விபரீத ராஜயோகத்தால் போட்டியாளர்களை ஜெயித்து வெற்றி மகுடம் சூடப்போகும் ராசிகள்!

Surya-Shani Yuti 2023: இன்னும் 3 நாட்கள் காத்திருந்தால் போதும், சனியும் சூரியனும் சேர்வதால் உருவாகும் சமசப்த ராஜயோகத்தால் வாழ்க்கையே மாறிவிடும்...  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 14, 2023, 08:17 AM IST
  • விபரீத ராஜயோகத்தில் பலனடையப்போகும் ராசிக்காரர்கள்
  • பணம் வந்து கொட்டும்
  • வருமானம் அதிகரிக்கும்
விபரீத ராஜயோகத்தால் போட்டியாளர்களை ஜெயித்து வெற்றி மகுடம் சூடப்போகும் ராசிகள்!  title=

ஜோதிடத்தில் கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியமானது. கிரகங்களின் இயல்பான மற்றும் வக்ரப் பெயர்சிகளினால், அனைவரின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு பாதிப்பு ஏற்படுகிறது. இன்னும் மூன்றே நாட்களில் (ஆகஸ்ட் 17) சூரிய பகவான் சிம்ம ராசியில் பிரவேசிக்கிறார். தனது சொந்த ராசியில் பிரவேசிக்கும் சூரியன், சனீஸ்வரருடன் நேருக்கு நேர் பார்வையில் வருகிறார். இதனால், சம்சப்தம ராஜயோகம் உருவாகிறது.

இந்த ராஜயோகத்தின் பலன் 12 ராசிகளுக்கும் அதாவது உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் இருக்கும், ஆனால் மூன்று ராசிகளுக்கு சூரியன்- சனியின் நேர்ப்பார்வையால் வாழ்க்கையில் முன்னேற்றம், மன மகிழ்ச்சி, பண வரவு பதவி உயர்வு, ஆரோக்கியம் என நல்ல பலன்கள் எல்லாம் கிடைக்கும்.

இந்த மகா ராஜயோகம், மூன்று ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன?  கிரகங்களும் நட்சத்திரங்களும் அவ்வப்போது தங்கள் நிலைகளை மாற்றும்போது, அதன் விளைவாக கிரகங்கள் ஒன்று கூடுவதும் விலகுவதும், கடிகார சுற்றில் சுற்றுவதும், எதிர் திசையில் சுற்றுவதும் என பல்வேறு மாற்றங்களால், சிலபல யோகங்கள் உருவாகின்றன.

அந்த வகையில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு 4 மகா ராஜயோகங்கள் உருவாகின்றன. புத்தாதித்ய ராஜயோகம், ஷஷ மஹாபுருஷ ராஜயோகம், கேந்திர திரிகோண ராஜயோகம் மற்றும் சுக்கிரன், செவ்வாய், சனி ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் உருவான சம்சப்த ராஜயோகம் ஆகிய நான்கு மகா ராஜயோகங்கள் உருவாக உள்ளன.

இதில், சம்சப்த ராஜயோகம் ஏற்படுத்தும் மாற்றத்தால், மகிழ்ச்சியில் திளைக்கப் போகும் மூன்று அதிர்ஷ்ட ராசிகளுக்குள் நீங்களும் உண்டா? தெரிந்து கொள்ளுங்கள்...

மேலும் படிக்க | செவ்வாயின் அருளால் இனி ‘இந்த’ ராசிகள் கை வைத்த காரியம் எல்லாம் வெற்றி தான்!

ரிஷபம்
 
சம்சப்த ராஜயோகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன், எனவே, உங்கள் வலிமை மற்றும் தைரியம் அதிகரிக்கும். வெளிநாட்டில் இருந்தும் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதாவது ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்.

மாணவர்கள் வெளிநாட்டில் படிக்கச் செல்ல திட்டமிட்டிருந்தால் அது நிறைவேறும். ரிஷப ராசிக்காரர்களுக்கு, சமசப்தம ராஜயோகம் தவிர, ஜாதகத்தில் சூரியனும் சனியும் சேர்ந்திருந்தால், கர்காக்ஷ ராஜயோகமும் உருவாகும். இது, அரசியலில் தீவிரமாக இருப்பவர்களுக்கு சாதகமானதாக இருக்கும். இராணுவம், காவல்துறை அல்லது பொறியியல் துறைyஇல் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். 

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இது கோலாகலமான கொண்டாட்டத்தைக் கொடுக்கும் காலமாக இருக்கப்போகிறது. ஏனென்றால், சமசப்த ராஜயோகம் மட்டுமல்ல, புதாதித்ய ராஜயோகம் சேர்ந்து, திடீரென எங்கிருந்தாவது பணம் வந்து சேரும். உடல்ரீதியான  போகங்களும், மனரீதியிலான திருப்தியும் கொடுக்கும் காலம் என்றால், மகிழ்ச்சி தானே? தொழில் முன்னேற்றம், பணியிடத்தில் மரியாதை என நிம்மதி அதிகரிக்கும் அதேவேளையில், சொத்து, வாகனம் வாங்கும் யோகமும் உண்டு.

உங்களுக்கு போட்டி என்று இருப்பவர்களை ஜெயித்து வெற்றி மகுடம் சூடப்போகும் சிம்மமாக மாறும் அதிர்ஷ்ட காலம் இது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை உச்சத்துக்கு கொண்டு செல்லும் சமசப்த ராஜயோகம் மனதில் உல்லாசத்தை கொண்டு வந்து செர்க்கும். உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் சாதக நிலையில் இருந்தால், பழைய முதலீடுகளில் இருந்து பணம் வந்து கொட்டும். அத்துடன் சேர்ந்து புத்தாதித்ய ராஜயோகம் தொழில்-வியாபாரத்தில் வெற்றியைக் கொடுக்கும். உங்களுடைய நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ராகு தோஷம் நீங்க சரியான நேரத்தில் இந்த பரிகாரம் செய்யுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News