சித்திரை மாத அதிர்ஷ்ட ராசிகள்... வாழ்க்கையில் இனி வெற்றி மேல் வெற்றி தான்

Chithirai Tamil Month Rasipalan: சித்திரை மாதம் ஒன்றாம் தேதி, சூரிய பகவான் மேஷ ராசிக்கு செல்கிறார். இந்நிலையில் பிறக்கப் போகும் குரோதி தமிழ் புத்தாண்டு எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 23, 2024, 09:26 PM IST
  • சித்திரை மாதம் ஒன்றாம் தேதி, சூரிய பகவான் மேஷ ராசிக்கு செல்கிறார்.
  • குரோதி தமிழ் புத்தாண்டு எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகிறது?
  • சூரியன், வரும் மே மாதம் 15 ஆம் தேதி வரை மேஷ ராசியில் இருப்பார்.
சித்திரை மாத அதிர்ஷ்ட ராசிகள்... வாழ்க்கையில் இனி வெற்றி மேல் வெற்றி தான் title=

2024 சித்திரை மாத ராசி பலன்: கிரகங்களின் ராஜாவான சூரிய பகவான், மேஷ ராசிக்கு செல்லும் மாதம் சித்திரை மாதம். தமிழ் புத்தாண்டாக கடைபிடிக்கப்படும், சித்திரை மாதம் ஒன்றாம் தேதி, சூரிய பகவான் மேஷ ராசிக்கு செல்கிறார். சூரியன், வரும் மே மாதம் 15 ஆம் தேதி வரை மேஷ ராசியில் இருப்பார். இந்நிலையில் பிறக்கப் போகும் குரோதி தமிழ் புத்தாண்டு எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். வரும் குரோதி வருட சித்திரை மாதத்தில் குறிப்பிட்ட அளவில், பண பலன், பதவி உயர்வு, மகிழ்ச்சியான வாழ்க்கை, ஆரோக்கியம் ஆகியற்றை பெறும் அதிர்ஷ்டசாலிகள் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேஷம் சித்திரை மாத ராசி பலன்

மேஷ ராசியினருக்கு சூரிய பகவானின் அருளால், மாதத்தில், உச்சகட்ட பலன்களை பெறுவார்கள். நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும், வெற்றிகரமாக நிறைவேறி மனதிற்கு திருப்தியை அளிக்கும். கடின உழைப்பின் பலன் கிடைக்கவில்லையே என்று நீங்கள் அடைந்த வருத்தத்திற்கு ஒரு முடிவு கிடைக்கும். உங்கள் வேலைக்கான அங்கீகாரம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும் வாய்ப்பு உண்டு. வேலை தொழில் மற்றும் வியாபாரத்தின் அதிபதியான சூரியன் அருளால், வேலையில் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புதிய பொறுப்புகளால் ஆதாயம் கிடைக்கும். வெளிநாடு வேலை வாய்ப்புகள் தேடி வரும்.

ரிஷபம் சித்திரை மாத ராசி பலன்

ரிஷப ராசியின் 11 வது வீட்டில், சூரிய பகவான் சஞ்சரிக்க உள்ளார். உங்களுக்கு அனைத்து விதத்திலும் மேன்மைகளை அள்ளித் தரும் மாதமாக இது இருக்கும். நிதி ஆதாயம், புகழ், கௌரவம் ஆகியவற்றிற்கு ஆதாரமாக இரு இருப்பது பதினோராவது வீடு. எனவே புதிய வருமான ஆதாரங்கள் மூலம் நிதி நிலை வரும். அதோடு பதவி உயர்வு சம்பள உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பணியிடத்திலும் மேலதிகாரிகள், உங்கள் திறமையை பாராட்டி, அங்கீகாரம் அளிப்பார்கள். சொந்த தொழில் தொடங்குபவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் காத்திருக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

மேலும் படிக்க | குரோதி ஆண்டில் ராகு கேது சஞ்சாரத்தால் யாருக்கு என்ன நன்மை? படுத்தி எடுப்பாரா கேது?

விருச்சிகம் சித்திரை மாத ராசி பலன்

விருச்சிக ராசியின் ஆறாவது வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் நிலையில், இதுவரை உங்களை வாட்டி வந்த நோய்களிலிருந்து விடுபட்டு, ஆரோக்கியமான வாழ்க்கையை தொடங்குவீர்கள். கிரக தோஷங்களினால் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி நிவாரணம் கிடைக்கும். சட்ட வழக்குகள் ஏதேனும் சந்தித்து வந்தால், உங்கள் பக்கம் சாதகமாக முடிவடையும் வாய்ப்பு உண்டு. பணி மாறுதலுக்கு நீங்கள் ஆசைப்பட்டால், அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்துடன் இனிமையாக பொழுதை கழிக்கும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கையில் பல இன்ப அதிர்ச்சிகள் காத்திருக்கும். முன்னேற முயற்சிக்கும் உங்களது, செயல்களுக்கு வெற்றி கிடைக்கும். காதல் வாழ்க்கையும் மிகவும் உற்சாகமானதாக இருக்கும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | மார்ச் மாத சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு லாபமோ லாபம்... பண வரவு அதிகமாகும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News