இன்று புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்... முழு ராசிபலன் இதோ

Budhan Peyarchi Palangal: கிரகங்களின் இளவரசராக கருதப்படும் புதன் பெயர்ச்சியால் அனைத்து 12 ராசிகளிலும் ஏற்படவுள்ள தாக்கம் பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 9, 2024, 11:57 AM IST
  • கன்னி ராசிக்காரர்களுக்கு உடல் ஆரொக்கியம் மேம்படும்,
  • குடும்ப உறுப்பினர்களிடையே அன்பு அதிகரிக்கும்.
  • குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.
இன்று புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்... முழு ராசிபலன் இதோ title=

Budhan Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களுக்கும் தனித்துவமான முக்கியத்துவம் உள்ளது. கிரகங்கள் மாற்றம் காணும்போது, அந்தந்த கிரகங்களின் தனித்துவமான அம்சங்களில் அனைத்து ராசிக்காரர்களுக்கும் மாற்றங்கள் இருக்கும். கிரகங்களின் ராசி மாற்றங்கள் கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. ராசிகள் தவிர கிரகங்களின் நட்சத்திரங்கள், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பல வித மாற்றங்கள் ஏற்படுகின்றன. 

புத்திசாலித்தனம், அறிவாற்றல், பேச்சாற்றல், நட்பு, அழகு ஆகியவற்றின் காரணி கிரகமான புதன் ஏப்ரல் 9 ஆம் தேதி அதாவது இன்று இரவு, 9:22 மணிக்கு மீன ராசியில் வக்ர நிலையில் பெயர்ச்சி ஆவார். கிரகங்களின் இளவரசன் என்றழைக்கப்படும் புதன் தனது நீச்ச ராசியான மீன ராசியில் இன்று பெயர்ச்சி ஆவார். 

ஒருவரது ஜாதகத்தில் புதன் பலமாக இருந்தால், அவர் புத்திசாலியாகவும், நல்ல பேச்சாற்றல் உள்ளவராகவும், அறிவாற்றல் மிக்கவராகவும் இருக்கிறார். மீன ராசியில் புதனின் வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் பல வித முன்னேற்றங்கள் ஏற்படும். இவர்களது புரிந்துகொள்ளும் மற்றும் சிந்திக்கும் திறன் கணிசமாக மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அனைத்து 12 ராசிகளிலும் புதன் பெயர்ச்சியால் ஏற்படவுள்ள தாக்கம் பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷம் (Aries): மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமான சூழல் இருக்கும். புதன் பெயர்ச்சியால் கலவையான பலன்கள் கிடைக்கும். படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 

ரிஷபம் (Taurus): இந்த ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். வருமானம் குறைவாகவும், செலவுகள் அதிகமாகவும் இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். அலுவலகத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 

மிதுனம் (Gemini): இந்த காலத்தில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். பிரச்சனைகள் அதிகரிக்கலாம். பேச்சில் நிதானம் தேவை.

கடகம் (Cancer): கடக ராசிக்கு மீனத்தில் புதன் சஞ்சாரம் நல்ல செய்திகளை கொண்டு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்பும் அதிகமாகும். பண வரவு அதிகமாவதால் நிதி நிலை மேம்படும். இத்தனை நாட்களாக தடைப்பட்டிருந்த பணிகள் இப்போது வெற்றிகரமான நடந்து முடியும். 

சிம்மம் (Leo): நிதி நெருக்கடிகள் ஏற்படலாம். வேலையில் தடைகள் ஏற்படலாம். எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. 

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளின் வாழ்வில் ஏற்றம், லாபம், வெற்றி

கன்னி (Virgo): கன்னி ராசிக்காரர்களுக்கு உடல் ஆரொக்கியம் மேம்படும், குடும்ப உறுப்பினர்களிடையே அன்பு அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.

துலாம் (Libra): மீன ராசியில் புதன் வக்ர பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். சட்ட சிக்கல்கள் இருந்தால் அவற்றில் உங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைக்கும். இத்தனை நாட்களாக உங்களை வாட்டி வதைத்து வந்த நோய்கள் இப்போது குணமாகும். 

விருச்சிகம் (Scorpio): இந்தக் காலக்கட்டத்தில் உங்களிடம் இருக்கும் கடன் குறைய ஆரம்பிக்கும். இடமாற்றம் ஏற்படலாம். பணி இடத்தில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். 

தனுசு (Sagittarius): தனுசு ராசிக்காரர்கள் சிறு சிக்கல்களை சந்திக்க வாய்ப்புள்ளது. புதன் பெயர்ச்சியால் நிதிச் சிக்கல்கள் ஏற்படும். இடமாற்றம் ஏற்படும் சூழ்நிலை உருவாகும். முதலீடு செய்த பணத்தை எடுப்பதில் சிரமம் ஏற்படலாம்.

மகரம் (Capricorn): மகர ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சியால் பல வித நன்மைகள் நடக்கும். பல நாட்களாக நடக்காமல் நிலுவையில் இருந்த பணிகள் இப்போது வெற்றிகரமாக நடந்துமுடியும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கும்பம் (Aquarius): இந்த காலகட்டத்தில் கும்ப ராசிக்காரர்கள் புதிய சொத்துக்களை வாங்கக்கூடும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மகர ராசிக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு கூடும். புதிய பொறுப்புகள் வழங்கப்படும். 

மீனம் (Pisces): மீன ராசிக்காரர்களுக்கு புதனின் வக்ர பெயர்ச்சி அற்புதமான நற்பலன்களை அள்ளித்தரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்வில் அமைதி கிடைக்கும். பண வரவு அதிகமாகும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: இன்று எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News