Personality by Zodiac Sign: அனைவரையும் வசீகரிக்கும் தன்மை கொண்ட ‘3’ ராசிப் பெண்கள்

சில ராசிக்காரப் பெண்கள் மிகவும் கவர்ச்சிகரமானவர்களாகவும், அனைவரையும் வசீகரிக்கும் திறன் பெற்றவர்களாகவும், இருப்பார்கள் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 23, 2022, 11:24 AM IST
  • முதல் சந்திப்பிலேயே அனைவரையும் வசீகரிக்கும் தன்மை கொண்ட ராசிகள்.
  • எல்லோருடைய மனதையும் எளிதில் வெல்லும் திறன் பெற்றவர்கள்.
  • உறுதியாக செயல்படும் திறன் கொண்டர்வர்கள்.
Personality by Zodiac Sign: அனைவரையும் வசீகரிக்கும் தன்மை கொண்ட ‘3’ ராசிப் பெண்கள்  title=

ஜோதிடத்தில், எதிர்காலம் பற்றி அறிய பல வழிகள் சொல்லப்பட்டுள்ளன. ராசியின் அடிப்படையில் ஒருவரின் இயல்பு மற்றும் எதிர்காலத்தை அறிவது இந்த வழிகளில் ஒன்றாகும். ஒவ்வொரு நபரின் ராசியும் அவர் பிறந்த நேரத்தைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் அந்த நபரின் எதிர்காலம் அறியப்படுகிறது. அதே போன்று ஒருவரது இயல்புகளையும் அறியலாம். ஒவ்வொரு நபரின் ராசியும் வேறுபட்டது. அதன் அடிப்படையில் அவரது இயல்பு, விருப்பு வெறுப்பு போன்றவையும் வேறுபட்டதாக இருக்கும். அந்த வகையில் அனைவரையும் ஈர்க்கும் வசீகரம் கொண்ட 3 ராசிக்கார பெண்களைப் பற்றி இன்று நாம் அறிந்து கொள்ளலாம். 

குறிப்பிட்ட 3 ராசிப்பெண்கள், வசீகரமானவர்கள் என்பதோடு, மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்று. கூறப்படுகிறது. அவரது பேச்சு திறன், புன்னகை ஆகியவை இவர்களுக்கு வெற்றியை கொண்டு வந்து சேர்க்கும். இந்த பெண்களை பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. இந்த அதிர்ஷ்டசாலி பெண்கள் யார் என்று என்பதை தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | சௌபாக்கியத்தை அருளும் ‘சுக்ரன்’ கிரகம் வலுவாக இருக்க சில பரிகாரங்கள்

ரிஷபம்

ரிஷபம் ராசி பெண்கள் மிகவும் கவர்ச்சியாக இருப்பார்கள். அவர்களின் புன்னகையும், பேச்சும் நடையும், ஆளுமையும் மிகவும் சிறப்பானவை. அனைவரும் இவர்களது வலையில் எளிதில் விழுந்து விடுவார்கள். இந்த பெண்கள் எங்கு சென்றாலும், இவர்களுக்கு பெயரும் புகழும் கிடைக்கும். அவர்களின் உறுதியான குணத்தாலும் ஆர்வத்தினாலும் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்கிறார்கள். அவர்கள் பலருடன் ஆலோசித்து முன்கூட்டியே திட்டமிட்டு, பணிகளை செய்கிறார்கள்.

மிதுனம்

மிதுன ராசி பெண்கள் புத்திசாலிகள் மற்றும் வெளிப்படையாக பேசுபவர்களாக இருப்பார்கள். அவர்கள் மனதில் இருப்பதை தெளிவாக பேசுவதில் புத்திசாலியாகவும் இருப்பார்கள். அவருடைய இந்த குணங்களால் அனைவரும் மிகவும் விரும்புவார்கள். இது தவிர, இந்த ராசியைச் சேர்ந்த பெண்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், பேச்சுத் திறனால் மக்களின் மனதை வெல்வார்கள். அவர்களுக்கு தன்னம்பிக்கையும் அதிகம் இருக்கும். மிகுந்த ஆர்வம் மற்றும் ஈடுபாட்டின் காரணமாக, அவர்களை மற்றவர்களிடமிருந்து தனித்து சிறப்பாக தெரிகிறார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசி பெண்கள் மிகவும் அழகாக இருப்பார்கள். அவர்களின் ஒவ்வொரு ஸ்டைலும் மனதை கவரும் வகையில் இருக்கும். முதல் சந்திப்பிலேயே அவர்கள் மீது ஈர்ப்பு வந்து விடும். காதல்-பணம்-கணவன் விஷயத்திலும் இந்தப் பெண்கள் அதிர்ஷ்டசாலிகள். பொதுவாக அவர்கள் சிறந்த வகையில் வாழ்க்கையை நடத்துவார்கள். அவர்கள் மிகவும் அமைதியாக, அதே சமயம் உறுதியாக செயல்படும் திறன் கொண்டர்வர்கள். மற்றவர்களை புரிந்துகொள்ளக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்.

மேலும் படிக்க | ரிஷப ராசிக்குள் நுழையும் சுக்ரன்; பண மழையில் நனையப் போகும் 3 ராசிக்காரர்கள்

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

மேலும் படிக்க | இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஜூன் 14 முதல் ஜொலிக்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News