செவ்வாய் பெயர்ச்சி 2022: கிரகங்களின் தளபதி என அழைப்படும் செவ்வாய், அதிக ஆற்றல் பெற்ற கிரகமாகவும் காணப்படுகின்றது. கிரகங்களின் ராசி மாற்றம் அல்லது பெயர்ச்சி ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்நிலையில், அக்டோபர் 16 ஆம் தேதி காலை 6.36 மணிக்கு செவ்வாய் கிரகம் தனது ராசியை மாற்றுகிறது. தற்போது செவ்வாய் ரிஷப ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் நிலையில், அக்டோபர் 16-க்கு பிறகு, செவ்வாய் மிதுன ராசியில் நுழையும். இங்கு செவ்வாய் கிரகம் 15 நாட்களுக்கு நேரான இயக்கத்தில் இருக்கும். பின்னர் அக்டோபர் 30 ஆம் தேதி செவ்வாய் கிரகம் தனது வக்ர நகர்வை தொடங்கும்.
அக்டோபர் மாதத்தில் 5 முக்கிய கிரகங்கள் ராசியை மாற்றப் போகின்றன. அக்டோபர் மாதம் புதன் பெயர்ச்சியைத் தொடர்ந்து, செவ்வாயும் ராசி மாறப் போகிறது. இந்நிலையில், செவ்வாய் பெயர்ச்சியில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்பதை தெரிந்து கொள்வோம்.
ரிஷபம்:
இந்த காலகட்டத்தில் உங்கள் பேச்சு, சில நேரங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால் உங்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த நேரத்தில், இந்த ராசிக்காரர்கள் கடினமாக உழைக்க வேண்டும். இலக்கில் கவனம் செலுத்துங்கள், இல்லையெனில் நீங்கள் இலக்கை அடைய முடியாது. ஆடம்பரத்தைத் தவிர்க்கவும், இல்லையெனில் நிதி பற்றாக்குறை ஏற்படலாம். பணியிடத்தில் மேலதிகாரியுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். எனவே பொறுமையாக இருங்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள்.
மிதுனம்:
லக்ன வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதால் தைரியம் மன உறுதி அதிகரிக்கும். பெயர்ச்சி காலத்தின் போது, அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். அவசர முடிவுகளால் நஷ்டம் ஏற்படும். திருமண வாழ்விலும் சில பிரச்சனைகள் வரலாம். இந்த நேரம் உங்கள் பொறுமையை சோதிக்கும் காலமாக இருக்கும். எனவே பொறுமையை இழக்காதீர்கள்.
மேலும் படிக்க | அக்டோபரில் கிரகங்களின் மிகப்பெரிய ராசி மாற்றம்: யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம்
மேஷம்:
மேஷ ராசியின் அதிபதியாக செவ்வாய் கருதப்படுகிறார். செவ்வாய் சில விஷயங்களில் உங்களுக்கு நல்ல பலன்களைத் தருகிறார். இருப்பினும், இந்த நேரத்தில் சில வழிகளில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். செவ்வாய்ப் பெயர்ச்சி காலத்தில், உங்கள் பெயர் அல்லது மதிப்பு பாதிக்காகமல் இருக்க கவனம் செலுத்த வேண்டும். பணியிடத்தில் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருங்கள், இல்லையெனில் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும்.
கன்னி:
செவ்வாயின் சஞ்சாரத்தால் உங்களின் தொழில் சம்பந்தமான பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். என்றாலும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலையில்லாதவர்கள் கடினமாக முயற்சித்தால் தான் வேலை கிடைக்கும். இருப்பினும், கூட்டாண்மையில் ஒரு தொழிலைத் தொடங்குவதற்கு முன், நிச்சயமாக அனுபவமுள்ளவர்களின் ஆலோசனையைப் பெறுங்கள். உடல் நலத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும் இல்லையெனில் பிரச்சனைகள் வரலாம். அதிக காரமான உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும், இல்லையெனில் உடல்நிலை மோசமாகலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Mars Transit: மூன்றே வாரங்களில் 'இந்த' ராசிகளின் வாழ்க்கையில் பொற்காலம் தொடங்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ