கடன் வாங்கியவர் இறந்துவிட்டால், EMI செலுத்துவது யார்? வங்கிகள் யாரிடமிருந்து வசூலிக்கும்?

Loan Repayment: வங்கியில் கடன் வாங்கியவர் நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு முன்பே இறந்துவிட்டால், அந்த கடனின் பொறுப்பு யாரை போய் சேரும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 6, 2022, 01:13 PM IST
  • கடன் வாங்கியவர் நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு முன்பே இறந்துவிட்டால், கடனை திருப்பி செலுத்துவது யார்?
  • கடனின் பொறுப்பு யாரை போய் சேரும்?
  • இப்படிப்பட்ட சூழ்நிலையில் வங்கிகளின் நடைமுறை என்னவாக இருக்கும்?
கடன் வாங்கியவர் இறந்துவிட்டால், EMI செலுத்துவது யார்? வங்கிகள் யாரிடமிருந்து வசூலிக்கும்? title=

Loan Repayment: நாம் வங்கியிலிருந்து கடன் வாங்கினால், அந்த கடனுக்கான கால அளவுக்குள், நாம் வாங்கிய கடன் தொகை முழுவதையும் வங்கிக்கு திருப்பி செலுத்த வேண்டும் என்பது நமக்கு தெரியும். இல்லையெனில், வங்கியால் முழு அதிகாரத்துடன் கடன் வாங்கியவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் கடன் வாங்கியவர் நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு முன்பே இறந்துவிட்டால், அந்த கடனின் பொறுப்பு யாரை போய் சேரும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இப்படிப்பட்ட சூழ்நிலையில் வங்கிகளின் நடைமுறை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

கடனின் வகை

கடனின் வகை மற்றும் பிணையத்தை பொறுத்து, கடனை யார் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பது தீர்மானிக்கப்படுகிறது. 

வீட்டுக் கடனுக்கான விதி என்ன?

வீட்டுக்கடன் வாங்கியவர் இறந்துவிட்டால், வங்கிகள் கூட்டாக கடன் வாங்கப்பட்டுள்ளதா என்பதை முதலில் சரிபார்க்கிறது. இணை கடன் வாங்கியவர் யாராவது இருக்கிறார்களா என்பதை வங்கி ஆராய்கிறது. அப்படி இருந்தால், கடனை திருப்பிச் செலுத்தும் பொறுப்பு அவர் மீது விழுகிறது. 
இணையாக கடன் வாங்கியவர் இல்லையென்றால் அல்லது அவரால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், வங்கிகள் இறந்தவரின் சட்டப்பூர்வ வாரிசு அல்லது உத்தரவாததாரரைத் தேடுகின்றன. கடன் வாங்கியவர் வீட்டுக் கடன் காப்பீட்டுத் தொகையைப் பெற்றிருந்தால், க்ளைம் தொகையைச் செலுத்தி நிலுவைத் தொகையை செலுத்தலாம். டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கப்பட்டிருந்தால், க்ளைம் தொகையை நாமினியின் கணக்கில் போட்டு சட்டச் செயல்முறை நிறைவு செய்யப்படும். க்ளெயிம் தொகையில் இருந்து மட்டுமே நிலுவைத் தொகையை செலுத்த சட்டப்பூர்வ வாரிசுக்கு உரிமை உண்டு.

மேலும் படிக்க | SBI vs Post Office:எங்கு முதலீடு செய்தால் அதிகப்படியான லாபம் கிடைக்கும்? 

வீட்டுக் கடனில் காப்பீடு இல்லை என்றால், வங்கி தன் பணத்தை யாரிடமிருந்தும் திரும்பப் பெற முடியாது. ஆனால் கடன் வாங்கியவரின் சொத்தை கைப்பற்றி அதை விற்று நிலுவைத் தொகையை வசூலிக்க முழு உரிமை உண்டு.

கார் கடனுக்கான விதிகள் என்ன

கார் கடன் விஷயத்தில், வங்கிகள் குடும்ப உறுப்பினர்களை அணுகுகின்றன. கடன் வாங்கியவருக்கு சட்டப்பூர்வ வாரிசு இருந்து, அவர் காரை வைத்திருக்க விரும்பி, நிலுவைத் தொகையை செலுத்தத் தயாராக இருந்தால், அவர் அதை வைத்து நிலுவைத் தொகையை செலுத்தலாம். இல்லையென்றால், வங்கி காரை பறிமுதல் செய்து விற்று நிலுவைத் தொகையை வசூலிக்கும்.

தனிநபர் கடன் மற்றும் கிரெடிட் கார்டு கடன்களுக்கான விதிகள் என்ன? 

தனிநபர் மற்றும் கிரெடிட் கார்டு கடன்களுக்கு எந்த வகையான பிணையமும் இருப்பது இல்லை. இதன் காரணமாக வங்கிகள் சட்டப்பூர்வ வாரிசுகள் அல்லது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து நிலுவைத் தொகையை திரும்பப் பெற முடியாது. இணை கடன் வாங்குபவர் இருந்தால் அவர் இந்த கடனை திருப்பிச் செலுத்தலாம். இருப்பினும், இதைச் செய்யத் தவறினால், வங்கி அதை NPA ஆக அதாவது செயல்படாத சொத்தாக அறிவிக்க வேண்டும்.

மேலும் படிக்க | இந்த தொகை வரை UPI இல் RuPay கிரெடிட் கார்டு பயன்படுத்துவதற்கு கட்டணம் இல்லை 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News