சூரியனால் பணமழை கொட்டும்.. இந்த ராசிகளின் நிதி நிலை உயரப் போகுது

Surya Gochar 2023:  கடந்த ஆகஸ்ட் 17, 2023 அன்று மதியம் 01.23 மணிக்கு சூரியன் சிம்ம ராசிக்குள் பெயர்ச்சி அடைந்தார். இதன் போது சில ராசிக்காரர்களுக்கு பலன்கள் கிடைக்கும் மேலும் சில ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 19, 2023, 02:03 PM IST
  • ஆகஸ்ட் 17, 2023 அன்று மதியம் 01:23 மணிக்கு சிம்ம ராசிக்குள் பெயர்ச்சியடைந்தார்.
  • சூரியனின் சஞ்சாரம் அனைத்து ராசிகளுக்கும் பாதிக்கும்.
  • இந்த ராசிக்காரர்கள் சூரிய சஞ்சாரத்தில் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சூரியனால் பணமழை கொட்டும்.. இந்த ராசிகளின் நிதி நிலை உயரப் போகுது title=

சூரியன் பெயர்ச்சி 2023: ஜோதிடத்தின்படி ஆகஸ்ட் 17, 2023 அன்று மதியம் 01:23 மணிக்கு சிம்ம ராசிக்குள் பெயர்ச்சி அடைந்தார். ஜோதிடர்களின் கூற்றுப்படி, சூரியனின் சஞ்சாரத்தின் பலன் அனைத்து ராசிகளுக்கும் சாதகமாகவும் எதிர்மறையாகவும் இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தில், சூரிய கிரகத்தை கிரகங்களின் ராஜா என்று விவரிக்கப்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன் பலமாக இருந்தால், அவர்கள் தங்களின் வாழ்க்கையில் பல வகையான வெற்றிகளைப் பெறுவார்கள். அதே நேரத்தில், சில ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எனவே எந்தெந்த ராசிக்காரர்கள் சூரிய சஞ்சாரத்தால் பலன் பெறப் போகிறார்கள் என்பதை தெரிந்துக்கோலவோம்.

இந்த ராசிக்காரர்கள் சூரியனின் பெயர்ச்சியால் பலன்களைப் பெறுவார்கள்

மேஷம் - சூரியனின் இந்த சஞ்சாரம் மேஷ ராசிகளுக்கு சாதகமான பலன்களைத் தரும். இந்த காலகட்டத்தில், எதிர்பார்த்ததை விட வெற்றி பெறுவீர்கள். இக்காலத்தில் தடைப்பட்ட அரசுப் பணிகள் எளிதாக முடிவடையும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

கடகம் - இந்த காலகட்டத்தில், மக்கள் நேர்மறை ஆற்றல் நிறைந்தவர்களாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபகரமான ஒப்பந்தங்கள் வரும், இதன் காரணமாக எதிர்காலத்தில் நிறைய பணம் சம்பாதிக்கப்பீரகள். முன்பு நினைத்த திட்டங்களை எளிதில் செயல்படுத்துவீர்கள், மனம் மகிழ்ச்சியாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உயர் ஆளுமை கொண்ட புதிய நண்பர்கள் சந்திப்பீர்கள்.

மேலும் படிக்க | தொட்டதெல்லாம் வெற்றி: செவ்வாய் பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு அமோகமான வாழ்க்கை

சிம்மம் - சூரியன் உங்கள் சொந்த ராசியில் சஞ்சரிப்பதால், தடைபட்டிருந்த காரியங்கள் எளிதில் நிறைவேறும். நம்பிக்கை அதிகரித்து, மனதில் நேர்மறை ஆற்றல் மேலோங்கும். உத்தியோகத்தில் உத்தியோகஸ்தர்களின் பாராட்டுக்களுக்கு ஆளாவீர்கள், மரியாதை கூடும். ஆரோக்கியத்தில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும்.

மீனம் - சூரியனின் சஞ்சாரம் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். வழக்கத்தில் சாதகமான மாற்றம் ஏற்படும், இதனால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் தினசரி வழக்கத்தில் உடற்பயிற்சி மற்றும் யோகாவையும் சேர்த்துக்கொள்ளலாம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கலாம். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் வெற்றி பெறலாம்.

இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்

கன்னி - சூரியன் பெயர்ச்சி பாதகமான விளைவை ஏற்படுத்தும். இந்த காலகட்டத்தில், தேவையற்ற செலவுகள் ஏற்படும். மேலும், இந்த காலகட்டத்தில் பரிவர்த்தனைகளையும் செய்வதைத் தவிர்க்கவும். சாலை விபத்து நேரலாம், எச்சரிக்கையாக இருங்கள். உடல்நலம் திடீரென மோசமடையலாம், கவனமாக இருக்கவும்.

மகரம் - இந்த நேரம் மகர ராசிக்காரர்களுக்கு போராட்டமாக இருக்கும். கடினமாக உழைத்தாலும் குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாது. அதனால் மனதில் அமைதியின்மை ஏற்படும். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள், இல்லையெனில் விபத்து ஏற்படலாம். நேரத்திற்கு உணவு சாப்பிடுங்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் நீரிழப்புக்கு பலியாகலாம்.

கும்பம் - இந்த காலகட்டத்தில் திருமண வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். குடும்பத்தில் அமைதியின்மை நிலவும், சிறு சிறு விஷயங்களில் சண்டை சச்சரவுகள் ஏற்படும், எச்சரிக்கையாக இருங்கள். வியாபாரத்தில் நஷ்டம் வரலாம். நெருங்கிய நபரால் ஏமாற்றப்படலாம், கவனமாக இருங்கள். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ராசிபலன் ஆகஸ்ட் 19, 2023: அதிர்ஷ்டமான நாள்... இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News