சனி பெயர்ச்சியால் உருவான அரிய ராஜ யோகம்... செல்வத்தை அளவில்லாமல் அள்ளப்போகும் இந்த 4 ராசிகள்!

Saturn Transit 2023: கும்பத்தில் சனியின் சஞ்சாரத்தால், ஷஷ மகாபுருஷ யோகம் உருவாகிறது. இந்த ராஜயோகம் சில ராசிக்காரர்களுக்கு கஷ்டங்களை அதிகரிக்கும், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும்.

Written by - Sudharsan G | Last Updated : May 19, 2023, 10:08 AM IST
  • சனி ஒரு ராசியில் இரண்டு வருடங்கள் வரை இருப்பார்.
  • தற்போது அவரது சொந்த ராசியான கும்பத்தில் சஞ்சரித்திருக்கிறார்.
  • வரும் 2025ஆம் ஆண்டு வரை அந்த ராசியில் தான் இருப்பார்.
சனி பெயர்ச்சியால் உருவான அரிய ராஜ யோகம்... செல்வத்தை அளவில்லாமல் அள்ளப்போகும் இந்த 4 ராசிகள்! title=

Saturn Transit: ஜோதிடத்தில், மனிதர்கள் அதிகம் பயப்படும் கிரகமாமாக சனி பகவான் உள்ளது. வேத ஜோதிடத்தில், அவர் கர்மாவுக்கு ஏற்ப பலன்களை வழங்குபவர் என்று அழைக்கப்படுகிறார். ஒருவரின் செயல்களுக்கு ஏற்ப சனி பகவான் பலன்களைத் தருகிறார். 

சனி பகவான் மிக மெதுவாக நகரும் கிரகம். இரண்டரை வருடங்கள் ஒரு ராசியில் இருப்பார். தற்போது சனிபகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் இருக்கிறார். 2025ஆம் ஆண்டு வரை இந்த ராசியில் இருப்பார். 

அவரது சஞ்சாரத்தால், ஷஷ மகாபுருஷ யோகம் உருவாகிறது. இந்த ராஜயோகம் சில ராசிக்காரர்களுக்கு கஷ்டங்களை அதிகரிக்கும், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் அதிக பலன்களை தரும் என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

ஷஷ மஹாபுருஷ யோகம் எப்போது உருவாகிறது?

இந்த யோகம் பஞ்சமஹாபுருஷ யோகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் அல்லது லக்னத்தில் இருந்து கேந்திர வீட்டில் சனி இருக்கும்போது அல்லது சனி 1, 4, 7,10ஆம் வீட்டில் சந்திரன் அல்லது லக்னத்தில் இருந்து கும்பம், துலாம் அல்லது மகரத்தில் இருக்கும் போது, அவர்களின் ராசி அதில் இருந்தால் இந்த யோகம் உருவாகும்.

மேலும் படிக்க | வடக்கு வாசல் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி வரும்..! கோடீஸ்வர யோகம் உண்டு

இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்

மேஷம்

ஷஷ மகாபுருஷ யோகம் உருவாகி மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல செய்திகள் வந்து சேரும். எல்லா துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள். நிறுத்தப்பட்ட வேலைகள் மீண்டும் தொடங்கும். நிதி நெருக்கடி நீங்கி புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும்.

ரிஷபம்

ஷஷ மஹாபுருஷ யோகத்தின் காரணமாக, அதிர்ஷ்டம் உங்களை முழுமையாக அரவணைக்கும் எனலாம். தொழில் மற்றும் வேலையில் வெற்றி நீங்கள் அடுத்தடுத்த படிகளுக்கு முன்னேறுவீர்கள். நிதி நெருக்கடி நீங்கி வங்கி இருப்பும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த வேலைகளும் முடியும்.

கன்னி

உங்கள் பெயர்ச்சி ஜாதகத்தின் ஆறாம் வீட்டில் ஷஷ மஹாபுருஷ யோகம் உருவாகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் வியாபாரத்தில் நிறைய லாபம் பெற வாய்ப்பு உள்ளது. உங்கள் தைரியத்தால் எந்த சவாலையும் சமாளிக்க முடியும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

கும்பம்

தற்போது சனிபகவான் இந்த ராசியில் இருக்கிறார். 2025ஆம் ஆண்டு வரை இருக்கிறார். கும்ப ராசிக்காரர்களுக்கு ஷஷ மகாபுருஷ யோகம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். குடும்பத்துடன் நிறைய நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். திருமண வாழ்வில் இருந்து வந்த சிரமங்களும் விலகும். பொருளாதாரப் பக்கமும் வலுவாக இருக்கும், மேலும் எங்காவது முதலீடு செய்யப்பட்ட பணத்தில் இருந்து பலன் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு சுக்கிரதசை... ராஜவாழ்க்கை வாழ்வார்கள்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News