2024 ஆண்டு முழுவதும் இந்த ராசிகள் மீது அருளை பொழிவார் சனி பகவான்

Lord Shani: சனி பகவான் இந்த ஆண்டு முழுவதும் கும்ப ராசியில் சஞ்சரிப்பார். ஆண்டின் தொடக்கத்தில், குரு பகவான் மேஷ ராசியில் இருப்பார்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 2, 2024, 04:39 PM IST
  • கிரகங்களின் நிலைகள் எப்படி உள்ளன?
  • 2024-ல் யாருக்கு அதிக லாபம் கிடைக்கும்?
  • 2024 ஆம் ஆண்டில் யார் பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்?
2024 ஆண்டு முழுவதும் இந்த ராசிகள் மீது அருளை பொழிவார் சனி பகவான்

Lord Shani: 2024 ஆம் ஆண்டிற்கும் சனி பகவானிற்கும் ஒரு சிறப்பு ஒற்றுமை உள்ளது. இது சனி பகவானுக்கு விசேஷமான ஆண்டாக பார்க்கப்படுகின்றது. இதற்கு ஒரு காரணமும் உள்ளது. 2024 -இல் உள்ள எண்களைக் கூட்டினால் 8 வரும். 8 சனி பகவானின் எண்ணாக கருதப்படுகின்றது. ஆகையால் 2024 ஆம் ஆண்டு முழுவதும் சனியின் தாக்கம் இருக்கும். 

Add Zee News as a Preferred Source

இந்த ஆண்டுக்கான கிரக நிலைகள் எப்படி உள்ளன?

கடந்த ஆண்டு பெயர்ச்சி ஆகிய சனி இந்த ஆண்டு முழுவதும் கும்பத்தில் இருப்பார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் கன்னி லக்னத்தில் ராகு-கேதுவின் தாக்கம் இருந்தது. சந்திரன் சிம்ம ராசியில் இருந்தார். இந்த ஆண்டு முழுவதும் சூரியன் ஆழமான செல்வாக்கைக் கொண்டிருப்பார். ஆகையால் இந்த ஆண்டில் சூரியன் மற்றும் சனியின் ஆதிக்கம் உள்ளவர்கள் அதிக நன்மைகளைப் பெறுவார்கள். 

பொதுவான பலன்கள் எவ்வாறு உள்ளன? 

ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் போர், நோய்கள், இயற்கை பேரிடர் போன்ற பிரச்சனைகள் வரக்கூடும். பின்னர் அவை சற்று சரியாகும். கிரக நிலைகளின் படி, புத்தாண்டில் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு நாட்டிலும் உலகிலும் பெரிய மாற்றங்களைக் காணலாம்.

கிரகங்களின் நிலைகள் எப்படி உள்ளன? 

சனி பகவான் இந்த ஆண்டு முழுவதும் கும்ப ராசியில் சஞ்சரிப்பார். ஆண்டின் தொடக்கத்தில், குரு பகவான் மேஷ ராசியில் இருப்பார். பின்னர் அவர் ரிஷபத்தில் பெயர்ச்சி ஆவார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் மீனத்தில் ராகுவும், கன்னி ராசியில் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். 

2024-ல் யாருக்கு அதிக லாபம் கிடைக்கும்?

பிறந்த தேதியின் கூட்டல் 4, 7 அல்லது 8 ஆக உள்ள நபர்களுக்கு, மேஷம், மிதுனம், கன்னி மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கும் இந்த ஆண்டு பயனுள்ளதாக இருக்கும். மேலும், தங்கள் ஜாதகத்தில் சூரியன் அல்லது சனி வலுவாக இருப்பவர்களும், தங்கள் வேலையை நேர்மையாகச் செய்பவர்களும் இந்த ஆண்டில் அதிக பலன் அடைவார்கள்.

மேஷம், மிதுனம், கன்னி மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நற்பலன்கள்

2024 ஆம் ஆண்டில் சனி பகவான் உங்களுக்கு சிறப்பு ஆசியை வழங்குவார். வேலையில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். உங்கள் வாழ்கைத் துணையின் முழுமையான ஆதரவு கிடைக்கும். 

மூதாதையர் சொத்துக்களும் கைகூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு இந்த ஆண்டு திருமணம் நிச்சயம் ஆகும். நீதிமன்ற விவகாரங்களிலும் வெற்றி பெறலாம். முதலீட்டிலும் லாபம் அடைவீர்கள். இப்போது முதலீடு செய்யவும் நல்ல நேரமாக இருக்கும். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் பெறலாம். வேலையை மாற்ற நினைக்கும் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். வணிகத்தில் ஈடுபட்டுள்லவர்களுக்கு இப்போது பண வரவு அதிகரிக்கும். 

மேலும் படிக்க | 500 ஆண்டுக்கு பின் உருவான கேதார ராஜயோகம், 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்

2024 ஆம் ஆண்டில் யார் பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்? 

பிறந்த தேதியின் கூட்டல் 1, 5 அல்லது 8 ஆக உள்ளவர்கள் மற்றும், கடகம், துலாம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் இந்த ஆண்டு கவனமாக இருக்க வேண்டும். ஜாதகத்தில் சனியின் நிலை சரியில்லாமல் இருப்பவர்களும், உணவு பழக்கம் மற்றும் நடத்தை சரியாக இல்லாதவர்களும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

கடகம், துலாம் மற்றும் கும்ப ராசிக்காரர்களுக்கு வரக்கூடிய பிரச்சனைகள்

சனியின் மோசமான தாக்கத்தால், இவர்கள் தொழிலில் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கடின உழைப்பு இருந்தாலும், அதற்கான முழுமையான பலன்கள் கிடைக்காமல் போகலாம். சனியின் தாக்கத்தால், உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளையும் எதிர்கொள்ளலாம். மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றால் பாதிக்கப்படலாம். செலவுகள் அதிகமாகும். நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். 

சனி பகவானின் அருள் பெற

சனியால் பாதிப்புகளை சனி அருள் பெற தினமும் சனி சாலீசா சொல்லலாம். பிள்ளையார், முருகர், அம்மன், அனுமன் ஆகிய கடவுள்களை வழிபடுபவர்களை சனி சோதிக்க மாட்டார். மேலும் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்தால் நிச்சயம் சனியின் கருணை கிடைக்கும். 

மேலும் படிக்க | எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன கவலை தீரும்? பிரச்சனைகளை தீர்க்கும் வழிபாடுகள்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News