வக்ரமடைந்த குரு.. இந்த ரசிகளுக்கு டிசம்பர் 31 வரை செழிப்பாக இருக்கும்

Jupiter Transit: வியாழனின் தலைகீழ் நகர்வு டிசம்பர் 31 வரை நீடிக்கும். மேஷத்தில் வக்ர நிலையில் பயணிக்கும் குருவின் தாக்கம் சில ராசிகளுக்கு மிகவும் சிறப்பாக கருதப்படும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 11, 2023, 12:15 PM IST
  • உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • நேர்காணலில் பங்கேற்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.
  • கும்ப ராசி பெண்களுக்கு சில நல்ல செய்திகள் கிடைக்கும்.
வக்ரமடைந்த குரு.. இந்த ரசிகளுக்கு டிசம்பர் 31 வரை செழிப்பாக இருக்கும் title=

டிசம்பர் 31 ஆம் தேதி வரை குரு வக்ர பெயர்ச்சி: கிரகங்கள் அவ்வப்போது தங்களின் ராசிகளை மாற்றிக் கொண்டே இருப்பதால், இதன் தாக்கம் சில ராசிக்காரர்களுக்கு சுப, அசுப பலன்களைத் தரும். ஜோதிடத்தின் படி, வியாழன் மகிழ்ச்சி, செல்வம், புகழ், திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் உள்ளிட்ட அனைத்து வகையான செல்வங்களுக்கும் அதிபதியாக விளங்குகிறார். தற்போது குரு மேஷ ராசியில் வக்ர நிலையில் நகர்ந்து வருகிறார். செப்டம்பர் 4 முதல், குரு வக்ர பெயர்ச்சி டிசம்பர் 31 வரை நீடிக்கும். சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, மேஷத்தில் வக்ர வியாழனின் தாக்கம் சில ராசிகளுக்கு மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. எனவே, எந்தெந்த ராசிக்காரர்களுக்கு வியாழனின் தலைகீழ் நகர்வு டிசம்பர் 31 வரை பலன் அளிக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷம் (Aries Zodiac Sign):
குரு கிரகம் உங்கள் ராசியிலிருந்து ஒன்பது மற்றும் 12 ஆம் வீட்டிற்கு அதிபதியாக இருந்து லக்னத்தில் சஞ்சரிப்பதால், இந்த நேரத்தில் நீங்கள் அதிக நம்பிக்கையுடன் இருப்பீர்கள். அதேபோல் குரு தற்போது மேஷ ராசியில் தான் வக்ர நிலையில் சஞ்சரித்து பயணித்து வருகிறார், இது மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். வியாழனின் அனுகூல தாக்கத்தால் எதிர்பாராத பண ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் செய்யும் உத்தி பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். வருமானம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

மேலும் படிக்க | சனி வக்ர நிவர்த்தி.. தீபாவளி முதல் இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்

மிதுனம் (Gemini Zodiac Sign):
குரு கிரகம் உங்கள் ராசியிலிருந்து ஏழாவது மற்றும் பத்தாம் வீட்டிற்கு அதிபதியாகவும், வருமான வீட்டில் அமர்வதால், இந்த நேரத்தில் உங்கள் வருமானத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு கிடைக்கும். மேலும் மிதுன ராசிக்காரர்களுக்கு குரு வக்ர பெயர்ச்சியால் டிசம்பர் 31ஆம் தேதி வரை சுபமாக கருதப்படுகிறது. மிதுன ராசிக்காரர்களுக்கு வியாழனின் தலைகீழ் சஞ்சாரம் நல்ல அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். வருமானம் உயர வாய்ப்பு உள்ளது. நேர்காணலில் பங்கேற்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். அதே சமயம் வியாபாரத்திலும் லாபம் கிடைக்கும். உங்கள் நிதி நிலை உயரும். நீங்கள் நெட்வொர்க்கிங் வாய்ப்புகளைப் பெறுவீர்கள், இதன் மூலம் புதிய நபர்களைச் சந்திப்பீர்கள்.

கும்பம் (Aquarius Zodiac Sign)
குரு கிரகம் உங்கள் ராசியிலிருந்து பத்தாம் வீட்டில் சஞ்சரித்துள்ளதால்,  இந்த நேரத்தில் நீங்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் பெறலாம். மேலும் கும்ப ராசிக்காரர்களுக்கு வியாழனின் தலைகீழ் இயக்கம் மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அதே சமயம் உத்தியோகத்தில் பதவி உயர்வும் கூடும். வீட்டில் மகிழ்ச்சியும் செல்வச் செழிப்பும் இருக்கும். குழந்தைகளின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். கும்ப ராசி கொண்ட பெண்களுக்கு சில நல்ல செய்திகள் கிடைக்கும். பணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | வக்ர நிவர்த்தி அடையும் சனி... ‘இந்த’ ராசிகளுக்கு நவம்பர் முதல் கொண்டாட்டம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News