சனி உதயம்: இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை, சனியின் அருளால் வெற்றிகள் குவியும்

Shani Udai in March: சனி பகவானின் உதயத்தால் சில ராசிக்காரர்கள் அபரிமிதமான அதிர்ஷ்டத்தை அனுபவிக்க உள்ளனர். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 18, 2023, 04:38 PM IST
  • சனிபகவானின் உதயத்துடன் துலாம் ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்டம் துவங்கும்.
  • தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
  • வியாபாரம், அரசியல் சம்பந்தப்பட்டவர்கள் வெற்றி பெறலாம்.
சனி உதயம்: இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை, சனியின் அருளால் வெற்றிகள் குவியும்  title=

கும்பத்தில் சனி பகவானின் உதயம்: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பவர் சனி பகவான். இவர் 30 ஆண்டுகளுக்கு பிறகு கும்ப ராசிக்கு மாறியுள்ளார். ராசி மாறியவுடன் அவர் ஜனவரி இறுதியில் அஸ்தமனமானார். சனியின் அஸ்தமனம் சில ராசிக்காரர்களுக்கு கடுமையான விளைவுகளை அளித்துள்ளது. அவர்கள் மன, உடல் மற்றும் நிதி பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்க வேண்டும். இருப்பினும், இப்போது சனி பகவான் மார்ச் 5, 2023 அன்று இரவு 8.38 மணிக்கு உதயமாகிறார். 

பொதுவாக அனைத்து கிரகங்களின் உதயமும் நல்ல விளைவுகளை அளிக்கும் என கருதப்படுகின்றது. சனி பகவானின் உதயமும் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். சனி பகவானின் உதயத்தால் சில ராசிக்காரர்கள் அபரிமிதமான அதிர்ஷ்டத்தை அனுபவிக்க உள்ளனர். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

மகரம்

மகர ராசியின் இரண்டாம் பாகத்தில் சனிபகவான் உதயமாவார். சனி பகவானின் உதயம் மகர ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும். இந்த காலத்தில் அனைத்து பணிகளையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு வெற்றி கிடைக்கும்.வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உண்டாகும்.

மேலும் படிக்க | மஹாசிவராத்திரி 2023: ஆசைகள் அனைத்தும் நிறைவேற செய்ய வேண்டியவை! 

சிம்மம்

சனிபகவான் உதயமாவது சிம்ம ராசிக்காரர்களுக்கு பண பலன்களை தரும். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். புதிய வேலைகளை தொடங்க இது நல்ல நேரமாக இருக்கும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.

துலாம்

சனிபகவானின் உதயத்துடன் துலாம் ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்டம் துவங்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம், அரசியல் சம்பந்தப்பட்டவர்கள் வெற்றி பெறலாம். கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். 

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சனியின் உதயம் நன்மை தரும். இப்போது இவர்களுக்கு நல்ல காலம் தொடங்கும். பல வழிகளிலும் நன்மை அடைவார்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி வரும். இந்த நேரத்தில் பல நல்ல விஷயங்கள் கைகூடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Rahu Bad Effects: சூரியனையே விழுங்கும் ராகுவால் ஏற்படும் துன்பங்கள்! பரிகாரங்கள் பலன் தரும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News