தினசரி ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம்?

தினசரி ராசிபலன்: நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? ஆகஸ்ட் 15, 2023க்கான மேஷம், சிம்மம், கன்னி மற்றும் பிற ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 15, 2023, 05:30 AM IST
  • மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.
  • ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.
  • சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.
தினசரி ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம்? title=

அனைத்து இராசி அறிகுறிகளும் ஒருவரின் ஆளுமையை வரையறுக்கும் அவற்றின் சொந்த குணாதிசயங்கள் மற்றும் பண்புகளைக் கொண்டுள்ளன. உங்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி ஏற்கனவே தெரிந்து கொண்டு உங்கள் நாளைத் தொடங்கினால் அது உதவியாக இருக்கும் அல்லவா? இன்று வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்குமா என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

இன்றைய ராசிப்பலன் - 15.08.2023

மேஷம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத் தான் இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் வழியாக நல்லது நடக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.

மேலும் படிக்க | குபேர கடவுளின் நேரடி பார்வையில் கோடீஸ்வரராகப்போகும் ராசிகள்

ரிஷபம்

இன்று உங்களுக்கு காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். உங்கள் பிரச்சினைகள் தீர உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வீட்டின் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். சிலருக்கு தொழில் ரீதியாக வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். நெருங்கியவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் நற்பலன்கள் உண்டாகும். சிக்கனமாக இருப்பது நல்லது.

கடகம்

இன்று குடும்பத்தில் அன்பும் அமைதியும் நிலவும். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். உடல் நிலை சீராகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிட்டும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் அனுகூலமான பலன் கிடைக்கும்.

கன்னி

இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு புதிய இடம் பொருள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன்கள் உண்டாகும்.

துலாம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்ப உறவுகளுக்கு இடையே ஒற்றுமை நிலவும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் ரீதியான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாராத பணவரவு ஏற்படும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு வரவும் செலவும் சமமாகவே இருக்கும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க சற்று தாமதமாகும். வேலை செய்யும் இடங்களில் சக தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து செயல்படுவதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிலும் சிக்கனம் தேவை.

தனுசு

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் வேலைகளில் தடங்கல்கள் ஏற்படும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் சற்று நிதானமாக செயல்படுவது உத்தமம். மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. பணியில் கவனம் தேவை.

மகரம்

இன்று நீங்கள் சுப செலவுகள் செய்ய நேரிடும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு சற்று குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

கும்பம்

இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

மீனம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகைகைக்கு கிடைப்பதில் கால தாமதமா-கும். நீங்கள் எதிலும் நிதானத்துடனும் பொறுமையுடனும் செயல்பட்டால் அனுகூலமான பலன்களை அடையலாம்.

மேலும் படிக்க | Astro Traits: பணத்தை தண்ணீரைப் போல செலவழிக்கும் ‘சில’ ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News