செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை காலம், ஜாக்கிரதை!!

Mars Transit: செவ்வாய்ப் பெயர்ச்சி யாருக்கு அசுபமான பலன்களை அளிக்கும், யார் இந்த காலத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 12, 2022, 05:19 PM IST
  • ஜோதிட சாஸ்திரப்படி மேஷ ராசிக்காரர்களுக்கு இந்தக் காலத்தில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது.
  • ஆரோக்கியத்திலும் பாதிப்பு தெரியும்.
  • கணவன்-மனைவிக்கு இடையே ஏதாவது ஒரு தகராறு ஏற்படலாம்.
செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை காலம், ஜாக்கிரதை!! title=

செவ்வாய் ராசி பரிவர்த்தனை விளைவுகள் 2022: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு கிரகம் தனது ராசியை மாற்றும் போதெல்லாம், அதன் சுப மற்றும் அசுப விளைவுகள் அனைவரது வாழ்க்கையிலும் காணப்படுகின்றன. ஆகஸ்ட் 10 ஆம் தேதி செவ்வாய் கிரகம் மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷபம் ராசிக்குள் நுழைந்தது. மற்ற கிரகங்களைப் போலவே செவ்வாய்ப் பெயர்ச்சியின் பலன் 12 ராசிகளிலும் காணப்படும். இதில் சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நல்ல பலன்கள் கிடைக்கும். மறுபுறம், சில ராசிக்காரர்களுக்கு இந்த 3 மாதங்கள் கடினமான காலமாக இருக்கும். ஆகஸ்ட் 10 முதல் அக்டோபர் 16 வரை செவ்வாய் கிரகம் ரிஷப ராசியில் தங்கப் போகிறது.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, இந்த ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. சில ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி கடினமான காலங்களை கொண்டு வரும். இந்த காலத்தில் பொருளாதார நிலையிலும் இதன் தாக்கம் காணப்படும். ஜோதிடத்தில், செவ்வாய் தளபதியாக கருதப்படுகிறது. செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிகத்தை ஆளும் கிரகம். செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருக்கிறார். இந்தச் செவ்வாய்ப் பெயர்ச்சி யாருக்கு அசுபமான பலன்களை அளிக்கும், யார் இந்த காலத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

மேஷம்:

ஜோதிட சாஸ்திரப்படி இந்த ராசிக்காரர்களுக்கு இந்தக் காலத்தில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. கோபம் அதிகரிக்கும். இதன் காரணமாக, நீங்கள் மற்றவர்களுடன் சண்டை போடும் சூழல் ஏற்படலாம். அதே நேரத்தில், பணம் தொடர்பான பாதகமான விளைவுகளையும் இந்த வேளையில் காணலாம். இதனால் மன அழுத்தம் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில், ​​திருமணமானவர்களின் சுயநலம் அதிகரிக்கும். இதனால் கணவன் மனைவி இடையிலான உறவில் விரிசல் ஏற்படும்.

மேலும் படிக்க | செவ்வாய் பெயர்ச்சி 2022: இந்த 4 ராசிக்காரர்களின் காட்டில் பணமழை 

மிதுனம்:

இந்த காலகட்டத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு சகோதர சகோதரிகளின் முழு ஆதரவும் கிடைக்கும். ஆரோக்கியத்திலும் பாதிப்பு தெரியும். அதே நேரத்தில், சிலர் இந்த நேரத்தில் இரத்த சம்பந்தமான அல்லது வேறு ஏதேனும் நோயால் சிரமப்படுவார்கள். கணவன்-மனைவிக்கு இடையே ஏதாவது ஒரு தகராறு ஏற்படலாம்.

துலாம்:

ஜோதிட சாஸ்திரப்படி துலா ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் சவாலாக இருக்கும். இந்த காலகட்டத்தில் பல அனுகூலமற்ற சம்பவங்கள் ஏற்படலாம். நீங்கள் எதிர்பாராத சில தொந்தரவுகள் ஏற்படலாம். இந்த காலத்தில் மன உளைச்சலையும் உணர்வீர்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் பேச்சிலும், பயன்படுத்தும் வார்த்தைகளிலும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையேல் எதிர்காலத்தில் சண்டை சச்சரவுகள் வர வாய்ப்புகள் உள்ளது. 

மீனம்:

மீன ராசிக்காரர்கள் 3 மாதங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். செலவுகளைக் கட்டுப்படுத்தவும். இந்த காலத்தில் ​​நீங்கள் அதிகமாக செலவழிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். இதன் விளைவு நிதி நிலைமையில் காணப்படும். செவ்வாய் பெயர்ச்சி சகோதரனுடனான உங்கள் உறவைக் கெடுக்கும். இந்த காலத்தில் அனைவருடன் பேசும்போதும் மிகவும் நிதானத்துடன் இருக்க வேண்டியது மிக அவசியமாகும். தந்தையுடனான உறவு மோசமடையக்கூடும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.) 

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது அருள் மழை, மகிழ்ச்சி திக்குமுக்காட வைக்கும்!! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News