாலை 04.29 மணிக்கு தொடங்கி மாலை 05.42 வரை நீடிக்கும். 

கிரகணத்தின் போது செய்யக் கூடாதவை:

1. கிரகணத்தின் போது எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும், எனவே இந்த நேரத்தில் எந்த சுப காரியமும் செய்யக்கூடாது. 

2. கிரகணத்தின் போது பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். 

3. சூரிய கிரகணத்தின் போது, உணவு சமைக்கவோ, காய்கறியை நறுக்குதல் மற்றும் உரித்தல் போன்ற வேலை செய்யவோ, உணவு உண்ணவோ கூடாது. 

4. குறிப்பாக கர்ப்பிணிகள் இந்த நேரத்தில் கத்தி-கத்தரிக்கோல் அல்லது கூர்மையான பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது, அவற்றைக் கையில் எடுக்கக்கூடாது. 

5. கிரகணத்தின் போது ஊசியில் நூல் கோர்ப்பது, தையல் வேலை பார்ப்பது போன்றவை கூடாது.

மேலும் படிக்க | வாழ்க்கையில் பிரச்சனைகள் விடாமல் துரத்துகிறதா... சிவனை வில்வ இலை கொண்டு பூஜிக்கவும்!

கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை: 

1. தர்ப்பை அல்லது துளசி இலைகளை உணவு மற்றும் தண்ணீரில் போடவும். அதனால் கிரகணத்தின் எதிர்மறை தாக்கம் அதில் ஏற்படாமல் இருக்கும். கிரகணத்திற்குப் பிறகு அவற்றை உட்கொள்ளலாம். 

2. கிரகண காலத்தில், ஸ்தோத்திரங்கள் சொல்வதனா, கிடைக்கும் பலன்கள் பன்மடங்காகும். 

3. கிரகணத்தின் போது, கடவுள் வழிபாட்டில் அதிகபட்ச நேரத்தை செலவிடுங்கள். 

4. வீட்டின் பூஜை அறை கதவை மூடி வைக்கவும். அப்போது கோவில்களின் கதவுகளும் மூடப்பட்டிருக்கும். 

5. கிரகணம் முடிந்ததும் குளித்து விட்டு தான் பிற வேலைகளை தொடங்க வேண்டும். 

மேலும் படிக்க | சொந்த வீடு கனவு நிறைவேற... வரம் தரும் வாராஹி அம்மனை வழிபடும் முறை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News