வக்ர நிவர்த்தி ஆகும் சனி தேவன்; பண மழையில் நனையும் ‘6’ ராசிகள்!

சனி பகவான் சொந்த ராசியான மகர ராசியில் சஞ்சரித்துள்ளார். சனிபகவானின் இந்த வக்ர நிவர்த்தியினால் சிறப்பான பலன்களை பெறும் ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 26, 2022, 07:28 PM IST
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • புதிய வேலை வாய்ப்புகள் அமையும்.
  • பண ஆதாயத்தால் வருமானம் அதிகரிக்கும்.
வக்ர நிவர்த்தி ஆகும் சனி தேவன்; பண மழையில் நனையும் ‘6’ ராசிகள்! title=

சனி தேவன் நீதியின் கடவுளாகக் கருதப்படுகிறார். செயலுக்கு ஏற்றாற்போல் பலன்களைக் கொடுக்கிறார். அக்டோபர் 23ஆம் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:19 மணிக்கு அவர் தனது ராசியான மகர ராசிக்குள் பிரவேசித்து வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். அவருடைய இந்த மாற்றம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சிலருக்கு மோசமான பலனும் இருக்கும். சனிபகவான் அணுசரனையாக இருக்கும் ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். அனைத்து தரப்பில் இருந்தும் சுப பலன்கள் கிடைக்க ஆரம்பித்து, பண வரவு அதிகரிக்கும். அப்படிப்பட்ட நிலையில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறப்பான பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

ரிஷபம்

சனியின் வக்ர நிவர்த்தி ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதிய வேலை வாய்ப்புகள் அமையும். பண ஆதாயத்தால் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மரியாதையும் மதிப்பும் அதிகரிக்கும். அதே சமயம் உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் உண்டாகும்.

மேலும் படிக்க | Astro: பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ சில எளிய புதன் கிழமை பரிகாரங்கள்!

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சனிபகவான் சஞ்சரிப்பதால் சுப பலன்கள் கிடைக்கும். இதனால் அவர்கள் மனம் மகிழ்ச்சி அடையும். வீட்டில் ஆன்மீக காரியங்கள் நிறைவேறும். இந்த ராசி மாணவர்களுக்குச் சாதகமான காலம், கல்வித் துறையில் முன்னேற்றம் காணலாம். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் வாகனம், வீடு போன்றவற்றின் மகிழ்ச்சியைப் பெறலாம். நீங்கள் நீண்ட நாட்களாக திட்டமிட்டு இருந்த வேலையை முடிக்க இது ஒரு சாதகமான நேரம். பெற்றோரிடம் இருந்து நிதி உதவியைப் பெறுவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் சிறப்பான காலம் உண்டு.

மேலும் படிக்க | துலாமில் இணையும் மூன்று கிரகங்கள்; பிரச்சனையில் சிக்கும் ‘சில’ ராசிகள்!

துலாம்

அலுவலகம் அல்லது பணியிடத்தில் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல நேரம். தொழிலில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. நண்பர்களின் ஆதரவும், வருமானமும் பெருகும், கடன் தொல்லை நீங்கும்.

மகரம்

உத்தியோகத்தில் இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உண்டு. குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். குழந்தை தரப்பில் இருந்து நல்ல செய்திகள் வரலாம். சொத்துக்கள் பெருகவும் வாய்ப்புகள் உண்டு. பணியிடத்தில் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இருக்கும். நிதி நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள்.

மீனம்

புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கூடும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். அதனால் நிதிப் பிரச்சனைகள் நீங்கி பணப் பலன் கிடைக்கும். நீங்கள் ஏதேனும் ஒரு இடத்திற்கு சுற்றுலா செல்லலாம். தொழிலதிபர்கள் தொழிலில் லாபம் அடைவார்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு சாண்டள யோகம்; சில எளிய பரிகாரங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News