செவ்வாய் சூரியன் சேர்க்கை: இன்னும் 3 நாட்களில் இந்த ராசிகளுக்கு சுப யோகம் ஆரம்பம்

Mars Transit: சில ராசிகளுக்கு செவ்வாய் பெயர்ச்சியால் மிகப்பெரிய நற்பலன்கள் கிடைக்கும். இவர்களுக்கு அபரிமிதமான லாபமும் பண வரவும் கிடைக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 2, 2024, 07:44 PM IST
  • விருச்சிக ராசிக்காரர்களுக்கு குடும்ப உறுப்பினர்களுடனான உறவு முன்பை விட சிறப்பாக இருக்கும்.
  • வேலை தேடிக் கொண்டிருப்பவர்களின் தேடல் நிறைவேறும்.
  • இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தில் அதிக லாபம் ஈட்டுவார்கள்.
செவ்வாய் சூரியன் சேர்க்கை: இன்னும் 3 நாட்களில் இந்த ராசிகளுக்கு சுப யோகம் ஆரம்பம் title=

செவ்வாய் பெயர்ச்சி: ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. அந்த வகையில், செவ்வாய் கிரகம்  ஆற்றல், வலிமை, தைரியம், வீரம், நிலம் மற்றும் ஊற்சாகம் ஆகியவற்றின் காரணி கிரகமாக கருதப்படுகிறார். ஒன்பது கிரகங்களில் தளபதியாகக் கருதப்படும் செவ்வாயின் பெயர்ச்சியும் பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. 

செவ்வாய் பிப்ரவரி 5, 2024 அன்று மகர ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். மகரத்தில் செவ்வாய் உச்சம் பெற்றிருப்பதாக கருதப்படுகின்றது. மேலும் சூரியன் ஏற்கனவே மகர ராசியில் உள்ளார். மகரத்தில் செவ்வாயும் சூரியனும் இணைவதால் ஆதித்ய மங்கள யோகம் உருவாகிறது. செவ்வாய் சூரியன் சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் மிகப்பெரிய நற்பலன்கள் கிடைக்கும். இவர்களுக்கு அபரிமிதமான லாபமும் பண வரவும் கிடைக்கும். இவர்களது வாழ்க்கையில் சுப பலன்கள் கிடைக்கும். இந்த ராசிக்காரர்கள் வெற்றியின் உச்சம் தொடுவார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

செவ்வாய் பெயர்ச்சியால் சிறப்பான பலன்களை அனுபவிக்கவுள்ள ராசிகள்

மேஷம் (Aries): 

மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் சூரியன் சேர்க்கையால் உருவாகும் ஆதித்ய மங்கள யோகத்தால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழிலில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். பல வித நல்ல செய்திகள் கிடைக்கும். மாபெரும் வெற்றியை அடைவார்கள். அலுவலகத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய வருமான ஆதாரங்கள் உருவாக்கப்படும். பணம் சம்பாதிக்க பல வழிகள் திறக்கும். 

ரிஷபம் (Taurus): 

ரிஷப ராசிக்காரர்களுக்கு வாழ்க்கைத் துணையுடனான உறவில் இனிமை இருக்கும். பொருளாதார நிலை மேம்படும். பணவரவு அதிகமாகும். எதிர்பாராத இடங்களிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். வணிகத்தில் ஈடுபட்டுள்ள ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். கடின உழைப்பு வெற்றியைத் தரும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வாழ்க்கையில் வசதிகள் பெருகும். கல்வித் துறையில் வெற்றி பெறுவீர்கள். மாணவர்களுக்கு இது நல்ல நேரமாக இருக்கும்.

மேலும் படிக்க | 18 ஆண்டுகளுக்குப் பின் இணையும் சூரியன்- ராகு... ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட்!

துலாம் (Libra): 

துலாம் ராசிக்காரர்களுக்கு இது அதிர்ஷ்டமான காலமாக இருக்கும். பல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் வேலையை மாற்ற விரும்பினால், இது அதற்கு நல்ல நேரமாக இருக்கும். தொழில் துறையில் புதிய உயரங்களை எட்டுவீர்கள். தொழிலதிபர்கள் இந்த காலகட்டத்தின் தொடக்கத்தில் சில தடைகளை சந்திக்க நேரிடும், ஆனால் பின்னர் நல்ல லாபம் கிடைக்கும். அனைத்து வேலைகளும் தடையின்றி முடிக்கப்படும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஒரு புதிய தொழிலைத் தொடங்க விரும்பினாலும் அதற்கு இது ஏற்ற நேரமாக இருக்கும். 

விருச்சிகம் (Scorpio): 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு குடும்ப உறுப்பினர்களுடனான உறவு முன்பை விட சிறப்பாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களின் தேடல் நிறைவேறும். இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தில் அதிக லாபம் ஈட்டுவார்கள். மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த வாழ்க்கை வாழ்வார்கள். அலுவலகத்தில் சில பெரிய பொறுப்புகள் கிடைக்கலாம். மனைவியுடன் உறவு வலுவடையும். உங்கள் நிதி நிலை முன்பை விட வலுவாக இருக்கும்.

மீனம் (Pisces): 

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவதில் வெற்றி பெறுவீர்கள். மீன ராசிக்காரர்களுக்கு உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். ஆரோக்கியம் மேம்படும். குறிப்பாக மாணவர்களுக்கு இந்த நேரம் மிகவும் சிறப்பாக இருக்கும். நிலுவையில் உள்ள பழைய வேலைகள் முடிவடையும். குடும்ப உறுப்பினர்களுடனான உங்கள் உறவு முன்பை விட சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை மேம்படும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Feb 5-11 Horoscope: நாளும் கோளும் சொல்லும் அறிகுறிகளை புரிந்துக் கொண்டால் வெற்றி உங்களுக்கே!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News